மருவை நீக்க ஏதேனும் இயற்கை வழி சொல்லுங்களேன்

நீங்க மருங்கரது நான் நினைக்கிரது தான்னு நினைக்கிறேன்..கருப்பு ப்ரவுன் அப்டி மணிமணியா முகத்தில் தோளில் எல்லாம் வருமே அதானே...என் கனவருக்கு முன்னொரு 10 வர்ஷம் முன் ஒரு மரு வந்து ஒரு தோழர் சொல்லி ஒரு க்ரீம் தேச்சாராம் 1 வாரத்தில் மரு உதிர்ந்து விட்டதாம்...ஆனால் பின் அதன் பெயரை மறந்து விட்டாராம்..யார்ட்ட சொல்லி தேடியும் கிடைக்கலை பின்..இப்பொழுது ஒன்று இருக்கிறது அதற்குத் தான்..நீங்களும் தெரிந்தவர்களிடம் கேட்டு பாருங்கள்

ஆமாங்க Thalika, அதே தான். நானும் பலரிடம் கேட்டுடேன். யாருக்கும் தெரியல!!!. உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்க. ரொம்ப நன்றி பதில் அளித்ததற்கு.

ஹாய் ssplal ப்யூட்டிபார்லரில் மருவை நீக்குவார்கள்.எனக்கும் கழுத்தின் பின்புறம் ஒரு மரு இருக்கிறது இரண்டு வருடம் முன்பு பார்லர் போனபோது அதை நீக்கலாமா வலி எல்லாம் இருக்காது என்று சொன்னார்கள்.ஆனால் எனக்கு தான் விருப்பம் இல்லை.அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்

ஆமாங்க ஆனால் எனக்கு தான் beauty parlour போறதில் விருப்பமில்லை. அதனால் வேற வழி இருக்கானு கேட்டேன். Thanks for replying.

ஹாய்,
கட்டி பெருங்காயத்தை தண்ணீரில் ஊறவைத்து, அதை தினமும் மருவின் மேல் வைக்க மறையும்.
விளக்கெண்ணெயும், மஞ்சளும் குழைத்து வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று மமறை வைக்க மறையும். இரண்டும் சொல்லக் கேள்வி. முயற்சி செய்து பார்த்து, பலன் இருந்தால் எனக்கும் சொல்லுங்கள்:-))
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

கண்டிப்பா முயற்சித்து பார்த்து உங்களுக்கு சொல்றேன். மிக்க நன்றி பதில் அளித்ததற்கு.

Podowart available at all medical shop to remove the warts

Podowart use panni Skin allegy vandhuchi, please dont try this.

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இவை அழகை கெடுப்பது போல் இருக்கும். மேலும் இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். இவை அழகைக் கெடுக்குமாறு இருப்பதால், இதனை போக்க முயற்சிக்கலாம். அதிலும் அதனைப் போக்க மருத்துவரிடம் சென்றால், அவர்கள் அதனை எரிக்கலாம் என்று பரிந்துரைப்பார்கள். ஆனால், நம்மால் அதனை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இருப்பினும் இந்த மருக்களை ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு எளிதில் போக்கலாம். இங்கு அந்த மருக்களைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இஞ்சி

தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.
அன்னாசி

இது மருக்களைப் போக்க உதவும் மற்றொரு வழியாகும். அதற்கு அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
வெங்காய சாறு

வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை மரு உள்ள இடத்தில் காட்டன் கொண்டு தேய்த்து வந்தாலும், அது விரைவில் உதிர்ந்துவிடும்.
டீ ட்ரீ ஆயில்

இந்த முறைக்கு முதலில் சருமத்தில் சோப்பு கொண்டு தேய்த்து கழுவி விட்டு, பின் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும். இருப்பினும். இதனை தினமும் மூன்று முறை செய்து வந்தால், மருக்களானது எளிதில் உதிரும்.
எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இடத்தில் தேடவி, 20-15 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், மருக்கள் சீக்கிரம் போய்விடும்.
பூண்டு

பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியைக் கொண்டு கட்டி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். மேலும் இந்த முறையை தினமும் மூன்று முறை செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.
கற்றாழை ஜெல்

கற்றாழையில் உள்ள நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தகைய நன்மைகளில் ஒன்று தான் மருக்களைப் போக்குவது. அதற்கு கற்றாழை ஜெல்லை மரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வேண்டும்.

மேலும் சில பதிவுகள்