பேன் கேக் செய்முறை.

வெளிநாடுகளின் முக்கிய காலை உணவுகளில், இந்த பேன் கேக்கும் ஒன்று என்பதை அனைவரும் அறிவர். அதை நாமும் செய்துப் பார்த்து இந்த வார சன்டே பிரேக்ஃபாஸ்ட்டை வீட்டிலேயே அசத்திடலாம் வாங்க. கீழ்க் காணும் முறை பேஸிக்கான பேன் கேக் முறை.

தேவையான பொருட்கள்: மைதா ஒரு கோப்பை, முட்டை ஒன்று,பால் ஒரு கோப்பை,சர்க்கரை நான்கு தேக்கரண்டி,உப்பு ஒரு சிட்டிக்கை, பேக்கிங் சோடா அரைத்தேக்கரண்டி, பேக்கிங் பவுடர் ஒரு தேக்கரண்டி,எண்ணெய் இரண்டு தேக்கரண்டி போதுமானது

1.முதலில் முட்டையை உடைத்து மஞ்சட் கரு,வெள்ளைகரு வேறாக பிரித்து வைக்கவும்.

2.அகலமன கோப்பை ஒன்றில் மைதாவுடன் உப்பு, சர்க்கரை பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடரைச் சேய்த்து கலக்கவும். பிறகு பால் மற்றும் முட்டைய்ன் மஞ்சட் கருவையும் சேர்த்து, அனைத்தையும் கரண்டியால் நன்கு கலக்கி வைக்கவும்.

3.பின்பு எடுத்துவைத்துள்ள வெள்ளைக்கருவை நன்கு நுரைக்க அடித்து மாவுக் கலவையில் சேர்த்து மெதுவாக கலக்கவும்.

4.பின்பு தோசைக் கல்லில் சிறிது எண்ணெயைத் தடவி மாவுக் கலவையிலிருது ஒரு கரண்டி மாவை அதில் ஊற்றவும், தேய்க்க வேண்டாம் அதுவாக பரவிக் கொள்ளும். கல்லின் அளவிற்க்கேற்றவாரு ஒன்றுக்கும் மேல் ஊற்றலாம். எண்ணெய் ஊற்ற வேண்டாம் கல்லில் ஒட்டியிருக்கும் எண்ணெய் போதுமனது.ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு இளஞ்சிவப்பாக சுட்டு எடுக்கவும்.

மேற்கூறிய அளவில் ஒரு கரண்டி மாவு வீதம் எட்டு பேன்கேக்குகள் செய்யலாம்,இதனுடன் வெண்ணெய்,மேபில் சிரப், மற்றும் பிடித்தமான பழங்களுடன் பரிமாறலாம்.

இதன் மாற்று முறையாக பாலுக்கு பதில், நன்கு அடித்த மோரும் சேர்த்து செய்யலாம் அல்லது ஒரு மேசைக்கரண்டி தயிர் சேர்த்தும் செய்ய்லாம். மேலும் அவரவருக்கு பிடித்தமான பழங்களைச் சேர்த்தும் செய்யலாம்.வாழைப்பழத்தை சேர்த்து செய்வது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

இதிலுள்ள ஒரு சில நுனுக்கங்களையும் கூறுகின்றேன்.

1. முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் அடித்து ஊற்றக்காரணம் அவ்வாறு நுரைக்க அடிக்கும் பொழுது அதனுடன் சேறும் காற்று பேன் கேக்கை பஞ்சுப் போல் மெத்தென்று இருக்க உதவுகின்றது.

2. அடுப்பின் அனல் மிகமிக முக்கியம். தோசைகல் சூடேரும் வரை அனல் இருந்தாலே பொதுமானது, மற்றபடி கிட்டத்தட்ட சிம்மில் இருப்பது நல்லது. இல்லையென்றால் மாவு நின்னு வேகாமல் ஊற்றிய சீக்கிரத்தில் தீய்ந்துவிடும்.

3. மாவுக் கலவையில் திடப் பொருட்களைச் சேர்த்து அனைத்தையும் ஜல்லடையால் ஜலித்து வைத்தாலும் நல்லது,இதனால் மாவு ஒரே சீராக கலக்கியிருக்கும்.

4.மாவை அகலமான கோப்பையில் கலக்குவதால் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து கலக்கும் பொழுது அதிகமாக கலக்கத்தேவையிருக்காது.

டியர் மனோ மேடம்.

வாவ் ரொம்ப் தாங்ஸ். நான் நாளெக்கு ப்ரின்ட் எடுத்து பிறகு செய்து குடுத்து உங்க்ளுக்கு பதில் பன்றேன். என்னிட்ம். தற்போது மைதா இல்லை. அதுக்காக வைட் பன்னவேண்டி உள்ளது. இல்லை என்றால் நான் உடனேயே பன்னீரூப்பேன். நாளே உங்க்ளை சந்திக்கிரேன். தாங்ஸ்.

