400 சமையல் குறிப்புகளைக் கொடுத்த திருமதி.செந்தமிழ் செல்வி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

செல்வி அக்கா உங்கள் வேலைகளுக்கிடையிலேயும் 400 குறிப்புகளுக்கு மேல் எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் நன்றியும். பல வித்தியாசமான குறிப்புகள் கொடுக்கும் உங்களுடைய சேவை இந்த அறுசுவைக்கு தேவை என்று கூறி மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன். நன்றி

செல்ல்விமா,

உங்களோட குறிப்புகள் அனைத்தும், சுலபமா வீட்டுல செய்யற குறிப்புகள், செய்யமுடியற குறிப்புகள் :-)

பல குறிப்புகள், அம்மா சமையலயும், பாட்டி சமையலையும் நியாபகப்படுத்தற மாதிரியே இருக்கறது மிகப்பெரிய ஸ்பெஷல் :-) இதனால எப்பவுமோ, இது எப்படி வருமோன்னு பயந்து சமைக்கவேண்டிய அவசியமே வரர்தில்ல, உங்க குறிப்ப பாத்து சமைக்கும் போது :-)

உங்க குறிப்புல என்னைய கவர்ந்த விஷயம் இன்னொன்னு, எந்த புக் புரட்டினாலும் கிடைக்காத, வித்தியாசமான குறிபுகள் :-)

மேலும் மேலும் பல குறிப்புகள் தந்து, எங்களுக்கெல்லாம் இன்னும் பல அறுசுவை தர வேண்டி வாழ்த்துகிறேன் :-) வாழ்த்துக்கள் செல்விமா :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

Congrats Mam,My wishes you to Achive more.
Thanks,
Sujatha.

வேலையின் மத்தியிலும் நான்காவது சதம் அடித்தற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல சதம் அடிக்க வாழ்த்துக்கள். உங்கள் சேவை அறுசுவைக்கு தேவை.

ஜானகி

அன்பு செல்வி!

நிறைய வேலைகள், பிரச்சினைகள், உடல் நலக்குறைவு-இத்தனைக்கும் மத்தியில்-400 சமையல் குறிப்புகள் கொடுத்து முடித்திருக்கும் உங்களின் சுறுசுறுப்பிற்கு என் வாழ்த்துக்கள்!

403 குறிப்புகளா!!! அசத்துங்க அசத்துங்க. ஆத்துக்காரரை ரொம்பத்தான் வேலை வாங்குறீங்கன்னு புரியுது :- ) வாழ்த்துக்கள்.

ஒரு பழமொழி - மலை முழுங்கி மகாதேவனுக்கு கதவு ஒரு அப்பளம்.
அது போல் உங்களுக்கு 400 ஒரு ஜுஜுபி.
இன்னும் பல புதுமை சமையல் குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

வாழ்த்துக்கள் செல்வி மேடம்,
எல்லாம் அருமை , ரொம்ப ஜோர், அதுவும் படத்துடன் சூப்பர், பாரம்பரிய உணவுகளும் மிக அருமை. மேலும் பல குறிப்புகள் கொடுக்கவும், யோசனைகள் தரவும் வாழ்த்துகள்.வேலைக்கு போய் கொண்டே கொடுப்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு நல்லாவே தெரியும்.
ஜலீலா

Jaleelakamal

வேலையின் மத்தியிலும் பல செஞ்சுரி போடும் அன்பு செல்வி அக்காவிற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்பு வானு,
உன்னுடைய வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றி. கண்டிப்பாக எனக்கு தெரிந்த அனைத்து குறிப்புகளையும் பகிர்ந்து கொள்வேன். நேரம் தான் எனக்கு ப்ரச்னையே :-) மீண்டும் நன்றிகள் பல.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் ஹர்ஷ்,
வீட்டில செய்யற, செய்துக்கிட்டிருக்கிற குறிப்ப தான் நான் எப்பவும் கொடுக்கறது. அதனால் தான் நிறைய குறிப்புகள் சுலபமா இருக்கு.
எங்கம்மாவே பெரிய எக்ஸ்பர்ட். பெரிய விருந்துக்குக் கூட ஒரு தனியாளா இருந்து செய்வாங்க, இத்தனைக்கும் அவங்களும் வேலைக்கு போனவங்க தான். அவங்ககிட்டயிருந்தும், எங்க பாட்டி (அப்பம்மா) கிட்டயிருந்தும் பார்த்து (பார்த்து !) தெரிஞ்சுகிட்டது தான் இதெல்லாம்.
சில சமயம் சில குறிப்புகள் சொதப்பும், அதுக்காக விட மாட்டேன், திரும்ப அதே குறிப்ப செய்து சரியா வரும் வரை விட மாட்டேன், என்ன வீட்டில இருக்கறவங்க தான் பாவம் :-)
வெளில எங்காவது போய் சாப்பிட்டாலும், அந்த ரெசிபிய தெரிஞ்சிக்காமா விட மாட்டேன், அப்டி அவங்க சொல்லலேன்னாலும் நானே முயற்சி பண்ணி கண்டுபிடிச்சிடுவேன். என் குறிப்புகளின் ரகசியம் இதுதான்.
உன்னுடைய வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றி. கண்டிப்பாக எனக்கு தெரிந்த அனைத்து குறிப்புகளையும் நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்