தக்காளி சட்னி - 2

தேதி: January 20, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - 4,
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 5,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி.


 

தக்காளியை முழுசாக தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
வெந்த தக்காளியுடன் சாம்பார் பொடி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.


இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஒரு மாறுதலான, அருமையான சட்னி.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி மேடம்,
இன்று தோசைக்கு தங்களின் தக்காளி சட்னி - 2 செய்தேன். செய்வதற்கு மிக மிக ஈசியாகவும், சாப்பிடுவற்கு நன்கு சுவையாகவும் இருந்தது நன்றி.

இப்படிக்கு
இந்திரா

indira

செல்வி. இந்திரா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த தக்காளி சட்னியின் படம்

<img src="files/pictures/tomato_chuttney2.jpg" alt="image" />

ஹாய் இந்திரா,
ரொம்ப அழகா சமைச்சு, அத விட அழகா படமெடுத்து அனுப்பியிருக்கே. உனக்கும், இணைத்த அட்மினுக்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உன்னோட தக்காளி சட்னி,எலுமிச்சை சாதம் போட்டோ சூப்பர்.என்னோடதை அனுப்ப முடியலை,எரர் வருது,பார்ப்போம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.