பெற்றோரை பார்த்துக் கொள்ளாத பிள்ளைகளுக்கு சிறை (!!)

என்னை பொருத்தவரை நாம் நல்லது செய்தால் அந்த நல்லது நமக்கு நல்லது செய்யும் ஆனால் அதை நமக்கு திரும்ப கிடைக்கும் என்ற நோக்கில் செய்வது தவறு......
நாம் நமது பெற்றோரையோ மாமியார் மாமனாரையோ பார்த்துக்கொண்டால் நமக்கும் நல்ல கதி ஏற்படும்...
இதை பற்றி பேசலாமா???

சிறை தண்டனை கொடுத்தாவது சீர்திருத்தலாமா?? என யோசிக்கும் அரசை பாராட்டலாமா?? பேசுவோமா?? தோழிகளே!!

பெற்றோரை பார்த்துக் கொள்ளாத பிள்ளைகளுக்கு சிறை (!!)

என்னை பொருத்தவரை நாம் நல்லது செய்தால் அந்த நல்லது நமக்கு நல்லது செய்யும் ஆனால் அதை நமக்கு திரும்ப கிடைக்கும் என்ற நோக்கில் செய்வது தவறு......
நாம் நமது பெற்றோரையோ மாமியார் மாமனாரையோ பார்த்துக்கொண்டால் நமக்கும் நல்ல கதி ஏற்படும்...
இதை பற்றி பேசலாமா???

சிறை தண்டனை கொடுத்தாவது சீர்திருத்தலாமா?? என யோசிக்கும் அரசை பாராட்டலாமா?? பேசுவோமா?? தோழிகளே!!

