எனக்கும் உதவி செய்யுங்கள்

நான் கனடாவில் வசிக்கின்றேன் சமையல் எனக்கு புது அனுபவம் , எனக்கு என்ன உதவி வேண்டும் என்றால், இங்கு எல்லோரும் பசுப்பாலையே கறிகளிற்கு பயன்படுத்துகின்றார்கள். நானும் அதையே பாவிக்கின்றேன். என்றாலும் தேங்காய்ப்பாலிற்கு இருக்கும் சுவை கறிகளில் வருவதில்லை , இங்கே கடைகளில் தேங்காய்ப்பால், டின் & பக்கற்றுகளில் கிடைக்கின்றது என்றாலும் அவற்றை பாவிக்கும் போது எனக்கு வயிற்று வலி ஏற்படுகின்றது. அதனால், என் கணவர் அவற்றை பாவிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஆகவே, நான் கொஞ்சம் என்றாலும் சுவையாக சமைப்பதற்கு மாற்று வழி தெரிந்தவர்கள் எனக்கு கொஞ்சம் உதவி செய்யுங்களேன்......... பிளீஸ்................

ஹாய் ரோஜா
பால் சேர்க்காமல் இன்னும் ருசியாக செய்யும்படியான நிறைய சமையல் குறிப்புகள் உள்ளது அதை செய்யுங்களேன்...பிறகு நேரம் கிடைக்கும்பொழுது விஅவரமாக எழுதுகிறேன்

நான் உங்கள் அனைவருடனும் இணைந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
ரோஜா... ஆரம்பத்தில் பசுப்பால் சுவை இருக்காது போகப் போக பழகிவிடும். எனக்கும் அப்படித்தான்.நான் சமையலில் பெரிய திறமைசாலி இல்லை.குறிப்புகள் பார்த்தால் கேட்டால் அப்படியே செய்துவிடுவேன். என் கணவரும் அதை திறம் திறம் எனப் பாராட்டுவார்(அதனால் எனக்குள் ஒரு எண்ணம் நன்றாக சமைக்கிறேன் என்று). வெள்ளைக் கறிகளுக்கு மட்டும்தான் பால் சேர்ப்பேன் தூள் பாவிக்கும் கறிகளுக்கு தண்ணீர் மட்டும்தான் சேர்ப்பது சுவையாக இருக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரோஜா, அதிரா வெல்கம் டு அறுசுவை.

அதிரா உங்களைப்போல்தான் நானும். என் கணவர் என்னை ஒரு பெரிய சமையல் கலா வல்லி என நினைத்துக்கொண்டுள்ளார்:-D

ரோஜா, தேங்காய்ப்பால் இல்லாமல் சமைத்தால் போகப்போக பழகிவிடும்.சத்தாக சமைக்கிறோம் என்ற திருப்தியும் ஏற்படும். இல்லையென்றால் உங்கள் ஊரில் Thai Kitchen என்ற ப்ராண்ட் தேங்காய் பால் கிடைக்குமா? அதில் பாதிக்குமேல் தண்ணீர் கலந்து மிகவும் நீர்க்க பயன்படுத்திப்பாருங்கள்.

எனக்கு உங்கள் ஆலோசனைகளை வழங்கியதற்கு நன்றி தளிகாக்கா உங்கள் விரிவான பதிலிற்கு காத்திருக்கின்றேன்

ரோஜா

ரோஜா தேங்காய் பால் டின்னில் உள்ளது நல்ல இருக்காது, கிரேவிக்கவும்,காரத்திற்காகவும் தான் தேங்காய் பால் தேங்காய் பாலுக்கு பதில் வெங்காயம்,தக்காளி கொஞ்சம் அதிகமா சேர்த்து கொள்ளுங்கள். தேங்காயுக்கு பதில் முந்திரி பொடி பண்ணி வைத்து கொள்ளுங்கள்.
டேஸ்ட் நல்ல இருக்கும்.
காரம் குறைத்து கொள்ளுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலாக்கா , நான் அறுசுவைக்கு புதிது என்றாலும் அறுசுவையை படித்ததிலிருந்து உங்களை எனக்கு நன்றாக தெரியும் , எப்படி சுகமாக இருக்கின்றீங்களா? ,உங்கள் ஆலோசனையை படித்தேன் அவற்றை இனிமேல் செய்து பார்க்கின்றேன் ,

ரோஜா

அண்ணா வின் முட்டையில்லா ஆம்லேட் எங்கே இருக்கிறது ??
ப்ளீஸ் ஹெல்ப் மீ.......

http://www.arusuvai.com/tamil/node/1313

தளிகா:-)

மன்னித்துக் கொள்ளுங்கள். சனி,ஞாயிறு என்னால் அறுசுவைக்கு வரமுடியவில்லை. வானதி எமது துணைவர்கள் எம்மை சமையல் வல்லுனராக நினைப்பதை நாம் உண்மையாக்கிவிட வேண்டும். அதற்குத்தான் அறுசுவையில் இணைந்துவிட்டோமே இனி அசத்தலாம். இங்கு அனைவரும் நலமா? நான் இப்பொழுதுதான் இங்குள்ள்வர்களின் பெயர்களைப் பாடமாக்குகிறேன், எப்பவாவது தவறாக எழுதிவிட்டால் மன்னியுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்புள்ள அருசுவை நெயர்கலெ.
recently i got the mail from admin for my lost password .thats why i could not participate in arusuvai .sorry for that.
சமிபமாக யென் தங்ககைக்கு periods time மார்பகஙகள் வலிக்கிரது இது normala?
1 மார்பகத்தி சின்னதாக skin thicka இர்ருகிரது dr few monthsil சரிஅகிவிடும் யென்கிரார்
advise me pls

மேலும் சில பதிவுகள்