தேதி: February 10, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சாதம் - மூன்று பேருக்கு தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 8 (மிகவும் பொடியாக நறுக்கியது)
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலை, உளுத்தம் பருப்பு - தலா அரை தேக்கரண்டி
வரமிளகாய் - 3
நீளமாக நறுக்கிய இஞ்சி - அரை இன்ச் துண்டு
கறிவேப்பிலை - 10 இலைகள்
சாதத்தில் வெங்காயம், தயிர், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக தாளித்து கலந்து வைத்த சாதத்தில் கொட்டி பரிமாறவும்.
வெங்காயம் மிகப்பொடியாக நறுக்கி சேர்க்கவும். பொதுவாக வெங்காயத்தையும் சேர்த்து தாளிப்போம். இம்முறையில் செய்தாலும் மிகவும் சுவையாக இடையிடையே கருகருக்கென வெங்காயமும் கடிக்க சூப்பராக இருக்கும். மதிய உணவிற்கு கொண்டு போவதாக இருந்தால் 1/2 கப் தயிரும் 1 கப் பாலும் சேர்த்து செய்து எடுத்து வையுங்கள். மதியத்திற்கு சரியாக இருக்கும். இல்லையென்றால் புளிப்பு கூடிவிடும். ஊறுகாய், அப்பளம் இதனுடன் இருந்தால் வேறென்ன வேண்டும் அவ்வளவு ருசியாச்சே.
Comments
தளிகாஸ் தயிர் சாதம்
தளிகா, உங்கள் தயிர் சாதம் நேற்று செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. இதற்கு முன் வெங்காயம் சேர்த்து செய்தது இல்லை. இதுபுது சுவையாக இருந்தது. என் கணவர் மிகவும் நன்றாக இருந்தது என்று என்னை பாராட்டினார் . அந்த பாராட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே.
நன்றி
காயத்ரிபாபு
curd rice
நன்றி காயத்ரி.இஷ்டமென்றால் கொஞ்சம் மாதுளம்பழத்தை தூவலாம் அழகு+சுவை கிடைக்கும்.
நன்றி தளிகா,
அடுத்த முறை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.
Hi thailka
Indru neengal sonnadhu polavae thayir saadham seydhaen.... Migavum suvaiyaaga irundhadhu...
Thanks a lot....
have a Good day...
When Life presents a challenge,Take your shot
தயிர் சாதம்
ஹாய் சிவா
மிகுந்த சந்தோஷம் சிவா.ஆனால் எனக்கு இப்ப ஒரு சந்தேகம் நீங்கள் செய்வதிலிருந்து என்ன எனது செய்முறையில் வித்தியாசம் வந்துள்ளது என்று சொல்லுவீர்களா.வெங்காயமா??
தயிர் சாதம்
ஹாய் தளிகா,
தயிர் சாதம் நன்றாக இருந்தது தளிகா. இஞ்சி சேர்த்த சுவை பிடித்திருக்கிறது. குறிப்புக்கு நன்றி.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
தயிர் சாதம்
ஹாய் இமா
மிக்க நன்றி..ரொம்ப சந்தோஷம்.சிலர் இஞ்சி சேர்ப்பதில்லை சிலர் வெங்காயம் சேர்ப்பதில்லை போல் தெரிகிறது
சுடச்சுட பதில்
ஆஹா, சுடச்சுட பதில் வருகிறதே. ரெடியாகத்தான் இருக்கிறீர்கள். ;-))
அன்புடன் இமா
- இமா க்றிஸ்