தக்காளி சட்னி - ஈசி முறை

தேதி: January 31, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

தக்காளி - 3 (நன்கு பழுத்தது)
தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - அலங்கரிக்க
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - தாளிக்க


 

தக்காளியையும் தேங்காயையும் நன்கு அரைத்து தனியாக வைக்கவும்.
வெங்காயம் பச்சை மிளகாய் நீளமாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த கலவையை ஊற்றவும் .
அதில் மிளகாய் தூள்,தனியா தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள்,உப்பு போட்டு தேவையான தண்ணீர் விடவும்.
3 விசில் வரும் வரை வேக விடவும்.
கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும் .


சின்ன வெங்காயமோ பெரிய வெங்காயமோ நீள நீளமாக நறுக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்