சுபா சரியான சமத்தில் நல்ல த்ரெட்..இன்று கவலைப் படுமளவுக்கு ப்ரச்cஅனையை பார்க்க முடிகிறது.
மாமனார் மாமியார் போய் இப்ப அப்பா அம்மாவையே பாஅர்ப்பதில்லை..பசங்க அப்படி செஞ்சாலும் பரவாலங்கலாம்..ஆனால் பொன்னுங்களே அப்பா அம்மாவை விரட்டி விடுவதை கண் முன்னே கானமுடிகிறது..அதுவும் செல்லமாக வளர்க்கப் பட்ட பிள்ளைகள் தான் இப்படி அதிக அளவில் செய்ராங்க.
ஓவெரா செல்லம் கொடுத்தால் இப்படி தான் பின்னாடி பன்னுவாங்க போலிருக்கு.
எங்கள் தெரிந்த ஒருவர் வீட்டில் 3 ஆண் 1 பெண் பெண்ணை என்னவென்று சொல்ல அவ்வளவு செல்லம் ..பெண் சிறு வயதிலேயே அப்பாவையும் அம்மாவையும் வாட போடின்னெல்லாம் கூப்பிடுமாம்..அப்பொழுதெல்லாம் இவர்கள் பெருமையாக இளித்துக் கொள்வார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்..ஆனால் கடைசியில் அவர்கள் படுக்கையில் கிடந்த பொழுது அடிக்கும் அந்த பெண்.சொத்து கொடு கொடுன்னு சொல்லியே பெற்றோரை சாகடித்து விட்டாள்.
வளர்க்கும்பொழுதே ஒழுங்காக விவரமாக நல்லது கெட்டது கான்பித்து புரிய் வைத்து வளர்த்தால் பின்னாளில் இப்படி ஆவது ரொம்ம்ப குறையும்.
வளர்த்து ஆளாக்கிய பெரியவர்கள் செய்ததை மறந்து பெரிய வீடெல்லாம் கட்டிய பின் வீட்டுக்கு பின்னால் பெற்றோருக்கு மாட்டுக் கொட்டாஇ மாதிரி ஒரு ரூம் இவர்களுக்கு கேவலமாம் பட்டிக்காட்டு பெற்றோரால்...என்ன கொடுமை பாஅருங்களேன்..
நம்ம social setup வேற இப்படி...ஆனால் இன்னொரு பக்கமும் பேச வேண்டும்...வயதானால் பிள்ளைகளை நம்பி..ஒரு பெண் ஆணை நம்பி எப்பொழுதும் ஒருவரை சார்ந்தே இருக்கும்படியான நிலமை.வயதானவர்களை பாதுக்காக்க அரசாங்கமும் கொஞ்சம் சட்டதிட்டங்களை கொண்டு வரலாம்...
வயதானவர்களுக்கும் வேலை வாய்ப்பு என்று இருந்தால் கொஞ்சம் நிலமை மாறும்.
வளர்ந்த நாடுகளில் நம் நாட்டைப் போல் ப்ரச்சனை அவ்வளவாய் இருப்பதில்லை..அவர்களது சொத்துக் களை வேறு ட்ரஸ்டுக்கெல்லாம் எழுதிவைத்தால் இறக்கும்வரை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்.
முதியோர் இல்லம் இருப்பது பாராட்டிற்குரியது தான்..அதையும் வேண்டாமென்று ஒரு கோஷ்டி ஆளுகள் இருக்கிரார்கள்.பிள்ளையும் பார்க்காமல் உடம்பும் முடியாமல் அவர்கள் பிச்சை எடுக்க நேரிடுவதை விட முதியோர் இல்லம் எவ்வளவோ மேல்.
அவர்களது காலத்திற்கு பிறகு தான் சொத்து பிரித்து கொடுக்கும்படியான சட்டமிருந்தால் நல்ல இருக்கும்..இன்று வயதானவர்களை சொத்தெல்லாம் பிடிங்கி மொட்டை அடித்து விட்டு வீதிக்கு தள்ளுகிரார்கள்..இந்தியாவில் குப்பை தொட்டியில் ஒரு மூதாட்டியை கண்டதாகவும் அவரது மகள் தான் அதில் போட்டதாகவும் போன வருடம் கல்ஃப் நியூஸில் படித்து மனதுக்கு கஷ்டமாக போய் விட்டது.
வெறும் மார்க் மார்க்குன்னு உயிரை வாங்காமல் பள்ளிகளில் மாரல் சயின்ஸுக்கு முக்கியத்துவம் தந்து சிறு வயதிலேயே ஆசிரியர்கள் கர்ப்பித்தால் அது ஆழமாய் மனசில் பதியும்.
வயதானால் அவர்கள் குழ்கந்தை மாதிரி முரண்டு பிடிப்பார்கள்..தேவையில்லாமல் சண்டைக்கு வருவார்கள்...அப்பொழுதைக்கு வெறுப்பு வந்தாலும் கடைசி வரை அப்பா,அம்ம,மாமனார் மாமியாரை பார்க்க இளைய தலைமுறையினருக்கு மனசு இருக்க வேண்டும்..
இப்படி ஒரு பக்கம் இருக்கு ஆனால் ஊரில் ஒரு மருமகள் மாமியாரை நல்ல கவனிப்பார்..மாமியாருக்கு வயதாகிவிட்டது ஆனால் நடக்க முடியும் ஆனால் வீட்டில் உறவினர்கள் வந்தால் ஆக்ட் விடுவார்கள் படுத்த படுக்கையிலேயே எல்லாம் பன்னிவிட்டு அடுத்தவர்களிடம் மருமகளை குறை சொல்வார்.
அது அப்டி...எப்பொழுதும் நாம் செய்யும் செயல் சரிதானா என்று நம்மை நாமே இடையிடையே கேட்டுக் கொள்வது நல்லது..நாம செய்த பாவம் நம்மை சும்மா விடாது என்று பயமிருக்க வேண்டும்...பிள்ளைகளை சொல்லி வளர்த்த வேண்டும்.

