அமுக்கு வத்தல் குழம்பு

தேதி: January 29, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 200 கிராம்,
சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
புளி - 1 எலுமிச்சை அளவு,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிது,
கறிவேப்பிலை - 10,
அமுக்கு வத்தல் - 6,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.


 

துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து மசிக்கவும்.
1 டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து வைக்கவும்.
2 டம்ளர் கொதிக்கும் நீரில் அமுக்கு வத்தலை போட்டு 1/2 மணி ஊற வைக்கவும்.
வெந்த பருப்புடன், வத்தல்(தண்ணீரை வடித்து), சாம்பார் பொடி, உப்பு, புளிகரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
காய் வெந்ததும், வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும்.


சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி மேம் அமுக்கு வத்தல்னா என்னனு சொல்லரீங்களா.

ஹாய் மோனி,
கீழே உள்ள லின்க்-ஐ தொடுக்கவும்.
http://www.arusuvai.com/tamil/node/7582
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேம் தேங்க்ஸ்.லிங்க் ஐ பார்க்கரேன்.