பேன் கேக் செய்முறை.

வெளிநாடுகளின் முக்கிய காலை உணவுகளில், இந்த பேன் கேக்கும் ஒன்று என்பதை அனைவரும் அறிவர். அதை நாமும் செய்துப் பார்த்து இந்த வார சன்டே பிரேக்ஃபாஸ்ட்டை வீட்டிலேயே அசத்திடலாம் வாங்க. கீழ்க் காணும் முறை பேஸிக்கான பேன் கேக் முறை.

தேவையான பொருட்கள்: மைதா ஒரு கோப்பை, முட்டை ஒன்று,பால் ஒரு கோப்பை,சர்க்கரை நான்கு தேக்கரண்டி,உப்பு ஒரு சிட்டிக்கை, பேக்கிங் சோடா அரைத்தேக்கரண்டி, பேக்கிங் பவுடர் ஒரு தேக்கரண்டி,எண்ணெய் இரண்டு தேக்கரண்டி போதுமானது

1.முதலில் முட்டையை உடைத்து மஞ்சட் கரு,வெள்ளைகரு வேறாக பிரித்து வைக்கவும்.

2.அகலமன கோப்பை ஒன்றில் மைதாவுடன் உப்பு, சர்க்கரை பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடரைச் சேய்த்து கலக்கவும். பிறகு பால் மற்றும் முட்டைய்ன் மஞ்சட் கருவையும் சேர்த்து, அனைத்தையும் கரண்டியால் நன்கு கலக்கி வைக்கவும்.

3.பின்பு எடுத்துவைத்துள்ள வெள்ளைக்கருவை நன்கு நுரைக்க அடித்து மாவுக் கலவையில் சேர்த்து மெதுவாக கலக்கவும்.

4.பின்பு தோசைக் கல்லில் சிறிது எண்ணெயைத் தடவி மாவுக் கலவையிலிருது ஒரு கரண்டி மாவை அதில் ஊற்றவும், தேய்க்க வேண்டாம் அதுவாக பரவிக் கொள்ளும். கல்லின் அளவிற்க்கேற்றவாரு ஒன்றுக்கும் மேல் ஊற்றலாம். எண்ணெய் ஊற்ற வேண்டாம் கல்லில் ஒட்டியிருக்கும் எண்ணெய் போதுமனது.ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு இளஞ்சிவப்பாக சுட்டு எடுக்கவும்.

மேற்கூறிய அளவில் ஒரு கரண்டி மாவு வீதம் எட்டு பேன்கேக்குகள் செய்யலாம்,இதனுடன் வெண்ணெய்,மேபில் சிரப், மற்றும் பிடித்தமான பழங்களுடன் பரிமாறலாம்.

இதன் மாற்று முறையாக பாலுக்கு பதில், நன்கு அடித்த மோரும் சேர்த்து செய்யலாம் அல்லது ஒரு மேசைக்கரண்டி தயிர் சேர்த்தும் செய்ய்லாம். மேலும் அவரவருக்கு பிடித்தமான பழங்களைச் சேர்த்தும் செய்யலாம்.வாழைப்பழத்தை சேர்த்து செய்வது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

இதிலுள்ள ஒரு சில நுனுக்கங்களையும் கூறுகின்றேன்.

1. முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் அடித்து ஊற்றக்காரணம் அவ்வாறு நுரைக்க அடிக்கும் பொழுது அதனுடன் சேறும் காற்று பேன் கேக்கை பஞ்சுப் போல் மெத்தென்று இருக்க உதவுகின்றது.

2. அடுப்பின் அனல் மிகமிக முக்கியம். தோசைகல் சூடேரும் வரை அனல் இருந்தாலே பொதுமானது, மற்றபடி கிட்டத்தட்ட சிம்மில் இருப்பது நல்லது. இல்லையென்றால் மாவு நின்னு வேகாமல் ஊற்றிய சீக்கிரத்தில் தீய்ந்துவிடும்.

