குழந்தைக்கு சளி தொந்தருவு

அனைவருக்கும் வணக்கம் ..
என் ஒரு (13 months )வயது மகன் ..சளி தொல்லையால் மிகவும் கஷ்ட படுகிறான் ..
அவனை மருத்துவரிடம் அழைத்து சென்றாலும் அவனுக்கு tylenol தான் கொடுக்கிறார்கள் .. சளி கு ஐந்து வேலை மருந்து .. அதே மருந்து தான் எப்பவும் ..
என் தோழி இன் குழந்தைக்கும் இப்படி தான் ..
ரொம்ப கவலையாக உள்ளது .. சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளும் நிலை US ல
முடியாதா ??
அப்படியே வந்தாலும் ஒரு வாரத்தில் சரியாவதில்லை ..
சரி ஆகிவிடும் என்று நம்பும் போது ..அடுத்த running nose ஸ்டார்ட் ஆகுது ..

இதற்கு சரியான அணுகுமுறை பற்றி சொல்லுங்களேன் ..

எப்பவும் சளி உடன் இருப்பது சரியா ?? எதிர்ப்பு சக்தி வேண்டும் என்பதால் தான் இங்கெல்லாம் மருந்து தர மாட்டார்கள் என்பது சரியா ???

சாபிடுவதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே வருகிறது ..
அது போல் அடிக்கடி இந்த மலச்சிக்கல் வருகிறது ..அதற்கும் ஒரு தீர்வு தாருங்களேன் ..

சில நேரங்களில் என்ன நாடு இது .. இந்தியா போய்விடலாம் போல் இருக்கிறது அவன் எடை விட அவன் அணிந்திருக்கும் ஆடை எடை அதிகம் வேண்டும் .. sweater,scarf,gloves.socks kull அவனை தேட வேண்டும் ..

உங்கள் அனைவரின் ஆலோசனை க்காகவும் காத்திருக்கிறேன் ..

மேலும் ..இதில் குழந்தை வளர்ச்சி பற்றி உம் பேசுவோம் .. மற்றவை தவிர்க்க ..
pls pls pls..

பாலம்மு இப்போதைக்கு இங்கும் அதே அவஸ்தை தான்..ஆனால் அடிக்கடி சளிப் பிடிக்கும் குழந்தைக்கு தலைக்கு எண்ணை தேய்க்க வேண்டாம்...சாதா உணவுகள் கொடுப்பதை விட சிக்கன் சூப் கொடுங்கள் அடிக்கடி.
இனி மற்றவை பிறகு

thalika எப்படி சமாளிகிரிங்க ??
அவனக்கு ஜுரம் குட விட்டு விட்டு வருது ..
போத குறைக்கு இங்க தூறல் போட்டுகிட்டே இருக்கு ..
சிக்கன் சூப் எப்படி அவனக்கு தருவது ..அதை ஒரு வயது குழந்தைக்கு தயாரிக்கும் முறை சொல்லுங்களேன் ... அவன் பால் பாட்டில் தரலாமா ??

பாலம்மு கவலை வேன்டாம்

நான் சொல்கிறேன் என்னசெய்யனும் என்று, கொஞ்சம் பிஸி இப்ப டைப்பண்ணி அனுப்புகிறேன்
ஜலீலா

Jaleelakamal

1. முதலில் சிக்கன் (அ) மட்டன் சூப்

முன்று துண்டு ஏதாவது எடுத்து கொள்ளுங்கள்
இது முதல் வகை சூப் இதை டெய்லி கொடுத்தாலே சளிக்கு கேட்கும்.
அதில் சீரக தூள் கால் தேக்கரண்டி, முழு மிளகு ஆறு, தனியாத்தூள் அரை தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது கால் தேக்கரண்டி முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு சொட்டு நெய் போட்டு குகரி மிதமான தீயில் நல்ல ஆறேழு விசில் விட்டு இரக்கி அதில் தேங்காய் பால் கால் கப் ஊற்றி கொதிக்கவிட்டு வடிகட்டி அதை குடிக்க கொடுங்கள்.
குடிக்கவில்லை என்றால் பாலாஅடையில் முன்று சங்கு அளவு ஊற்றுங்கள்
இல்லை சாதத்தில் பிசைந்து கொடுங்கள்.
இந்த முழு மிளகு காரமா இருந்தா அடுத்த முறை இரண்டு குறைத்து கொள்ளுங்கள்.

2. பிறகு பாலில் நல்ல கய்ச்சி சூடான பால் ஒரு ஸ்பூனில் இரண்டு இதழ் சாப்ரான் (குங்குமபூ) நல்ல் ஊறவைத்ஹு இழத்து பாலில் சேர்த்து சர்க்கரை கலந்து வடிகட்டி கொடுங்கள். சாப்ரான் பாலிலே போட்டு நல்ல கால் மணிநேரம் குறைந்த தீயில் கொதிக்கவைத்தாலும் சரி.
ஜலீலா

Jaleelakamal

பாலம்மு

3. அடுத்து இஞ்சி சாறு எடுத்து நிறைய தேன் களந்துரொம்ப கொடுக்க வேண்டாம், கால் ஸ்பூன் முன்று வேலக்கு கொடுங்க, அடிக்கடி சளி பிடிப்பதால் இதை தொடர்ந்து முன்று நட்களுக்கு செய்து விட்டு இனி வாரம் ஒரு முறை கொடுங்கள்.
சூப் முடிந்தால் டெய்லி, இல்லை ஒரு நாள் விட்டு ஒரு நாள்.

