சேவை மேஜிக் குறித்த உங்களின் கேள்விகளுக்கு இங்கே பதில் பெறலாம்

சேவைமேஜிக் குக்கர் பற்றிய அறுசுவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நியுஹோம் நிறுவனத்தினர் பதிலளிக்கத் தயாராக இருக்கின்றனர். உங்கள் கேள்விக்கணைகளை இங்கே தொடுக்கலாம்.

அண்ணா இருக்குது..ஆன்லைன் ஷாப்பிங் வசதி

Mrs.Srigeetha Mahendran
வணக்கம்,
நீங்கள் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள சேவை மேஜிக் பற்றி நான் அறிந்து கொண்டேன். இது இல்லத்தரசிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிரேன். நான் தற்பொழுது ஜப்பானில் வசித்து வருகிறேன். இதன் தற்போதைய விலையை தெரியபடுத்தவும். மேலும் இதன் எடை என்ன என்பதையும் தெரிய படுத்தவும்.

நன்றி
ஸ்ரீகீதா மகேந்திரன்

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

சேவை மேஜிக் பார்த்தவுடனேயே வாங்கிட வேண்டும்போல் இருக்கிறதே. முதலாவது இடியப்ப அவியலால் நாம் படும் வேதனையில் இருந்து விடுபடலாம் என்கிறீர்கள் அதற்காகத்தான். எனது சந்தேகம் இதில் அரிசி தான் போடவேண்டுமா? மா போட முடியாதா? என்னைப் போல் வெளிநாட்டில் இருப்பவர்கள் online ல் வாங்கக்கூடிய வசதி உள்ளதா? தயவு செய்து தெரியப் படுத்துங்கள்.

அதிரா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இங்கிருந்த பதிவை சரியான இடத்தில் போட்டாச்சு.
இப்படிக்கு
இந்திரா

இப்படிக்கு
இந்திரா

indira

உங்கள் ஆர்வத்துக்கு நன்றி, ஸ்ரீகீதா மகேந்திரன்.

ஆன்லைனில் இந்தியா முழுமைக்கும் கிடைகிறது. சேவைமேஜிக் குக்கரின் விலை விபரம் இங்கே இருக்கிறது

<a href='http://www.sevaimagic.com/order_online.php'>http://www.sevaimagic.com/order_online.php</a>

இதன் எடை 7 கிலோ. இது ஒரு முழுமையான 6 லிட்டர் பிரஷர் குக்கருடன் சேர்ந்துவருகிறது.

அதிரா,

உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. இதில் ஊறவைத்து ஆட்டிய (அரைத்த)அரிசி மாவையையோ, மைதா, ராகி, கோதுமை போன்ற பாக்கெட் மாவுகளைத் தண்ணீரில் கலக்கியோ சேவை சமைக்கலாம்.

தற்போது கோவையில் கடைகளிலும், இந்தியாவின் மற்ற ஊர்களில் ஆன்லைன் விற்பனை வழியாகவும் கிடைக்கிறது. வருங்காலத்தில் வெளிநாடுகளில் கிடைக்கலாம்.

நீங்கள் அறுசுவைக்கு புதிது என்று நினைக்கிறேன் உங்களை அறுசுவை சகோதரிகள் சார்பில் வருக வருக என்று வரவேற்க்கிறேன். ஜப்பானில் நீங்கள் எந்த இடத்தில் வசிக்கிறீர்கள் என்று தெரிந்துக்கொள்ளலாமா. விருப்பம் இருந்தால் சொல்லவும்.ஏன் என்றால் நானும் ஜப்பானில் ஒசாகாவில் இருக்கிறேன்.அதனால் தான் கேட்டேன். நன்றி.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜா நன்றி.நான் ஜப்பானில் Yokohama-வில் இருக்கிறேன்.அறுசுவை.காம் மூலமாக உங்களை தோழியாக பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. வெளிநாடுகளில் நாம் சேவை மஜிக் வாங்கக் கூடிய வசதி ஏற்படும் பட்சத்தில்,முடிந்தால் அறுசுவை மூலம் எமக்குத் தெரியப்படுத்துங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

hi
rice powder ல் சேவை செய்தால் தண்ணீர் &மாவு என்ன அளவு?

மேலும் சில பதிவுகள்