கோஸ் பாசிப்பருப்பு கேரட் பொரியல்

தேதி: January 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோஸ் - 250 கிராம் (1/4 கிலோ)
கேரட் - 100 கிராம்
பாசிப்பருப்பு (பயத்தம்பருப்பு) - 100 கிராம்
தேங்காய்ப்பூ - ஒரு மூடி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 4


 

பாசிப்பருப்பை ஊறவைக்கவும். கோஸையும், கேரட்டையும் மிகப்பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை வட்டமாகவும், பொடியாகவும் நறுக்கவும்.
கோஸையும், கேரட்டையும் ஒன்றாக உப்பு போட்டு வேக விட்டு தண்ணீரை வடித்து விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி, வடிகட்டிய காய்களை கொட்டி, பாசிப்பருப்பை தண்ணீரை வடித்து விட்டு போட்டு சிறு தீயில் கிளறி மூடவும்.
மறுபடியும் கிளறி, பருப்பு அந்த சூட்டிலே வெந்து விடும். வெந்தவுடன் தேங்காய்ப்பூவை போட்டு கிளறி இறக்கவும்.


இந்த பொரியல் சுவையானது. கல்யாண சமையலில் இந்த பொரியல் கட்டாயம் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சரஸ்வதி மேடம்,
வண்க்கம். உங்களின் இந்த குறிப்பு செய்து பார்த்தேன்.ஆம் சுவையாகத்தான் இருந்தது.
நன்றி

இப்படிக்கு
இந்திரா

indira

செல்வி. இந்திரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த பொரியலின் படம்

<img src="files/pictures/carrot_pasiparuppu.jpg" alt="picture" />

திருமணமாகாத ஒரு பெண் சமையலில் ஆர்வத்துடன் இருப்பது பாராட்டவேண்டியது அவசியம். பொரியல் செய்தது சரிதான். ஆனால் காய்களை மிகப்பொடியானதாக அரிந்து செய்யவேண்டும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை