ராஜ்மா கேரட் கறி

தேதி: February 25, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிகப்பு பீன்ஸ் - 1 கப் (ஊற வைத்து வேக வைத்தது)
கேரட் - 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
குடை மிளகாய் - 2
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு


 

வாணலியில் சிறிது நீர் ஊற்றி கொதிக்க விட்டு கேரட், முக்கால் பாகம் வெங்காயம், தக்காளி, சிறிது உப்பு சேர்த்து 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.
அதை ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதியுள்ள வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்க்கவும்.
மேலும் சிறிது நீர் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் வேக வைத்துள்ள சிகப்பு பீன்ஸ் போட்டு 7 நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியில் நறுக்கிய கொத்துமல்லி தூவி இறக்கவும்.
இந்த கறி பூரி, சப்பாத்தி போன்றவற்றிற்கு சைட் டிஷ் - ஆக சாப்பிட சுவையாக இருக்கும்.


இதில் சிகப்பு பீன்ஸ்-க்கு பதிலாக வெள்ளை மூக்குக்கடலை அல்லது பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு பயன்படுத்தியும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்