பிரெட் போண்டா

தேதி: February 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - 2 கை,
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி,
பிரெட் - 3 ஸ்லைஸ்,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 2,
கறிவேப்பிலை - 10,
கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது),
புதினா - 2 கைப்பிடி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.


 

வெங்காயம், புதினா, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்து பிழிந்து, உதிர்த்துக் கொள்ளவும்.
கடலை மாவு, அரிசி மாவு, உதிர்த்த பிரெட், வெங்காயம், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா,சிறிது தண்ணீர் எல்லாம் சேர்த்து தளர பிசைந்து கொள்ளவும்.
எண்ணெய் காய வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு, பொரித்து எடுக்கவும்.


மாலை நேரத்தில், சாப்பிட சுவையான சிற்றுண்டி. ஒருமுறை செய்தால் திரும்ப, திரும்ப செய்யத் தூண்டும் இதன் ருசி.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி அக்கா நலமா.உடம்பு எப்படி இருக்கு போனில் உங்க கிட்ட சொன்னாலும் இதிலேயும் சொல்லிவிடுகிறேன். கடைசி நோன்பில் உங்க பிரெட் போண்டா செய்தேன் நல்ல சுவையாக இருந்தது நீங்க சொல்லி இருப்பது போல ஒரு முறை செய்தால் திரும்ப திரும்ப செய்யத்தான் தூண்டும் இதன் சுவை.ஈத் அடுத்த நாள் என்பதால் பிஸி பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை அதனால் இப்ப கொடுக்கிறேன் குறிப்புக்கு மிக்க நன்றி.

அன்புடன் கதீஜா

செல்விஅக்கா உங்களுடைய குறிப்பில் பிரெட் போண்டா மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"