ஈஸி வெண்டைக்காய் பொரியல்

தேதி: January 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - 10
நறுக்கிய சின்ன வெங்காயம் - 8
பச்சை மிளகாய் - 2
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

வெண்டைக்காயை நன்கு கழுவி தண்ணீர் வடித்து துணியால் துடைத்து நறுக்கவும்.
எண்ணெயை காயவைத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கிய பின் நறுக்கின வெண்டைக்காய், உப்பு சேர்த்து குறைந்த தீயில் இடையிடையே கிளறி வேக விடவும்.
குழந்தைகளுக்கு என்றால் பச்சை மிளகாய் தவிர்த்து மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.


இம்முறையில் தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையாக இருக்கும். முக்கியமாக குழந்தைகளுக்கு கடுகு, கறிவேப்பிலை எல்லாம் இருந்தால் எரிச்சல் வரும்.

மேலும் சில குறிப்புகள்