3. மாவுக் கலவையில் திடப் பொருட்களைச் சேர்த்து அனைத்தையும் ஜல்லடையால் ஜலித்து வைத்தாலும் நல்லது,இதனால் மாவு ஒரே சீராக கலக்கியிருக்கும்.

4.மாவை அகலமான கோப்பையில் கலக்குவதால் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து கலக்கும் பொழுது அதிகமாக கலக்கத்தேவையிருக்காது.

அன்புள்ள சகோதரி மனோகரிக்கு
நலமாக இருக்கீங்களா?பான் கேக் செய்முறையை அழகாகவும் அதன் செய்முறை நுனுக்கங்களை விரிவாகவும் விளக்கியுள்ளீற்கள் நான் போன சனிக்கிழமை செய்து பார்த்தேன் அருமையாக வந்தது குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்!ரொம்ப நன்றி உங்களுக்கு!அப்புறம் இவ்வளவு நல்ல குறிப்பை தாங்கள் கூட்டாஞ்சோரு பக்கத்தில் சேர்த்துவிடுங்களேன்!விரும்புபவர்கள் செய்து பார்க்க உங்கள் பக்கத்திர்க்கு போய் செய்ய உதவியாக இருக்கும்!நானும் மன்றத்தின் உள்நுழைந்து தேடி வெளியில் எடுத்து செய்தேன்! மீண்டும் நன்றிகள்!

டியர் சிஸ்டர் ரஸியா நான் நலமாக இருக்கின்றேன் நீங்களும் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். நீங்க இந்த பேன் கேக்கை செய்து பார்த்து பின்னுட்டம் அனுப்பியது மகிழ்ச்சியைத் தந்தது.செல்வியும் நீங்க சொன்னதையே தான் சொன்னாங்க ஆகவே இந்த குறிப்பை கூட்டாஞ்சோற்றில் விரைவில் இணைத்துவிடுகின்றேன், நமது தளசர்வர் இன்று மிகவும் ஸ்லோவாக இருக்கின்றது காலையிலிருந்து பதிவுகள் போட முயற்ச்சித்து இப்போது தான் முடிந்தது. தங்களின் கருத்துக்கு எனது பணிவான நன்றிகள்.

அன்பு சகோதரி பர்வீன் பானு எப்படி இருக்கீங்க? உங்களோடு பேசி அதிகநாளாகிவிட்டது என்னாலும் அதிகமாக அறுசுவையில் பங்கெடுக்க முடியவில்லை, இருந்தாலும் நேரத்திற்கேற்றார்ப் போல் அடிக்கடி வந்தவண்ணம் இருக்கின்றேன். இந்த பேன்கேக் குறிப்பை செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி,உங்களைப் போன்ற அறுசுவை அன்புள்ளங்களுடன் பேசுவதே மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது, ஒகே டியர் மீண்டும் சந்திப்போம்.

மனோஹரி மேடம் நலமா ??
நாங்கள் நலமே..
இந்த பதிவில் தான் அனுப்ப முடிகிறது..

என் மகன் உங்களுக்கு theriumey 14 மாதங்கள் ஆகிறது ..
அவன் சில காய்கள் ,கனிகள் எல்லாம் அப்படியே சாப்பிட விரும்புகிறான் ..
ஆனால் அது அவன் stool இல் அப்படியே வருகிறது ..சில காய்கள் தான் அப்படி.
நான் அதை தொடர்ந்து கொடுகவா ?? போக போக சரியாகும் என சொல்கிறார்கள் ..

ஜூஸ் போட்டு கொடுத்து பழகி விட்டு அப்புறம் சாபிடுவதில்லை என வருத்த படுவேனு தோனுது ..

நீங்க என்ன சொல்ரிக ??? நான் செய்வது சரியா ??

அவன் நீர் குடிக்க டம்ப்ளர் கேட்கிர்றான் .. ஆனால் அது போரை ஏறுகிறது ..
என்ன செய்ய ??
அப்படி தான் பழகு வாரகளா ??

