புளிச்சட்னி

தேதி: February 25, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் துருவல் - அரை கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - தாளிக்க
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி


 

வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் பெரிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், சீரகம், புளி, உப்பு, கறிவேப்பிலை மற்றும் வறுத்து வைத்துள்ள பொருட்கள் ஆகியவற்றை சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயம், சிறிது கறிவேப்பிலை தாளித்து பின் அரைத்த விழுதையும் சேர்க்கவும்.
மேலும் சிறிது நீர் சேர்த்து மூடிப் போட்டுக் கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து சுருண்டு வந்தவுடன் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து இறக்கவும்.
சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.


இந்த சட்னியில் சிறிது எண்ணெய் அதிகம் சேர்த்து செய்தால் 4 - 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

Tomorrow I am planning to make this for idli. Thank you for this.

Thanks and all the best for u

Srigeetha Mahendran

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

Hi,

I am also living in Japan near Tokyo. I tried this receipe and it came out very well. I am here for the past 7 months. I like fish very much, but here I don't know how to buy a good fish brand something like Indian. I have tried once, but it was a great flop. We didn't like that fish. Can u pls guide me which fish to buy and give me some buying tips, because here in the department stores, no one know a bit of English to get help. Thanks in advance.

Sanju

ஹாய் சஞ்சு
மீன் தொட்டால் கள்ளு மாதிரி இருக்கனும் , கொழ கொழன்னு உள்ள போனால் அது பழசு.
கதிஜா ஜப்பானில் தான் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள். எப்படி எங்கு நல்ல இருகும் என்று.
ஜலீலா

Jaleelakamal

Jaleela thanks for your reply but my problem is not finding a good fish, but finding a fish, which tastes good. There are minimum 50 types of fishes available in the stores here, so I don't know how to select a fish, which tastes like our Indian. I have already searched some forums about fish in arusuvai, including your's, but that didn't help me.so somebody pls explain. Kadheja pls help me out on this.

Sanju

Thanks for ur feed back.I am living in yokohama.I am here for the past 1.5 years.U can buy sakke nd saba fish.I use to buy this fish only.For making fish gravy saba is good.For making fish fry like items sakke is good.
Sakke is red in color with black skin.It is available as cut pieces which is approximately length in 6" .And saba is silver with black in color.It is available as whole fish not cut.
In Japanese for fish "sakana".So that u can ask to the shop helpers as "sakke sakana or saba sakana".Try this and give me the feedback.

Unill u learn japanese for communication,Just hv one pocket dictionary(english to japanes) with u so that u can easily convey ur needs to them.

Regards,
Srigeetha Mahendran

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

I will try out this and let u know the result. As u told, I usually have a dictionary with me, but I don't about the fishes here that's problem. Anyway, thank u for ur suggestion.

Sanju

கதிஜா

எங்கு இருந்தாலும் வந்து சஞ்சுவுக்கு மீனை பற்றி சொல்லுங்கள்.
ஜப்பானில் மீன் எங்கு நல்ல இருகும் எந்த மாதிரி பேர் உள்ள மீன் வாங்கனும் என்பதை விளக்கவும்.
ஜலீலா

Jaleelakamal