உணவு பொருத்தம்

தோழிகளே!
நம் வீட்டில் சாதாரணமாக உணவு தாயாரிக்கும் போது இதுக்கு இது தான் காம்பினேஷன் என்று நாம் வைத்திருப்போம்....
சில சமயம் அதை சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்திருக்கும்..
அவர் அவர் காம்பினேஷனை முதலில் எழுதுவோம்..
பின் மாற்ற முடிந்தவற்றை மாற்றிப் பார்ப்போம்.......

அதில் அவர் அவர் கொடுத்த குறிப்புகளின் லிங்க்கையும் கொடுத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.....

உங்க குறிப்பில் இந்த சிம்பிள் ரவை கஞ்சி இருக்கா அக்கா? எனக்கு இந்த ரவை கஞ்சி ரொம்ப பிடிக்கும்.இருந்தா சொல்லுங்களேன்.

எனக்கு ரொம்ப ரிச் உணவுகளை விட சிம்பிலான காம்பினேஷன் பிடிக்கும்

தயிர் சாதம்,ஊறுகாய்,அப்பளம்,உருளை வறுவல்

பருப்பு குழம்பு ,மீன் வறுவல்,காலிஃப்லவர் பொரியல்

தக்காளி குழம்பு,வெங்காயக் கருவாடு, கேபேஜ் பொரியல்

தக்காளி சாதம், ஆம்லெட்

தோசை,கத்திரிக்காய் பாஜி,தேங்காய் சட்னி

அப்பம், ஸ்டியூ

புளி சாதம் டூனா ரோஸ்ட்

மீன் குழம்பு,,மரவள்ளி கிழங்கு

புட்டு, கடலை கறி

மோர் குழம்பு, வெண்டக்காய் மசாலா

வெங்காயக் குழம்பு, கள்ளுக் கடை முட்டை;-)

பழைய சாதம் , உப்பு மாங்காய், கருவாடு வறுவல்

பரோட்டா, வெஜெடபில் குரும்பா,ரைத்தா

இட்லி/சாம்பார்/சட்னி

புட்டு, அப்பளம்

இடியப்பம்,சொதி/முட்டை குருமா

பூரி/உருளை பீட்ரூட் பாஜி

தக்காளி சாதம், முட்டை ரோஸ்ட்

நான், சைனீஸ் சில்லி சிக்கன்

சூப்,கார்லிக் ப்ரெட், வ்CHஒKஓளெT KஎK

சப்பாத்தி,உருளை குருமா,இன்ஸ்டன்ட் வெஜ்ஜி குருமா

வெங்காய தோசை,புதுனா சட்னி

கஞ்சி,பயிறு பொரியல்,செம்மீன் சம்மந்தி

பருப்பு முருங்கய் குழம்பு, பீர்க்கங்காய் முட்டை பொரியல்,சிக்கன் ஃப்ரை

ஃப்ரைட் ரைஸ்,மீன் வறுவல், வெங்காய சாலட்

தளிகா:-)

ஆத்தி!.... எங்கப்பா தளிகாவை காணோம்ன்னு கேட்டதுக்கு இவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பெரிய மெனுலிஸ்டா? படிச்சி முடிக்கறதுக்குள்ளேயே டயர்டா ஆயிடிச்சி. இதற்கு முன்னால் ஹோட்டல் ஏதாவது வைத்திருந்தீர்களா? அல்லது இனிமேல் வைக்கப்போகிறீர்களா? நாங்கள் தினம் ஒன்றாக செய்தாலே ஒரு வருடம் ஆகிவிடும் போலிருக்கிறதே. எனி ஹவ் நல்ல ஞாபகசக்தி.

எனக்கும் இதில் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறது என்னால் பங்குபற்ற முடியவில்லை, கொஞ்ச நாட்களாக error தான் வருகிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

take life as it comes
என்னது இது இவ்வளவு பெரிய லிஸ்டா இருக்கு, இத படிச்சு முடிக்கவே எனக்கு 5 நிமிஷம் ஆச்சு, திரூம்ப திரும்ப வேற படிச்சேன், ஏன்னா இதுல இருக்கிற நிறைய ஐட்டம் தெரியவே தெரியாது. நிறைய ரெசிபிய அறிமுகப்படுத்தி வைச்சிருக்கீங்க தாளிக்கா அக்கா.நன்றி

take life as it comes

அருசுவையில் எப்படி பதிவு போடுவது என்று நான் சொல்லித்தருகிறேன் அதிரா. அதன்படி ட்ரை பண்ணுங்கள். ஒரு பத்து தடவை டைப் பண்ணி பதிவு போட திரும்ப திரும்ப ட்ரை பண்ணுங்க. எரர் வரும். கம்ப்யூடரை ஆஃப் பண்ணிவிட்டு எழுந்து போய்விடுங்க. ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் இதே மாதிரி, மறுபடியும் எரர். இப்படியாக வேறு வேலை இல்லாமல், முயற்சி செய்துகொண்டே இருந்தால் ( எனக்கு இன்றைக்கு வேறு வேலை இல்லை ) ஏதாவது ஒரு தடவை பதிவாகிவிடும். அவ்வளவு பொறுமை வேண்டும்.