4. சிக்கன் சூப் மற்றொரு முறை.

சிக்கன் முன்று துண்டு, மிளகு தூள் கால் தேக்கரண்டி,உப்பு, இஞ்சி மட்டு துருவியது ஒரு தேக்கரண்டி போட்டு முன்று டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் மிதமான தீயில் ஆறேழு விசில் விட்டு இரக்கவும், பிறகு வடிகட்டி தண்ணீரை தணியாக வைக்கவும், அதி உள்ள சிக்கனை மட்டும் பிரித்தெடுத்து முடிந்தால் கையால் நல்ல உதிர்து போடுங்கள் உங்கள் பையன் கடித்து சப்பிடுவான் என்றால் இல்லை மிக்சியில் ஒரு திருப்பு திருப்பி போடவும்.
இப்போது ஒரு சட்டியில் ஒரு மேசை கரண்டி பட்டர் போட்டு ஒரு தேக்கரண்டி மைதாவை தூவி கிளரவும் கட்டி பிட்க்காமல் கிளறி அதில் அரை டம்ளர் பால் சேர்க்கவும்.
பிறகு வடித்த சிக்கன் தண்ணீர், பொடித்த சிக்கன், உப்பு தேவைக்கு போட்டு நல்ல அடி பிடிக்காமல் கிளறவும்.
நல்ல கொதித்ததும், ஒரு தேகரண்டி கார்ன் பிளார் மாவு கரைத்து ஊற்றி , முட்டை பாதி முட்டை போட்டால் போதும், முட்டையை நல்ல நுரை பொங்க அடித்து ஒரு கையால் ஊற்றி கொண்டே மறு கையால் கிளறவும்.
இவ்வளவு ஸ்ரெயின் எடுத்து செய்வதால் இரண்டு முன்று நாளைக்கு கொடுத்து முடிங்கள், அன்றே குடித்து காலி பன்ண்ணாலும் பரவாயில்லை.
எல்லாம் ரெடியாக இருந்தால் நிமிஷத்தில் ரெடியாகிவிடும்.

இந்த நான்கும் செய்து பாருங்கள்.

இதே மாதிரி வெஜ் சூப்பும் செய்யலாம்.

5. பிறகு தூங்கும் போது முக்குக்கு மேல் லேசா விக்ஸ் தடவுங்கள்.
காலில் கொஞ்சம் விக்ஸ் தடவி சாக்ஸ் போட்டு விடுங்கள்.
கைய கால் கெட்டியா பிடித்து கொண்டு ஒரு டம்ளரி கொதிக்கிற வெண்ணீர் வைத்து கொஞ்சம விக்ஸ் போட்டு மூக்கு கிட்ட காண்பித்து ஆவி பிடிக்க வையுங்கள்.
சளி சமயத்தில் வாய்க்கு நல்ல இருக்காது சாப்பாடு ஏற்காது ஆகையால் கம்பல் பண்ண வேண்டாம் சாதம் சாப்பிடவில்லையே என்று கவலை வேண்டாம் சாதத்தை திணித்தால் வாந்தி தான் வரும்.
எதா இருட்ந்தாலும் கால் கால் கப்பாக கொடுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா நீங்கள் கூறியது போல் நாளை செய்து அவனக்கு தருகிறேன் ..
அதை வடி கட்டி பால் பாட்டில் இல் தரலாமா ??
மேலும் அவன் motion போகும் போது அழுகிறான் .. அதற்கு ஒரு தீர்வு ..
மிகவும் கட்டியாக வருகிறது ..
உங்கள் ஆலோசனை படி செய்து அவன் அதை எவ்வாறு எடுத்து கொண்டான் என்பதை நாளை தெரிவிக்கிறேன் ..
தூங்கும் நேரம் அல்லவா.. நாளை சிந்திப்போம்

பாலம்மு

இந்த இஞ்சி சாறு, சாப்ரான் பால் குடித்தாலே வயறு கலக்கும். ஒன்று இதேலாம் சாப்பிடுவதால் ஒன்று வாமிட் வரும் , இல்லை மோஷம் பிரியா போகும் உடனே அதுக்கு மருந்ஹ்டு கொடுக்க வேண்டாம், நாலந்து தடவை போகட்டும் சள் வெளியாகும்.

