நூறை தொட்ட ரூபிக்கு வாழ்த்துக்கள் :-)

அடிச்சாச்சு நூறு, ரூபி :-)

இதோ என் வாழ்த்தையும் பிடிச்சுக்கோ :-)

ஒவ்வொரு குறிப்பும் செய்ய ரொம்ப ஈஸியா இருக்கு உனது :-)
இன்னும் பல நூறு குறிப்புகள் தா, சீக்கிரமா :-)

சரியா :-)

பை தூங்கப்போறேன், இப்ப :-)

take life as it comes
வாழ்த்துக்கள் பல, இதைப்போல் இன்னும் பல குறிப்புகளைக் கொடுக்க, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நூறு குறிப்புகள் கொடுத்த தாளிகா(மேடம்)
உங்கள் குறிப்புகள் அனைத்தும் பலேக்கா:-)

take life as it comes

ஹாய் சுப்ரியா..ரொம்ப தேன்க்ஸ்மா எனக்கே ந்ம்பமூடீல. முதல் குறிப்பு கொடுத்தப்ப நான் தமிழ் பேசி,படிச்சு 3 வருஷம் ஆகியிருந்தது.வாஎத்தையே கிடைக்கல.டைப் பன்னவும் வரல..ஆனால் இப்பொழுது 100 எட்டிட்டேனான்னு யோசிக்கிறேன்

தளிகா செனட்சுரி அடித்தற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல செனட்சுரி கொடுக்க வாழ்த்துக்கள். நீங்கள் குறிப்புகள் கொடுக்கும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களை குறிப்புகள் கொடுப்பதற்கு விட்ட ரீமா குட்டிக்கு வாழ்த்துகளை தெரிவித்து விடவும். பதில் மெயில் வரவில்லை.

ஜானகி

அச்சசோ ஜானு மெயில் அனுப்பினீங்களா இருங்க தேடறேன்..சில சமையம் ஒன்னா நிறைய மெயில் வந்தா யாருக்கு பதில் கொடுத்தேன் கொடுக்கலைன்னு மறந்துடுவேன்..இனி அப்டியான்னு தெரீல..ரொம்ம்ப தேன்க்ஸ் ஜானு..வாழ்த்தியதில் மிகுந்த சந்தோஷம்பா

அருசுவை தோழிகளுக்கெல்லம் உடனே பதில் கொடுக்கும்
வாழ்த்துக்கள் தளிக்கா
இப்ப தான் பார்த்தேன் இவ்வளவு நேரம் ஓப்பன் ஆகல,
நான் இத்தனை குறிப்பு கொடுக்க காரணமே தளிக்கா தான் அவங்க மட்டும் ஊக்குவிக்கவில்லை என்றால் நான் என்றோ குறிப்பு கொடுப்பதை நிருத்தி இருப்பேன் .
எல்லம் அருமையான் டிஃப்ரெண்டான குறிப்புகள். இன்னும் அருமையான குறிப்பு கொடுக என் வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்காவை மிஞ்ச முடியுமா..உங்க ஊர்பேரில் ஒரு புக்கே போடலாம்..உங்க பாரம்பரிய recipes அவ்வளவு இருக்கே விட்டுருவேனா குறிப்பு அனுப்பாம.
ரொம்ப தேன்க்ஸ்கா நானும் தான் அப்பப்பா இல்ல இனி போதும்னு நினைப்பேன் ஆனால் எதுவாது செய்து அருமையாக வந்துட்டா பின் மனசு கேக்காது இங்க வந்து போட்டுருவேன்

என் பையன் அடிக்கடி கேட்பான் யாரும் சமையல் சீக்ரெட் எல்லாம் சொல்ல மாட்டார்கள்,
நீங்க ஏன் எல்லாம் சொல்லுகிறீர்கள் .
யான் செய்து ருசித்த இந்த உண்வு வகைகளை இவ்வையகமும் தெரிந்து பயன் பெறட்டும் என்று நான் சொல்வேன். சில பேர் சமையலே தெரியாமல் வெளிநாடுகளில் படிக்க போகிறார்கள், தீடீரென்று கல்யாணம் செய்து போகிறார்கள் அவர்களுக்கெல்லாம் இது உதவும்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் தளிகா,
உங்களுடைய முதல் செஞ்சுரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்க கேரளா அவியல் போன வாரம் செஞ்சேன் என்னால பதில் தான் தர முடியல. இதே மாதிரி கேரளா சமையல் நிறைய கொடுங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும். மேலும் பல நூறு குறிப்பு தர என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
சுஜி

அறுசுவையின் செல்லப்பெண் ரூபிக்கு என் ஆத்மார்த்த வாழ்த்துக்கள். சின்னப் பெண்கள் நீங்கள் எல்லோரும் (சுபா, தளிகா, ஜலீலா) தகப்பன்சாமி (முருகன்) போல் ஆகிவிட்டீர்கள். என் பிள்ளைகள் வளர்ந்து விட்டதால், இனி எனக்கு பேரக்குழந்தைகள் பிறக்கும்போது உங்கள் எல்லோருடைய ஆலோசனைகளைத்தான் நாடவேண்டும்.
தளிகா புரியலேன்னா சுபா கொடுப்பாள் விளக்கம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அன்பு ரூபி,
உன்னுடைய முதல் சதத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீயும் காப்பி அடிச்சு (அம்மா, பாட்டிகிட்ட இருந்துதான்) மேன்மேலும் நிறைய குறிப்புகள் தர வாழ்த்துகிறேன். வேப்பிலைய மட்டும் கருவேப்பிலை ஆக்கிடு :-)))
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்