பெற்றேர்கள் மணம் நோகடிக்க கூடாது.
கல்யாணம் ஆனதும்

//என் புருஷந்தான் எனக்கு மட்டும் தான் என்று நினைப்பது தவறு///

இவ்வளவு காலம் பார்த்து பார்த்து வளர்க்கிறார்கள்.
நாம் போனது நம்ம சொல் தான் கேட்கனும் என்று நினைப்பது தப்பு.

//தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்குன்னு சொல்வாங்கள்.
//
எதுவாக இருந்தாலும் நம் வீடு நம்முடையது என்று நினைத்தல் எல்லாம் சரியாகிவிடும்.
அவர்களுக்கு வயசாகி விட்டால் நாம் சொல்லும் எதார்த்தமான வார்த்தைகளை தாங்க கூடிய சக்தி அவர்களுக்கு கிடையாது.
ஒன்று மட்டும் நினைவில் வைக்கவேண்டியது இன்றைய மருமகள் நாளைய மாமியார்
நாம் எவ்வளவுகு எவ்வளவு விட்டு கொடுக்கிறோமோ அவ்வளவௌக்கு அவ்வளவு நல்ல இருப்போஒம்.
அவர்கள் மேலே உள்ள கோபத்தை பிள்ளைகள் மேல் காண்பித்து அவர்களை புண் படுத்தகூடாது.
துடித்து போவார்கள்,
அவர்களோடு கழிக்கும் ஒவ்வொரு நாளும் பொன்னா நாள்.
சில கொடுமைகாரா மாமியார்கள் இருக்கிறார்கள், ஆனல் ஏன் அப்படி இருக்கிறார்கள், அவர்கள் சூழ் நிலை, வாழ்க்கையில் அவர்கள் பட்ட் அடி அந்த மாதிரி அவர்களை ஆடவைகுது,எனக்கு தெரிந்த ஒரு இடத்தில் சொந்த தம்பி மகளையே கல்யாணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகவில்லை வீட்டை விட்டு தொரத்தி விட்டார்கள்.
சில பேர் மருமகள் வந்ததும் ஆகா ப்துசா என்னவோ பீஸ் குடுக்காதா வேலை கரி கிடைத்தமாதிரி எண்ணம்.இப்படியும் சிலர்,

நம்ம இவ்வளவு நல்ல வாழ்க்கையை அனுபவிக்கிறோம் என்றால் அதற்கு காரணம் அவர்கள்.
நிறைய தோனுது ஆனால் இப்போதைக்கு எழுதமுடியல
எதா இருந்தாலும் விட்டு கொடுக்கனும்.
விட்டு கொடுப்பது தான் வாழ்க்கை நாம் போகும் போது என்னத்த அள்ளி கொண்டு போக போறோம்.
எவ்வளவோ தப்பு செய்கிறோம்.
சிலருலருகு தெரியாது , ஆ என்னுடையது என்று நினைக கூடாது.
அவர் அக்க தங்கைகளையும் நம் அக்கா தங்கைகளிஅ எப்படி நினைப்போமோ அப்படி நினைக்கனும்.

ஜலீலா

Jaleelakamal

நல்ல தலைப்பு சுபா.
மகனோ மகளோ யாராக இருந்தாலும் பெற்றவர்களைமனம் கோணாமல் பார்த்துக் கொள்வது என்பது கடமை இல்லை அது புண்ணியம்.பெற்றவர்களுக்கே தாயாக தந்தையாக பார்த்துக் கொள்வது என்பது எத்தனை சுகம் தெரியுமா?

சில ந்நெரங்களில் அவர்கள் பேசுவது அல்லது செய்வது நமக்கு வேதனையை கொடுக்கும்.ஆனால் நம் பிள்ளைகள் அப்படி செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோமா.வயதானவர்களும் மனதளவில் குழந்தைகளே.இந்த வயதில் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும்.சிறு சுடு சொல்லை கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.

