தூனா ரோஸ்ட்

தேதி: January 28, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

தூனா மீன் - 2 டின்
வெங்காயம் - 3
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - 2 கொத்து
பட்டை - ஒரு இன்ச் துண்டு
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - கால் கப்
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
குருமிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

தூனா டின்னை திறந்து எண்ணெயை வடித்துக் கொள்ளவும்.
பின் ஒரு பானில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பட்டை போட்டு நன்கு பொன்னிறத்தில் வதக்கவும்.
அதில் இஞ்சி, பூண்டு நறுக்கியதை சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கி தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து தக்காளி உடையும் வரை வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், குருமிளகுத் தூள், உப்பு சேர்த்து வதக்கி தூனாவை கொட்டி தீயை மிதமாக்கி விட்டு கிளறவும்.
2 நிமிடத்தில் மசாலா நன்கு தூனாவில் பிடித்து கீமா போல ரோஸ்டாகி வந்தபின் இறக்கிப் பரிமாறவும்.


சாதத்துக்கு, சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். ப்ரெட்டில் வைத்தால் சாண்ட்விச்சாகவும் சூப்பராக இருக்கும். பருப்பு குழம்பு, மோர் குழம்பு, சாம்பார் போன்ற குழம்புடன் அருமையாக இருக்கும். இம்முறையில் சமைத்தால் மிக சுவையாக சிக்கனோ, மட்டனோ ரோஸ்ட் போல இருக்கும். சாதத்துக்கு என்றால் சிறிய குடும்பத்திற்கு ஒரு டின் போதுமானது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று உன்னுடைய தூனா ரோஸ்ட் செய்தேன். சுவையாக இருந்தது. நான் ஊருக்கு போக முன்னாடி வாங்கிய டின். இன்று இரவு சப்பாத்திக்கு தொட்டு கொள்ள இதுதான். மதியம் தயிர் சாததிற்கு நன்றாக இருந்தது. சிறிய குடும்பத்திற்கு ஒரு டின் போதும் என்பதை கவனிக்கவில்லை. பரவாயில்லை நாளை மதியத்திற்கும் வைத்துக் கொள்வேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!