திபா ரவை கஞ்சி கீரை கிளிக் பண்ணுங்க அதில் குறிப்பில் எழுதிருப்பேன்,
உங்களுக்கும் தளிகாவிற்கும் பதிலை எட்டு முறை டைப் பண்ணி அனுப்ப முடியல
ஜலீலா

Jaleelakamal

மாலதி அன்ரி, அதே....அதேதான்...
நானும் ஏதோ அலுவல்களுக்கிடையில் எட்டிப்பார்த்தால் எமது சகோதரிகள் கதைத்துக் கொண்டிருப்பது தெரியும், மனம் கேட்காமல் ஒன்றைப் பதிவு செய்தால் அது பந்துபோல் திரும்பி என்னிடமே வருகிறது.... இருந்தாலும் அறுசுவை ஊடாக எமது பொறுமையை இப்படிச் சோதிப்பது நல்லதல்ல.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

anbudanஹாய் மாலதி,

நலமா? நலமே. உங்கள் குடும்பம் எப்படி உள்ளது? நீங்கள் அதிராவிற்கு அருசுவையில் எவ்வாறு பதிவு போடுவது என சொல்லி கொடுத்ததை படித்துவிட்டு மிகவும் சிரித்துவிட்டேன். வெடிச்சிரிப்புதான். நல்ல ஜோக் மாலதி. நன்றி, மீண்டும் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

ஹலோ மாலதி வந்துடேம்பா எப்படி இருக்கீங்க? சாப்பாடு காம்பினேசனுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்பா,சாப்பாட்டில் காம்பினேசன் பார்த்து எல்லாம் சமைப்பதில்லை(தினமும் சமைச்சாதானே!) வீட்டில் உள்ளவர்களின் நிலைமைக்கு ஏற்றவாறு தான் சமையல். முக்கியமாக எனக்கு பிடித்த அயிட்டங்கள் அத்தானுக்கு பிடிக்காது, அவருக்கு பிடித்த காரமேயில்லாத சமையல் எனக்கு அலர்ஜி. தினமும் பருப்பு குழம்பு,ஒரு கீரை,அசைவம் ஒரு அயிட்டம் இருந்தால் போதும் சந்தோசமாக சாப்பிடுவார் மற்றபடி சைடிஷ் எதுவும் சாப்பிட மாட்டார். என் மக்களும் அம்மாவின் சமையலைப் பாராட்டுவதோடு சரி, சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.ஆனல் எனது செல்லம் டைகருக்கு அம்மாவின் சிக்கன் குழம்பு என்றால் உயிர். மற்றபடி விசேசமான தருனங்களில் மட்டும் பார்த்து பார்த்து மெனு போடுவதுண்டு,சரி விடுங்க உங்களுக்காக அன்றும் இன்றும் என்றுமே எனக்கு பிடித்த சிம்பிலான காம்பினேஷனை சொல்கின்றேன்.

1.இட்லிக்கு நேற்று வெச்ச மீன் குழம்பு அல்லது மட்டன் குருமா. சைவத்தில் வட கறி, வேர்கடலை சட்னி மட்டும்.
2..தோசைக்கு தக்காளி சட்னி மட்டும் தான் பிடிக்கும்.
3.உப்புமாவிற்க்கு எலுமிச்சை ஊறுகாய்.
4.பூரிக்கு சன்னா மசாலா, உருளைகிழங்கு தக்காளி மசாலா.
5.பொங்களுக்கு பொட்டுகடலை சட்னி.
6.ஆப்பம் தேங்காப்பால்
7.சப்பாத்திக்கு துருவிய பீட்ரூட் பொரியல்,தக்காளி குருமா.
8.முட்டபரோட்டா சிக்கன் கறி.
9.கீரைகுழம்பிற்க்கு கருவாடு வறுவல்,எண்ணெய் கத்திரிக்காய்.
10.பருப்பு குழம்பிற்க்கு மீன் வறுவல் மட்டும் தான்.
11.கார குழம்பு கோஸ் பொரியல் அப்பளம்.

இது எல்லாவற்றையும் விட தயிர் சாதத்தில் பருப்பு குழம்பு கலந்தது ரொம்ப ரொம்ப பிடிக்கும்,ஏன்னா இந்த குறிப்பு தான் எங்க குடும்பத்தை இணைத்து வைத்திருப்பது. எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி மனதாங்கல் ஏற்படும் போதெல்லாம் என்னைவிட அவர் அதிகமாக கோபித்துக் கொள்வார் அப்போதெல்லாம் எனக்கு துணையாய் இருப்பது இந்த காம்பினேஷன் தான் உருட்டி உருட்டி என்னை திட்டிய வாய்க்கு ஊட்டிவிடுவேன், சில நேரங்களில் ஊட்டும் போது சாப்பிட்டுக் கொண்டே திட்டுவார் என்னச் செய்வது அவருக்கு திட்ட மட்டும் தான் தெரியும் சமாதானம்... நான் செய்தால் தான் உண்டு. மேலும் பிள்ளைகளையும் ஐஸ் வைக்க உதவும் ஒரே குறிப்பு என்பதால் எனக்கும் பிடிக்கும்.

என்ன மாலதி இதெல்லாம் ஒரு காம்பினேஷனா!! ஏன்டா கேட்டொம்ன்னு இருக்கா நான் என்ன வெச்சிக்கிட்டா இல்லன்னு சொல்றேன்!!!!

மேலும் சில பதிவுகள்