பேபிகார்ன் மசாலா

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பேபிகார்ன் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் தக்காளி போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பேபிகார்ன் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளறி, சிறிது தண்ணீர் தெளித்து சிறு தீயில் மூடி வேகவிடவும். வெந்தவுடன் சுருள கிளறி இறக்கவும்.


சப்பாத்தி, ப்ரெட்டுக்கு தொட்டுகொள்ள வேண்டுமென்றால் சிறிது கிரேவியாக இருக்கும் போதே இறக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பேபிகார்ன் மசாலா செய்தேன் சுவை பிரமாதம்.சாதத்துடன் சாப்பிட்டேன்.மிக்க நன்றி சரஸ்வதி அக்கா

சுரேஜினி