தக்காளி சட்னி - 3

தேதி: January 20, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - 4,
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 5,
தனியா - 2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 5,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 தேக்கரண்டி.


 

தக்காளியை முழுசாக தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
1 ஸ்பூன் எண்ணெயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய் துருவல், பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
வெந்த தக்காளியுடன் வறுத்தவற்றை சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.


சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஒரு அருமையான சட்னி.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் மேடம்,
இன்று தோசைக்கு தக்காளி சட்னி-3 செய்தேன். சுவை மிக மிக அருமை.

இப்படிக்கு
இந்திரா

indira

ஹாய் இந்திரா,
பாராட்டுக்கு நன்றி. ஆனா 2 வேறே, 3 வேறே, தக்காளி மட்டும் 1.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் மேடம்,
ஆக்சுவலா 3 ம், 2 மாதிரியே டேஸ்டாவும், வித்யாசமாகவும், செய்வதற்கும் ஈசியாகவும் இருந்தது என்று தான் பதிவு பொட நினைத்தேன். ஆனா ஷர்ட் மெசெஸ் வேற மாதிரி ஆகிடுச்சு, சாரி மேடம்.

ஆமாம், இரண்டும் ஒன்றுக்கொன்று விட்டு கொடுப்பதை போல் தெரியவில்லை டேஸ்ட்டில். இதற்கும் படம் அனுப்பியுள்ளேன்.

இப்படிக்கு,
இந்திரா

indira

ஹாய் இந்திரா,
நீ சொல்ல வந்தது எனக்கு புரிந்தது, சாரியெல்லாம் வேண்டாம், சும்மா கலாய்க்கறதுக்குத் தான் அப்படி சொன்னேன் :-)
சமைச்சதோட அல்லாமல் படமும் எடுத்ததற்கு விசேஷமான பாராட்டு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி மேடம் நேற்று காலை ஆனியன் தோசைக்கு தக்காளி சட்னி - 3 செய்து சாப்பிடோம். செய்ரதுக்கு ஈசியா இருந்தது..டேஸ்ட் சுப்ப்ர்...நன்றி

அன்புடன்
ஷராபுபதி

அன்பு ஷரா,
பாராட்டுக்கு ரொம்ப நன்றி. ஆனியன் தோசைக்கு நல்ல காம்பினேஷன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி. இந்திரா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த தக்காளி சட்னியின் படம்

<img src="files/pictures/tomato_chutney3.jpg" alt="picture" />

ஆஹா, ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு. நம்ம குறிப்பை இப்படி படத்தில் பார்க்கிற சந்தோஷமே தனி தான்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம்
தக்காளி சட்னி சூப்பரா இருந்தது