தோழியர் சங்கம்-2

அன்பு அறுசுவை தோழிகள்,மற்றும் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க? தோழியர் சங்கம் இரண்டாம் பகுதியை தொடங்கிவிட்டேன் இனி இங்கும் பேசலாம்.நன்றி.

டியர் மாலதி எப்படி இருக்கீங்க?நல்ல பயனுள்ள பதிவுகளில் நமது சொந்தக் கதையைப் பேசி அதை வீணாக்க வேண்டாம் என்று இங்கு வந்து உங்களைத் தொடர்புக் கொள்கின்றேன். தாமதத்திற்கு மன்னிக்கவும், வார இறுதி நாட்களில் வழக்கத்தைவிட சற்று அதிக வேலையாய் இருப்பேன்,இன்னும் லன்ஞ் பரிமாறவில்லை அதன் இடையில் வந்து பதிலெழுதுக் கொண்டிருக்கின்றேன். திருக்குறளில் பிடித்தது பிடிக்காத்து என்று எதுவுமில்லை வேண்டுமானால் ஞாபகத்தில் இருப்பது என்று வேண்டுமானால் கூறலாம் தானே.இப்போது முதலில் நினைவுக்கு வந்தது

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மாணப் பெரிது.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல்.

இன்னும் நிறைய்ய இருக்கின்றது.நீங்க கொடுத்து வெச்சவங்க பிள்ளைகளுக்கெல்லாம் இதன் பெருமைகளைக் கூறிவருகின்றீர்கள், நம்ம வீட்டில் எல்லாம் தலைக்கீழ்,எனது பேரக்குழந்தைகளைத்தான் நம்பியிருக்கின்றேன் பார்க்கலாம்.மீண்டும் சந்திப்போம்.
மற்ற அன்புள்ளங்களுக்கு பிறகு வந்து பதிலளிக்கின்றேன்.

டியர் சிஸ்டர் வானதி நீங்க எப்படி இருக்கீங்க?நான் நல்ல சுகம் நன்றி.டையப்பாவும் தான்.வீட்டில் என்னை அதிகமாக வேலை வாங்குவதே அவந்தான் எனக்கும் அது பிடித்திருப்பதால் பிரச்சனையில்லை. அறுசுவையில் சிறிது காலமாக பங்கு பெற நாட்டமில்லாமல் தான் இருந்தேன் மற்றபடி அறுசுவையில் ஏற்படுகின்ற சர்வர் பிரச்சனையால் அல்ல. உங்கள் எல்லோருடனும் பேச ஆசைத்தான், ஆனால் தொடர்ச்சியாக அமர்ந்து உரையாடத் தான் நேரம் அமைவதில்லை. இனி முடிந்தவரையில் அடிக்கடி வருகின்றேன் சரியா.சமையலில் உங்கள் அனுபவத்தை பகிந்துக் கொள்ளுங்களேன் பன்னிரெண்டு வருடங்களாயிற்றே சும்மாவா!

ஹலோ சிஸ்டர் ரஸியா எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் சுகமா? வேலைக்கு போகின்றீகளா? அப்போ ரொம்ப பிஸியாக இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.அங்கு குளிர் அதிகம் தானே எப்படி சமாளிக்கின்றீர்கள். இங்கு எங்க வீட்டிற்கு வாருங்கள் கனடாவின் குளிரையும் பார்க்கலாம் அல்லவா எப்போது வருகின்றீர்கள் என்று தெரியப்படுத்தவும்.சும்மாயில்லை நிஜமாகத்தாம்பா.

அன்பு மனோஹரிக்கா,
நலமாக இருக்கிரீர்கள் என்று தெரிந்து கொண்டேன்..பொன்னு நல்லா இருக்கா...தூங்கராள்ன்னு இன்கே கை வெச்சது தான் தோ எழுந்து வந்து மடீல உக்காந்தாச்சு..பிறகு வருகிறேன்

anbudanஹாய் மனோகரி மேடம்,

எப்படி இருக்கீங்க, நலமே.நிறைய வேலைகள் உங்களுக்கு என நினைக்கிறேன்.மீண்டும் அருசுவை
சகோதரிகள் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்..

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

ஹலோ மனோகரி மேடம்,
எப்படி இருக்கிங்க? உங்க பதிவை எல்லாம் நான் படிச்சு இருக்கேன். கொஞ்ச நாள் இடைவெளி விட்டு மறுபடியும் உங்க பதிவை பார்க்க சந்தோசமா இருக்கு. இனி தொடரட்டும் உங்கள் சேவை.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

மனோகரி.... உங்கள் மொழிப்பிரவாகம் ரொம்ப நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு தாய்மொழி நன்றாக தெரிந்திருக்கவேண்டும். எனகென்னவோ மற்ற மொழிகளில் கல்வி கற்றவர்களை விட தாய்மொழியில் கற்றவர்கள் இன்னும் நல்ல ப்ரிலியன்ட்-ஆக இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. இன்றைய என்னுடைய திருக்குறள்:
ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

மனோகரி மேடம் கலையிலிருந்து இந்த குறளை தான் நினைத்து கொண்டிருந்தேன் முதல் வரி டைவுட்டாக இருந்தது அதனால் எழுதலதுங்க போறேன் நாளைக்கு பேசுகிறேன்.
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.
இதன் முதல் வரி என்ன
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா.....இதோ உங்கள் திருக்குறள்:
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

டியர் தளிகா எப்படி இருக்கீங்க?குழந்தைக்கு எனது அன்பான ஆசீர். உங்க குட்டி ராணியால் உங்களுக்கு நன்கு பொழுது போகின்றது என்று நினைக்கின்றேன்.இன்னொரு குழந்தைக்கு திட்டம் வைத்திருக்கின்றீர்களா? இருந்தால் காலந்தாழ்த்தாமல் உடனுக்குடன் செயல்படுத்தி விடுங்கள்.ஏன் கூறுகின்றேன் என்றால் முதல் குழந்தை சிறியதாக இருக்கும் பொழுது இரண்டாவதை மிக சுலபமாக வளர்க்க முடியும். இது எனது சொந்த அனுபவம்.

மேலும் சில பதிவுகள்