சிம்பிள் தக்காளி மசாலா

தேதி: January 20, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - 4,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 5,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 தேக்கரண்டி.


 

தக்காளியை முழுசாக தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, அரிசி மாவை 1/4 தம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி, கொதிக்க விட்டு இறக்கவும்.


இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்