இடியாப்பம் (இனிப்பு)

தேதி: February 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பச்சரிசி மாவு -- 1 கப்
உப்பு -- ருசிக்கேற்ப
கொதிக்கும் தண்ணீர் -- தேவையான அளவு
தேங்காய் துருவல் -- 1 கப்
நல்லெண்ணைய் -- தேவையான அளவு
சர்க்கரை -- ருசிக்கேற்ப


 

பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரை ஊற்றி நன்கு பிசைந்து பிழிவதில் போட்டு இடியாப்பமாக இட்லி தட்டில் பிழிந்து அதை வேகவைக்கவும்.
அத்னுடன் தேங்காய் துருவல், நல்லெண்ணைய், சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
பால் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நான் முதல் தடவயா இடியாப்பம் செய்யபோரேன். இந்த மாவு எந்த பததுக்கு பினயனும் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

இன்னைக்கு ராத்திரிக்கு ட்ரை பன்னி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்ரேன்.

அன்பு தோழிகளுக்கு,

இடியாப்ப மாவு தண்ணீர் சேர்த்து பிசைந்தால் பூரி மாவு பதத்திற்கும் கொஞ்சம் நெய்த்தியாக பிசைந்து பிழியவும் .
மிகவும் ருசியான இடியாப்பம் கிடைக்கும்.
நன்றி