இன்னும் சில நேரங்களில் நமக்கெல்லாம் பொறுப்பே இல்லை எதிலும் கவனம் இல்லை அவர்கள் மட்டுமே எல்லாவற்றையும் சரியாக செய்வதாக சொல்வார்கள்.ஏன்னா அவர்களை பொறுத்த மட்டில் நாம் இன்னும் ஒன்னுமறியா குழந்தைகள்.யாரிடமாவது நாம் ஏமாந்து விடுவோமொங்கற பயம்.அதான்

அவர்கள் எல்லாவற்றிலும் தலையிடுவதாக நமக்கு தோன்றும்.அதுவும் உண்மைதான்.அவர்கள் அப்படி செய்ய காரணம் நம் கவனத்தை அவர்கள் பக்கம் இழுக்க தான்.சிறு குழந்தைகள் சேட்டைகள் செய்யுமே அது போலத்தான்.தனக்கு தெரியாமல் ஏதாவது செய்து விடுவார்களோ அல்லது தன்னை ஒதுக்கி விடிவார்களோ ஏன்ற insecure feeling தான் காரணம்.
பெற்றோர்கள் financially independent ஆக இருந்தால் இந்த பிரச்சினைகள் பல மடங்கு குறையும்.
பெற்றோர்கள் financially dependent ஆக இருந்தால்
எந்த சமயத்திலும் நாம் செய்யும் பண உதவியை சாதாரணமாக கூட அவர்கள் முன் சொல்லாதீங்க.அது மாமனார் மாமியாராக இருந்தாலும் சரி அப்பாஅம்மாவாக இருந்தாலும் சரி.கணக்கு கேக்காதீங்க.ஒரு வேளை அவர்கள் அனாவசியமாக செலவளிப்பதாக தோன்றினால் பொறுமையாக பேசுங்கள்.

இந்த சின்ன சின்ன விஷயங்கலை நாம் புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் செய்தால் அவர்களை கவனிப்பது சிரமம் ஒன்றும் இல்லை.

இது பெற்றோருக்கு
விட்டு கொடுப்பதுங்கறது மகன் மருமகள் மட்டும்தான்னு செய்ய்ணும்னு இல்லை நீங்களும் செய்யணும்.
அப்புறம் சம்பாதித்த எல்லாவற்றையும் பிள்ளைகள்கிட்ட கொடுத்துட்டு பின்னாடி ஒவ்வொரு தேவைக்கும் அவர்களை எதிர் பாத்து இருக்கற நிலமை வராம உங்களுக்குன்னு தனியா சேமிப்பு வச்சுக்கோங்க.பழமொழி சொல்வாங்களே தாயும் பிள்ளையும்னாலும் வாயும் வயிறும் வேறன்னு.

எல்லாத்துக்கும் மேல முக்கியம் நம் பிள்ளைகளை வளர்க்கும் முறை.சின்னதில் நாம் சரியாக வளர்த்தால் நம் கஷ்டங்களை குழந்தைகளுக்கு புரிய வைத்து வளர்த்தால் வளர்ந்த பிறகு நிச்சயம் அந்த மகனோ மகளோ பெற்றோரை கைவிட மாட்டார்கள்.ஏன்னா அவங்களுக்கு நீங்க எவ்வளவு கஷ்ட பட்டு அவர்களை ஆளாக்கினீங்கன்னு அவங்களுக்கு தெரியும்.

எல்லாத்துக்கும் மேல ஜலீலாக்க சொன்னது மாதிரி நாம் இன்று அனுபவிக்கும் வாழ்க்கை அவர்கள் கொடுத்தது அப்படீன்ங்கற எண்ணம் நமக்கு எப்பவுமே இருக்கணும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பாசம் என்பதை சட்டம் போட்டு தண்டனைக்கு பயந்து பெற வேண்டியிருக்கிறது. எல்லாம் கலிகாலம்.

பிள்ளைகள் மீது குறை சொல்வதற்கு முன் பெற்றோருக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றாக வேண்டும் என்ற கட்டாயம் உள்ள இன்றைய காலகட்டத்தில், குழந்தைகளை காப்பகத்தில் விட்டுவிட்டுச் செல்கிறார்கள். நாளை அது பெற்றோரை முதியோர் காப்பகத்தில் விட்டுவிடுகிறது.

