முள்ளங்கி துவையல்

தேதி: March 1, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் மஹிஸ்ரீ என்ற பெயரில் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்கள் வழங்கியுள்ள குறிப்பு இது.

 

முள்ளங்கி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிது


 

முள்ளங்கியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து சுமார் 5 நிமிடம் பொன்னிறம் ஆகும் வரை நன்கு வதக்கவும்.
அதனுடன் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போடவும்.
அத்துடன் சீரகம் சேர்த்து பொரியவிடவும்.
பின்னர் அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தேங்காய் துருவல், புளி சேர்த்து 1 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
மிக்சியில் முதலில் தேங்காய் துருவல் கலவையை கரகரப்பாக அரைக்கவும். அதன்பின்னர் முள்ளங்கியை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் கொட்டிக் கிளறவும். இப்போது முள்ளங்கி துவையல் ரெடி. சூடான சாதத்துடன் பரிமாறவும்.

இதற்கு சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் எது வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Hello Sree Geetha Madam,

i tried this dish today and it tasted really very good, thanks for sharing this receipe with us.

Thyagu

ஹி ஸ்ரீ கீதா

இது வரை முல்லங்கி துவையல் செய்ததில்லை.
செய்து பார்க்கிறேன்.

அருசுவை தோழிகளே முல்லங்கியில் பல மருத்துவ குணங்கள் இருக்கு.
நிறை பல வியாதிகளை குணப்படுத்தும் என்று
20 வருடம் முன் ஒரு பேப்பரில் படித்தேன்.
பேப்பரும் பத்திரமாக வைத்துள்ளேன் அது கிடைக்கும் போது எல்லாவற்றையும் எழுதுகிறேன்.

-((இது உடம்புக்கு குளிர்ச்சி, பைல்ஸ் பிராப்ளம் உள்ளவர்கள் இதை நல்ல சாப்பிடவும்.))-

ஜலீலா

Jaleelakamal

Hi Brother,

Thaks for ur valuable feedback.

Srigeetha Mahendran

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

Try this receipe nd give ur feedback.

It is very useful information abt radish,which u gave.Thaks a lot on behalf of arusuvai friends.

Ofcourse radish is good for reducing the excess body weight also.It contains fiber,calcium and vitamin C.Some kids dont like to eat radish as a sambar or gravy.So that if we cook it like this we can get all the nutritions as well.

Srigeetha Mahendran

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா மகேந்திரன்,

முள்ளங்கி துவையல் சாததிற்கு ரொம்ப அருமையாக இருந்தது. வித்தியாசமான குறிப்பிற்கு நன்றி.

ஹாய் ஸ்ரீகீதா இந்த துவையலை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. சாதத்துடன் மட்டுமின்றி இட்லி,தோசைக்கும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

செய்து பார்த்து பின்னொட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.....

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஹலோ ஸ்ரீ ,
நான் முள்ளங்கி துவையல் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.ரொம்ப நன்றி.
கவிதா

kavitha

ரொம்ப அருமையா வந்தது... சாம்பார் மட்டுமே வைத்து சாப்பிட்ட எங்களுக்கு மற்றும் ஒரு அருமையான பயன்பாடு....

உங்கள் ரெசிபிக்கு மிக்க நன்றி... நானும் கணவரும் மிகவும் ரசித்து சாப்பிட்டோம்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

I tried this recipe today & it turned out to be very tasty... We had the lil diluted version with dosai & the thick one(no water added) with rice... It was very tasty both ways... Definitely a keeper... Thanks a ton for the recipe...

ரொம்ப நன்றாக இருந்தது. நன்றி.

செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.சமீப காலமாக நான் கொஞ்சம் பிஸியாக இருந்ததால்,பதிலளிக்காததற்கு மன்னிக்கவும்.

மீண்டும் எனது நன்றிகள்.

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

நேற்று நான் இந்த சட்னி செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது.மிக்க நன்றி.

சவுதி செல்வி

this recipe is very nice taste i like very much
one again thanks