ஒருவர் ஒரு குறள் - தினம் பல குறள் :-)

அனைவருக்கும் வணக்கம் :-)

இந்த பகுதியில் குறள் எழுதி குரல் கொடுங்கப்பா எல்லோரும் :-)

முதல் குறள்:-)

கடவுள் வாழ்த்து

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே ஒழுகு."

பொருள்:
=======
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுப்போல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டுள்ளது.

English:
=======
"A, as its first of letters, every speech maintains; The PRIMAL DIETY
is First through all the world's domains."

Meaning :
=======
As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

ப்ரியமுடன்
உங்கள்
ஹர்ஷ் :-)

குறள்: 296
===== ===
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பொருள்:
=======
ஒருவன் பொய்யாமை என்னும் அறத்தைப் பொய்யாகாமல் செய்து வந்தால் அவன் பிற அறங்களைக் கூடச் செய்ய வேண்டியதில்லை.

English:
=======
No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.

Meaning:
=======
There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

யாகாவாராயினும் நா காக்கா காவாக்கால்
சோகாப்பர் சொல்லிலுக்க பட்டு

எனக்கு தெரிந்தது நிறைய இருக்கு ஒரு ஒரு லைன் தான் ஞாபகம் வருது
ஜலீலா

Jaleelakamal

தொட்டனைத்தூரும் மணற் கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூரும் அறிவு.

பீலிபெய் சாக்காடும் அச்சிரும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன்
நற்றார் தொழா ரெனின்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

இன்னும் தொடரும்..
என்னிடம் திருக்குறள் புத்தகம் இல்லை..
இந்த தடவை இந்தியா செல்லும் போது அர்த்தத்துடன் உள்ள புத்தகம் வாங்கிவரவேண்டும்....

திருக்குறள்
சொல்லுதல் யாருக்கும் அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

ஜலீலா

Jaleelakamal

வாய்மை எனப்படுவது.......என்று தொடங்கும் குறளில்தான் எத்தனை உண்மை, தத்துவம், வாழ்க்கை எல்ல்ல்லாம் இருக்கிறது. அது சரி இந்த ' த்ரட்' - எங்கே தளிகாவையே காணோம்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்

என்று அவர் குழந்தையோடு கொஞ்சிக்கொண்டு இருக்கிறாரா

உலகத்தோடு ஒட்டவொழுகல்பல கற்றும்
கல்லார் அறிவிலாதார்

கொஞ்சலும் கெஞ்சலுமாக நேரம் கடக்கிரது மாலதிக்கா..அவளுக்கும் எனக்கும் கொஞ்சம் ஜலதோஷம் அதனால் அவளுடன் இருந்து எதையாவது குடிக்க வைத்தும் விளையாட வைத்தும் அசதியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தெரிந்து தெளிதல் :

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

Good and evil in man weigh well
Judge him by virtues which prevail.

பதவுரை:

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் - குணத்தை ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை ஆராய்ந்து அதிகமானது எதுவோ அதைக்கொள்ள வேண்டும்.

பொழிப்புரை:

ஒருவனுடைய நல்ல குணத்தை ஆராய்ந்து அவனுடைய கெட்ட குணத்தையும் ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை அறிந்து எது அதிகமோ அதைக்கொண்டு (தீர்மானிக்க வேண்டும்).

விளக்கம்:

எல்லாருக்கும் நல்ல குணமும் உண்டு, கெட்ட குணமும் உண்டு. நல்ல குணம் அதிகமாக உள்ளவனை நல்லவனாகவும் கெட்ட குணம் அதிகமாக உள்ளவனை கெட்டவனாகவும் கொள்ள வேண்டும். 'குணம்' என்பது 'நல்ல குணம்' 'குற்றம்' என்பது இங்கே 'தீய குணம்'.

இதன் அர்த்தங்கள் கோபம் இருக்கிற இடத்துல குணமும் இருக்கும், சிரிக்கிற கண்கள் தான் முறைக்கவும் செய்யும், அடிக்கற கைகள் தான் அணைக்கவும் செய்யும். எந்த மனுசனக்குள்ளேயும் குணமும் உண்டு , குறையும் உண்டு. குணம் 'A' செக்ஷன் என்றால், குறை 'B' செக்ஷன். ஒருத்தரை ஒரு வேலைக்காக தேர்ந்தெடுக்கறதுக்கு முன்னாலே அவனுடைய நல்ல குணங்களை 'A' செக்ஷன்லயும் குறைகளை 'B' செக்ஷன் லயும் லிஸ்ட் அவுட் செய்து பார்க்கனும். நிறைய நல்ல குணங்கள் இருந்து கம்மியா குறைகள் இருந்தால் அவரை நாம ஒ.கே. பன்னலாம். இந்த காலத்துக்கும் தேவையான ஒரு பெர்ஷனல் மேனேஜ்மெண்ட் உள்ளேயே வள்ளுவர் என்ன அழகாக சொல்லியிருக்கிறார்.

உபயம்:
http://spbkural.blogspot.com/2007/08/blog-post_21.html

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்பிலார் எல்லாம் தமக்குரியார் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

6ஆம் தரம் படிக்கும் போது வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத சமயம் சத்தம் செய்தோம். பணிஸ்மன்ராக 100 குறள் மனப்பாடம் பண்ண சொன்னார்கள். இப்ப பத்துக் குறள் தன்னும் சொல்லுவனோ தெரியல.
Abinavi

மேலும் சில பதிவுகள்