இது போதாது என்று வெளிநாட்டு மோகம் வேறு.. பல தவறுகளை பெற்றோர் செய்துவிட்டு பிள்ளைகளை மட்டும் குறை கூறுவது தவறை சரி செய்ய உதவாது.

குழந்தைகள் பெற்றோரைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். எனவே பெரியவர்கள் அவர்களுக்கு பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். இதற்கு என் வீடு ஒரு நல்ல உதாரணம். என் மாமனாருடைய அம்மாவுக்கு 87 வயதாகிறது. என் மாமனாரும் மாமியாரும் அவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்துகிறார்கள். அதைப் பார்த்து வளர்ந்த என் கணவரும் அவரது பெற்றோரை மிகவும் மதிக்கிறார்.

தளிகா சொன்னதுபோல் மாமியார் என்பவர் ஒரு மார்க்கமானவர் தான். மனைவி அமைவது மட்டுமல்ல மாமியார் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான். எத்தனை பேர் சாபத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? கணினி காலமானாலும் பெண்கள் சந்திரனுக்குப் போனாலும் மாமியார் என்பவர் மாமியார் தான் மருமகள் பாவம் தான்.

பெற்றோர் நல்லவிதமாய் வளர்த்தும் பிள்ளைகள் சரியில்லையென்றால் சமுதாயம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

அறுசுவையில் பல பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறோம். கருத்து தெரிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் நம் தோழிகள் அனைவரும் புரட்சி பெண்ணாய் மாறி சமுதாயத்தின் ஓட்டைகளைச் சரிசெய்யும் சபதம் கொண்டு ஒரு புதிய ஆரோக்கியமான சமுதாயம் உருவாக அடிக்கல் நாட்டுவோம்.

இப்பொழுது ஒரு ஜோக்..நான் சொன்னேனே அந்த செல்லப் பெண்..அது சிறு வயதில் ரொம்ம்ப அடங்காபிடாரி..அவர் வீட்டில் உள்ள வேலைகாரிப் பெண்ணை கதவின் இடுக்கில் கை வைத்துக் கொண்டிருந்தால் கதை அடைத்து விட்டு அந்த பெண் அலருவதைக் கேட்டு சிரிக்குமாம்..ஒரு நாள் பெற்றோர் வேலைக்காரியிடம் சரி என் பொன்னு ஆசைப் படுதில்ல நீ உன் விரலை ஒரு முறை கதவில் வெச்சுக் கொடு என்றார்களாம்..அன்று அவர்கள் வீட்டிலிருந்து என் சொந்தக்காரங்க சொன்னாங்க..இப்படி பொன்னை குட்டிச்சுவராக்கினா பின்னால் கேடு என்று..அது போலவே ஆச்சு இப்ப

அன்னு நீங்க சொல்வது உண்மை.பெரியவர்கள் முன்னுதாரணமாக இருந்தால் பிள்ளைகளும் அவர்கள் வழி நடப்பார்கள்.
எங்கள் வீட்டில் என்னுடைய அப்பாஅம்மாதான் எனக்கு வழிகாட்டி.என் தத்தாவும்(அப்பாவின் அப்பா)அத்தைகளும்(அப்பவின் சகோதரிகள்)என் அம்மாவையு அப்பாவையும் எவ்வளவோ கஷ்ட படுத்தினாரகள்.சினிமாவில் வருமே மாமியார் நாத்தனார் கொடுமைகள் அத்தனையும் என் அம்மாவிற்கு நடந்தது.ஆனால் ஒரு நாள் கூட என் அப்பாவோ அம்மாவோ தாத்தாவை குறை சொன்னது இல்லை.என் அத்தைகள் உடல் நலமில்லாமல் இருந்த போது அவர்களின் பேச்சுகளை மௌனமாக கேட்டுக் கொண்டு அவர்களை அம்மா அருகில் இருந்து கவனித்தார்கள்.நான் கூட என் அப்பா அம்மாவிடம் இதற்காக சண்டை போட்டிருக்கிறேன்.ஆனால் என் அம்மா சொன்னது "இது என் கடமை.தங்கமான உன் அப்பாவை எனக்கு தந்தவர்கள் அவர்கள்".இந்த வார்த்தைகள் இன்னும் என் மனதில் இருக்கிறது.

