தேதி: January 28, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
நறுக்கிய வெங்காயம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள்- இரு தேக்கரண்டி
இஞ்சி துருவல் - ஒரு மேசைக்கரண்டி
அரைத்த தக்காளி - இரண்டு
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கொத்தமல்லி தழை - சிறிது
உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எண்ணெயை காய வைத்து பட்டை, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து இஞ்சி துருவல், பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளறவும்.
பிறகு மிளகாய் தூள், சீரக தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி அரைத்த தக்காளி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.