புது டாபிக் தேவை

மனோகரி, ஜலீலா, தளிகா, செல்வி, ஜெயந்தி மற்றும் எல்லோரும் இங்க வாங்க. வந்து புதிதான, சுவாரசியமான நியூ டாபிக் எதாவது ஓபன் பண்ணுங்கள். நல்ல இன்டரஸ்டிங்காக இருக்கவேண்டும். நான் யோசித்து யோசித்து பார்த்தேன் ஒன்றும் புதிதாக தோன்றவில்லை. அருசுவைக்கு இளவயதினர் எல்லாம் நிறைய பேர் வந்திருகிறார்கள் போலிருக்கிறதே. அவர்களுடைய புதுமையான தலைப்பையும் கேட்போம். எது நன்றாக இருக்கிறதென்று பிறகு முடிவு பண்ணிக்கொள்வோம். என்ன சரிதானே சகோதரிகளே!......

மாலதிக்கா சாரி..தேடி தேடி இப்ப இங்கயே போடுகிறேன்..
அன்புள்ள மனோஹரிச் சேச்சி...நலமாக இருக்கிறீர்கள் இல்லையா.
முன் ஒரு நாள் எனக்கு ஒரு பதிவைப் போட்டீர்களே அதை நான் படித்தேன்///பிறகு பதில் போட அதை எங்கு சென்று தேடவென்று தெரியல.ஆனால் அது குறித்து சீரியசாக உங்களுடன் பேசனும்.
குறைந்த இடைவெளி உள்ள குழந்தைகளை சமாளிக்க ஈசி என்று சொன்னீகள்..எப்படி??எனது தீர்மானம் முதல் குழந்தைக்கும் இரண்டாவதுக்கும் 3 வயது வித்யாசமாவது இருக்க வேண்டுமென்று இருந்தது..பிறகு சில சமயம் 8 வருடம் அப்படி நல்ல இடைவெளி இருந்தாலும் நல்லது என்று தோன்றியது..பிறகு உங்களது பதிவிற்கு பின் அதுவே தான் நினைவுக்கு வருகிறது..ஆனால் மனதில் தைரியம் இல்லை...ஒன்னே இந்த ஆட்டம் போடுது.இவளை சமாளிக்கவே எனக்கு க்லூகோஸ் குடிக்கனும்..இதில் 2 வந்தால் கவனிக்கமுடியுமா..நீங்க தரப்போற தைரியத்தில் தான் நான் மட்டுமல்ல மற்றவர்களும் களத்தில் இறங்குவார்கள்.
பல சமயமும் அவள் போர் அடிச்சு போயிடறா அப்ப பாவமாக இருக்கும் இன்னொரு குழந்தை இருந்தால் அவளுக்கு துணை ஆகுமே என்று தோன்றும்...அது எனக்கு இப்பொழுது அடிக்கடி தோன்றுகிறது..
ஆனால் எனக்கு
1 பயம்..
1) இரண்டு குழந்தைகள் வந்தால் மூத்த குழந்தை திடீரென ஃபீல் பன்னுமா ..நம்மால் சரியாக கவனிக்க முடியுமா
2) இரண்டும் சின்ன குழந்தைகளாக இருந்தால் சிறிய குழந்தை மேல் எப்பொழுதும் ஒரு கண் வேண்டாமா..எதையாவது செய்து விட்டால்..இவள் கொஞ்சம் அசந்தால் குட்டி குழந்தைகளை அப்படியே தூக்கி விடுவாள்..இல்லையென்றால் கண்ணில் மூக்கில் குத்திப் பார்ப்பாள்.அது போன்ற பயமெல்லாம் வருமே.
அப்படி பல பல குழப்பம் மனசில்..நீங்க தான் க்லியர் பன்னனும்..பிறகு எனக்கு யோசிக்கனும்..ப்லீஸ் ப்லீஸ் ப்லீஸ்

டியர் ரூபி,
இது தான் நானும் நினைப்பது ...
திவாகருக்கு 2 வயது முடிந்து விட்டது... வீட்டில் கூட இது தான் சரியான சமயம் என்கிறார்கள்..
இவனை ஸ்கூலுக்கு அனுப்பிய பின் குழந்தையை கவனிக்கலாம் என்றும், ஸ்கூலை வைத்துக்கொண்டு ஊருக்கு போய் இன்னொரு குழந்தையை கவனிக்க (நாம் ரெஸ்ட் எடுக்க) முடியாதே என்ற பயமும்...
"இருதலை கொள்ளி எறும்பு" (மாலதி மேடம் கவனிக்க) போல இருக்கிறேன் ...
ரூபி அட்வைஸ் ப்ளீஸ்.. :-)
திவாகருக்கும் ஒரு கம்பெனி தேவை...

பக்கத்து வீட்டு பசங்க வந்தால் அக்கா, அண்ணா என ஓடி விடுகிரான்...

