ஆட்டுக்கால் சூப்

தேதி: January 28, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டுக்கால் - 2,
சின்ன வெங்காயம் - 6,
பூண்டு - 4 பல்,
மிளகு - 1 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
தனியா - 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 10,
உப்பு - தேவையான அளவு.


 

ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிளகு, சீரகம், தனியா, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
குக்கரில் ஆட்டுக்காலுடன் அரைத்த விழுது, உப்பு, 8 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 10,15 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.
இதை முதல் நாள் இரவே கூட வைத்து விட்டு, மூடியை திறக்காமல் வைத்திருந்து, காலையில் சூடு செய்து குடிக்கலாம்.


ஆட்டுக்காலை தணலில் பொசுக்கி, தோலை சுத்தமாக நீக்கி விட வேண்டும். அப்படி சுத்தம் செய்த காலை 1 மாதம் போல் வைத்திருந்தாலும் கெடாது. சூப் செய்யும் முன் ஆட்டுக்காலை நன்கு தேய்த்து கழுவி விட வேண்டும். சூப் எடுத்த பின் உள்ள எலும்புகளை வைத்து குழம்பு வைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்