என் மாமியாரை நான் அம்மான்னுதான் கூப்பிடுவேன்.அவர்களும் அவர்களி மகள்களை போலவே என்னிடம் பாசமாக இருக்கிறார்கள்.வயதானவர்களுக்கே உரிய சில குணங்கள் இருக்கிறது.அதை நான் பெரிது படுத்துவதில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எல்லாரும் எப்படி இருக்கீங்க? பெற்றோர்களை பார்த்துக் கொள்ளாத பிள்ளைகள் என்று ஏன் வந்தது அவர்களுக்கென்று ஒரு குடும்பம் வந்ததும் தான். ஏன்? அப்போது அவர்கள் தான், தன் குடும்பம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.தாயும் தகப்பனும், மாமனாரும், மாமியாரும் நம் சொந்தமே என்கிற எண்ணம் மாறிவிட்டது.ஆனால் புதியதோர் விதி செய்வோம் என்கிற எண்ணத்துடன் இப்போது இருக்கும் ஒவ்வொரு மருமகளும்,மருமகனும் தன் மாமியார், மாமனாரை அப்பா அம்மாவாக பாவித்தாலே போதும்.இந்த நூற்றாண்டில் பாசம் கூட விலைக்கு கிடைக்கும் போல் இருக்கிறது. அதனால் எல்லா பெற்றொர்களும் எப்படி தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து சேர்கிறார்களோ அதைப் போல அவர்களுக்கென்று பின்னாளில் தேவைப்படுவது போல் ஒரு தொகையோ அல்லது சொத்தோ சேர்த்துக் கொள்ள வேண்டும். இது என்னுடைய எண்ணம்.பெற்றொர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்லறிவை தவிர எப்படி தங்கள் வாழ்க்கையை தொடர வேண்டுமென்பதையும் எடுத்து சொல்ல வேண்டும்.தங்கள் அனுபவங்களையும் சொல்லி வளர்க்கவேண்டும். பெரியவர்கள் எங்கே அவர்களை ஒதுக்கி விடுவார்களோ என்றே எண்ணி அவர்களை தாங்களாகவே ஒவ்வொரு விஷயத்திலும் ஈடுபடுத்திக் கொள்வர். அதற்கு நாமே அவர்களை எந்த ஒரு விஷ்யமாக கலந்து ஆலோசித்து செய்தால், அவர்களுக்கும் ஒரு திருப்தியாக இருக்கும் நமக்கும் ஒரு நல்ல ஆலோசனை கிடைத்தது போலவும் இருக்கும்.ஆகவே பெரியவர்களும் சரி பிள்ளைகளும் சரி கொஞ்சம் விட்டுக் கொடுத்து அனுசரித்து வாழ்ந்தாலே அந்த குடும்பம் சந்தோஷ்மாக இருக்கும். எந்த முதியோர் இல்லமும் வளராது.

ஹாய் சுபா,

நல்ல தலைப்பு குடுத்து இருக்கிங்க. உண்மையிலேயெ இன்றைய தலைமுறை ல இந்த தப்ப சாதரணமா செய்றாங்க. அவங்களுக்கும் வயசு ஆகும்னு நெனச்சு பாக்கரது இல்ல. மாமனார், மாமியார நம்ம தாய் தந்தை யா பாத்துகனும். அவங்க கோப பட்டாலும் கொஞ்சம் பொருத்து போய்டா சந்தோஷமா இருக்கலாம்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்