ரவா தோசை

தேதி: January 21, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தோசை மாவு - 2 கப்
ரவை - 1 கப்
மைதா - 1/4 கப்
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
காரட் துருவியது - 1/4 கப்
கருவேர்ப்பிலை,கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது ) - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது )
நல்லெண்ணெய் - தோசை சுடுவதற்கு


 

ரவையையும், மைதாவைவையும் நீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்
அதை தோசை மாவுடன் கலக்கவும்.
அந்த கலவையில் வெங்காயம்,பச்சை மிளகாய்,காரட்,மிளகு சீரகத்தூள்,கருவேர்ப்பிலை,கொத்தமல்லி கலக்கவும்.
ஒரு ஸ்பூன் நல்லெண்ணையை மாவில் கலக்க வேண்டும்.
மாவு நீர்க்க இருக்க வேண்டும் (1 பங்கு மாவிற்கு 4 பங்கு நீர்)
தோசைக்கல் காய்ந்ததும் மாவை ஓரத்தில் இருந்து விட வேண்டும்.
எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்க வேண்டும்.


தேங்காய் சட்னியும் ,பொடியும் இதற்கு சரியான காம்பினேசன் .
தோசை மாவு கொஞ்சமாக இருக்கும் பொழுது இதை செய்து திடீர் விருந்தினரை சமாளிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்