Portia Manohar
i tried this recipe just now it came out very well. my son always ask me to prepare pan cake,instead i'll take him out and buy for him.
i thought to give it a try at home and i succeeded in it. mostly i dont like the pan cake taste,but when i made it i had 3.
really good taste.
Thanks for your recipes and your contribution towards arusuvai.

Portia Manohar

மனோஹரி மேடம் ..நீங்க சொன்ன படி நான் பிரெட் கிராம்ஸ் செய்தேன் ..
அதை எத்தனை நாள் வரை வைத்து உபயோகிக்கலாம் ???
ஆனால் எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் bread ல இருந்து rusk செய்யலாம் னு ஒரு ஐடியா ஒரு த்ரெட் ல இருந்துது .. அதை செய்யலாம்னு நினைத்தேன் .. எனக்கு bread toast பண்ணினா அது rusk போல ஹார்டா இல்ல .. ஆனால் கொஞ்சம் hardness irukku.. its not like normal bread soft..
என் சந்தேகம் ..இது தான் அந்த rusk aa?? மேலும் நான் சொல்வது போல் பிரெட் toast செய்து எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம் ?? மாலை யில் சாப்பிட தான் தேநீருடன் ..

Its seems to be very nice,while seeing this receipe.I will try this at my home and give u the feed back.
I have one doubt on this.In this "ஒரு கோப்பை" means how much.
Pls tell me.......

Srigeetha

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

டியர் விஜி நீங்க இந்த குறிப்பை எப்போ சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ அப்போது செய்துபார்த்து கூறுங்கள் அவசரம் வேண்டாம் பொருமையாக கற்றுக் கொள்ளுங்கள் சரியா.

ஹலோ போர்ஷியா எப்படி இருக்கிங்க? நீங்க சொல்வதுப் போல் இந்த குறிப்பு மிகவும் நன்றாக இருக்கும், எவ்வளவு நேரமானாலும் சாப்ட்டாகவே இருக்கும்.அதுசரி முதல் அட்டம்ட்டிலேயே மூன்றா! அப்படீன்னா இந்த குறிப்பு சக்ஸஸ் தான்.செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்க்கு மிக்க நன்றி.

ஹலோ மகிஸ்ரீ எப்படி இருக்கீங்க? இந்த குறிப்பு மிகவும் சுலபமான குறிப்பு தான்,ஆனாலும் கொஞ்சம் சிரத்தை எடுத்தால் போதும் நல்ல ரிசல்ட் கிடைக்கும். "ஒரு கோப்பை" என்பது 250ml கொண்ட கொள்ளளவு. அல்லது ஒரு மீடியம் சைஸ் டீ கப்பைக் கூட பயன்படுத்தலாம்.மாவை அளக்கும் பொழுது கப்பில் மாவை அழுத்தி நிரப்பி அளக்க கூடாது, கப் நிரம்பும் வரை மாவை அதில் சேர்த்து கப்பைச் சற்று அசைத்தால் போதும் சரியான அளவாக இருக்கும்.இல்லாவிடில் அளவு அதிகரித்துவிடும்.

டியர் பாலம்மு உங்க டீ ரஸ்க் குறிப்பை வேறோரு லிங்கில் தருகின்றேன் ஒகே. வீட்டில் செய்த பிரட் க்ரம்ஸ்ஸை ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள் அல்லது ஃபீஸரில் வைத்துவிட்டாலும் வருடக் கணக்கில் வைத்துக் கொள்ளலாம் என்னைப் பொருத்தவரையில் எதையுமே தேவைக் கேற்ப்பச் செய்து உடனுக்குடன் செலவுச் செய்து விடுவது நல்லது.

பிரட் ரஸ்க் கீழ் காணும் லிங்கில் உள்ளது செய்துபார்த்து எப்படி வந்ததென்று கூறவும். எனக்கு ரெய்ஸின் ஹோல் கிரைன் பிரட்டில் செய்த ரஸ்க் பிடிக்கும். http://www.arusuvai.com/tamil/forum/no/7791

Portia Manohar
Hello Manohari mdm ippa kooda pan cake seithu koduthutu than lap top open panninen.ennakum breakfast pan cake than,indha thadavai eppadiyum 4 ulla poyidum. my son is enjoying his breakfast now,he is saying amma yummy yum.
thanks to u.

Portia Manohar

Thanks for ur response.I will try this in this week end.

Srigeetha

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

மேலும் சில பதிவுகள்