ஒரு வாரம் முன் துபாய் "Festival City IKEA"விற்கு சென்று இருந்தோம்... அங்கே ஆஸ்ட்ரேலியன் ஃபேமிலி வந்து இருந்தார்கள்..
அந்த பையனுக்கு 3 வயதாவது இருக்கும்... அங்கே உள்ள் ப்ளேஏரியாவில் விளையாடும் போது இருவரும் விளையாட அந்த பையன் அவன் அம்மாவிடம் செல்ல திவாகர் "அண்ணா அண்ணா" என கத்திக் கொண்டே பின்னாடியே ஓடுகிறான் அவனுக்கு என்ன தெரியும் இந்த வயதில் அப்போ இவர் சொல்கிறார்...

தம்பி, தங்கச்சின்னா முயற்சி பண்ணலாம் அண்ணா,அக்காவிற்கு எங்கே போறதுன்னு??? :-)

சொல்லுங்க..

ஆமா சுபா..அதே தான் இவளுக்கும் இவள் வயதொத்த குழந்தைகளை விட ஒரு 5 ,6 வயது பிள்ளைகளைத் தான் பிரியம்..எனக்கும் வருத்தமாக இருக்கிறது ஆனால் ஒரு முடிவு எடுக்க பயம் வேறு..
கர்ப்பமாக இருக்கிறப்ப முதல் குழந்தைக்கு நல்ல கவனம் எடுத்திக் கிட்டோம்..ஆனால் இனி கர்ப்பமானால் அவ்வளவு கவனிக்க முடியாது நம்மை...
நேற்று எனது வீட்டருகில் உள்ள குழந்தையை பார்த்து எனக்கு ரொம்ப ஆசையாக போய்விட்டது..என் பொண்ணும் பேபி பேபின்னு குழந்தையை பத்தியே பேசி நான் ஒரு பேபி டாள் வாங்கிட்டு வந்தேன்...அதன் பின் தான் இப்படி யோசிக்கிறேன்..
இவங்களுக்கு கம்பெனிக்கு குழைதையை கொடுக்கப் போய்" நமக்கு கவனம் குறைந்து விட்டதே "என்று ஃபீல் பன்னுவாளோ என்று நானே யோசித்து தேவையில்லாமல் சில சமயம் எனக்கு துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்ளும்..இந்த விஷயத்தில் எனக்கு ஒரு முடிவு எடுக்க முடியல.
இரண்டு பிள்ளை வந்த பின் என்னால் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்..
எனது கசினுக்கு மூத்த பைய்யனுக்கு 2.5 வயதுள்ளப்ப இரண்டாவது பொண்ணுக்கு இங்க வச்சு பிறந்தது..அன்று ஹாஸ்பிடலில் ராத்திரி எல்லாரையும் காலி பன்னி போக சொன்னப்ப அந்த முதல் குழந்தை போக மாட்டேன் என்று அம்மாவை கட்டிப் பிடித்து அவளும் அழுதாள் பார்த்து நின்ற நானும் ஏனோ அழுது விட்டேன்..எனக்கு அதுவே நினைவுக்கு வருகிறது.
கொஞ்சம் பெரியதானால் பேசாமல் வீட்டுக்கு மற்ற யாருடனாவது போய் படுத்துக் கொள்ளும்..இப்பொழுதே நான் மெல்ல ரீமாவை அப்பாவுடன் தூங்க பழக்கிக் கொண்டிருக்கிறேன்..இப்ப ஓரளவு பழகிக் கொண்டாள்.

எனக்கு அதெல்லாம் மிக முக்கியமான பிரச்சினை..
பெண் குழந்தை ஈஸியாக அப்பாவிடம் ஒட்டிக் கொள்ளும் ஆனால் நேற்று இவர் ராத்திரி 11 மணிக்கு வந்தார் குழந்தை தூங்கிட்டான்.. காலையில் 6 மணிக்கு கிளம்பிட்டார்.. அப்பவும் இவன் தூங்கிட்டான்.. அப்பா அப்பா என நச்சரிக்கும் இவன் அப்பாவை பத்தி கேட்கவேஇல்லை...

தூக்கம், சாப்பாடி, ஏன் தண்ணி கூட நான் தான் தர வேண்டும் அறுசுவைக்கு வராததன் மற்றொரு காரணம் இவன் என்னை எங்கேயும் நகர விடுவதே இல்லை... 5 நிமிடம் அறுசுவையை காதலுடன் பார்த்து விட்டு சென்றுவிடுவேன்... இல்லை என்றால் கம்ப்யூட்டரை உடைத்து விடுவான்...

இப்போ கொஞ்சம் நன்றாக பேசுகிறான்..."" வரையும் "1 டூ 5 " வரையும் சொல்கிறான்...
"" பண்ணுகிறான் ஆப்பிள், மேங்கோ, க்ரேப்ஸ் கரெக்ட்டாக செய்வான்...

நிறைய தனி வார்த்தைகள் சொல்கிறான்....

எனக்கு வேலை ஜாஸ்தியாக போய்விட்டது... 2 கிலோ இளைத்து விட்டேன்...

என்னுடைய குறிக்கோள் இளைத்து விட்டால் குழந்தை!!
இல்லையேல் இளைத்தால் தான் இன்னொரு குழந்தை !!

அது வரை காலம் தாங்குமா??? :-)

மேலும் சில பதிவுகள்