மோஷன் பிராப்ளத்திற்கு வயற்றில் விளெக்கஎண்ணை, (அ) ஏதாவது எண்ணை நல தடவி விட்டு, சூடா வெண்ணீர் கொடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

1. காய்ந்த திராட்சை, சோம்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடம் கழித்து கசக்கி வடிகட்டி குழந்தைக்குக் கொடுத்தால் கான்ஸ்டிபேஷன் வராது.
2. சளிக்கு குழந்தை தூங்கும்போது தேங்காய் எண்ணெயை லேசாக சுட வைத்து சிறிது கட்டிக் கற்பூரத்தைப்போட்டு முதுகு, மார்பில் தடவி விட்டு ஒரு சின்ன தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு அதன் சுடரில் கையைக் காண்பித்து (நம் கை பொறுக்கும் சூடில்) குழந்தையில் மார்பு, முதுகில் ஒத்தி எடுக்கவும்.
3. கவலைப்பட்டு உங்கள் உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் வளரும்வரை கஷ்டம்தான். தைரியமாக இருங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

பாலம்மு நீங்களும் ரொம்ப கவலையில் இருக்கீர்கள் போல ...கவலப் படாதம்மா சரியாயிடும்...எல்லாம் அந்த ஊர்னாலன்னு நாம நினைக்கும்பொழுது நமக்கு எரிச்சல் தான் வரும் பொருமையாஇ கைய்யாள நம்பிக்கை இருக்காது...நம் ஊரில் கூட வருடம் முழுக்கசளி கட்டி மூச்சு விட முடியாத குழந்தைகள் இருக்கிரார்கள்....நம்மூரில் கொசு வீட்டுக்கு ள் வந்தா கூட கவலை தான்.
ஒரு சில குழந்தைகளுக்கு அடிக்கடி புடிச்சுக்கும்..அதனால் உடல் தேரவே தேராது..சளிக்கான கிருமியை எதிர்த்து போராடும் எதிர்ப்பு சக்தி பிள்ளைகள் கொஞ்சம் வளரும்பொழு தான் வரும்..
ரீமாவுக்கு 1 வயசெல்லாம் இருக்கும்பொழுது சிக்கன் சூப்,ரைஸ் கஞ்சி,வெஜிடபில் சூப் எல்லாம் க்லாசில் ஸ்பூன் போட்டு தான் கொடுப்பேன்....பாட்டிலில் கூட கொடுக்கலாம்..வேண்டாம் என்பார்கள் ஆனால் உடம்பு சரியில்லாதப்ப எப்படியாவது குடிக்க வைப்பதை மட்டும் யோசித்தால் போதும்..பாட்டிலிலேயே கொடுங்க...சிக்கன் இருக்கரதிலேயே சின்ன சிக்கன் வாங்குங்க..
ஜலீலாக்கா சொன்ன முறையில் தான் நானும் செய்கிறேன்...செய்து குழந்தை குடிக்காட்டி கொட்டிட வேண்டாம் சாதத்தில் பிசைந்து கொடுங்க.
அதிகம் திரவம் போல் உள்ள சூடான ஆகாரங்களை கொடுங்கள்.நிறைய தன்னீர் உடம்பில் போனாலே சளி வெளியே வரும்...அம்மு குழந்தைக்கு என்ன சாப்பாடெல்லாம் கொடுக்கரம்மா?
சளி பிடிக்கிரப்ப நல்ல ஆரஞ் ஜூஸ் நிறைய கொடுக்கலாம்..ஆனால் மற்ற பழங்களை இப்பொழுது தவிர்த்து விடுங்கள்....என் அனுபவத்தில் மற்ற பழங்களுக்கு சளி இன்னும் கூடிகிறது.
என் பொன்னும் கீ கீகீ ந்னு சினுங்கீட்டே தான் இருக்கா..இந்த பதைவைப் படிச்சப்ப பதில் சொல்லாம போக தோனல.
இப்பல்லாம் பொன்னுக்கு சளி தொடங்கும்பொழுதே இஞ்சி சாறும் தேனும் கலந்து கொடுக்க ஆரம்பித்து விடுவேன்.
ஆமாம் சளிகான மருந்து கொடுக்காததால் எதிர்ப்பு சக்தி வருமான்னு தெரியல..ஆனால் சளி எப்பொழுதும் அதன் விளையாட்டை முடித்து விட்டு தானாக போவது தான் நல்லது...அலோபதி கொன்டு அடக்குவது உடம்புக்கு கேடு..
அதனால் தான் கொடுக்க மாட்டேன் எஙிரார்கள்.
இனி மற்றவை பிறகு.டேக் கேர் ..டு நாட் வரி

பாலம்மு ஒரே ஒரு நாள் காலையில் ஓட்ஸ் ,மதியம் சீஸ் சாதம்,,ராத்திரி செரெலேக் வீட் கொடுங்கள்...நிறைய தன்னீரும் கொடுங்கள்..அடுத்த நாள் எப்படி மோஷன் போகிறது என்று பாருங்கள்.
என் பொன்னுக்கு சின்னதில் அதிகம் இல்லாட்டியும் கொஞ்சம் கான்ஸ்டிபேஷன் ப்ரச்சனை இருந்தது..ஆனால் எப்படின்னி ஏன்னு தெரீல..இப்படி உணவைக் கொடுத்தபொழுது அடுத்த நாள் எந்த ப்ரச்சனையும் இருக்கல.
ரவை,பனானா,ஆப்பில் தவிர்த்து விடுங்கள்

மேலும் சில பதிவுகள்