எங்க நீங்க சென்ருவிடுவீர் கலோனு ..அவசரம் அவசரமா அனுப்புகிறேன் ..

டியர் பாலம்மு ரொம்ப சந்தோசம். உங்க குழந்தையின் பெயர் என்ன? குழந்தைகளுக்கு சரியாக மென்று சாப்பிட தெரியாததால் கெட்டியான பொருட்கள் அப்படித்தான் வரும் அதற்காக அவர்களாக சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம் குழந்தை வளர வளர ஜீரண சக்தி அதிகரித்து சரியாகும் ஆகவே பயப்பட வேண்டாம். இடையிடையே ஜூஸ்ஸும் கொடுங்கள், நீர் பொறையேராமல் இருக்க குழந்தையின் தலையை மெதுவாக சாய்த்து குடிக்க பழகுங்கள், மேலும் உறிஞ்சி குடிக்கும் ஸ்ராவுடன் கூடிய டம்ளர்ஸ்ஸைப் பார்த்திருப்பீர்கள் அதைலும் நீர், ஜூஸ், பால்கூட அதிலூற்றி குடிக்க கொடுக்கலாம் இதில் பொறையேறாது. நன்றி.

மனோஹரி மேடம் .. ரொம்ப நன்றி .
உங்க பதிலுக்காக தான் காதிருதேன்..
என் மகன் பெயர் மகிழ்வாணன் ..
அவனை மகிழ் என்று அழைப்போம் .
ஒரு குழந்தையை தாய் நன்றாக வளர்கிறாள் என்று எப்படி தெரிந்து கொள்வது ??

அவனுக்கு இப்போ அடம் பிடிக்கும் குணம் ஆரம்பிக்கிறது ..
அவன் அவ்வாறு செய்வதை அவன் அழும் விதத்தில் நன்றாக தெர்யும் ..
என் நண்பி அவன் அழட்டும் விடு விடுங்கள் .. செல்லம் வேண்டாம் ..
அவனாகவே அழுது பார்த்து விட்டு உங்களிடம் வருவான் ..அப்போ தூக்கி கொள்ளுங்கள் என்கிறாள் ..அவள் சொல்வது சரியா ..??

என் அம்மா நி அவனை இதில் கையை வைகதே ..என்றெல்லாம் அழ வைத்தால் உன் மேல் அன்பு இல்லாமல் போகும் என்கிறார் ..இது சரியா ??

நான் அன்பாக கூறி நாளும் அவன் கேட்பதில்லை .. காரணம் இன்னும் அவன் பூரிந்து கொள்ளும் வயதில் இல்லையே ...

உதாரணமாக :- வெளியில் விளையாடும் பொழுது .. கார் வரும் ..அப்பொழுது நான் சென்று தூக்கினால் உடனே அழுகிறான் ..
நான் காய் நறுக்கும் பொழுது கத்தி வேண்டும் ..
அருசி எடுத்து கீழ போட்டு விளையாடனும் ..

என்ன செய்ய ?/
நான் அவனை நன்றாக வளர் கிரேனா என்று எப்படி தெரிந்து கொள்வது

ஒருவரையும் மறக்காமல் பதில் அனுப்புகிறீர்கள்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்புள்ள மனோஹரி மேடம் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா. மேடம் நேற்று நான் உங்களுடைய பேன் கேக் செய்தேன் நல்ல பஞ்சு போல மிகவும் நன்றாக வந்தது. எனது பையன் விரும்பி சாப்பிட்டான் மிக்க நன்றி மேடம்.நேற்றே பதிவு போட எனக்கு அறுசுவை கிடைக்கவில்லை இப்பொழுதுதான் அறுசுவை சரியானது அதனால் தான் இப்பொழுது உங்களுக்கு பதிவு போடுகிறேன். தளிகா சொன்னது போல மேலே சர்க்கரை பாகு காய்ச்சி ஊற்றினேன்.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கிறீர்கள்? ஜப்பானில் பேக்கிங் பவுடர் கிடைக்கிறதா?நான் பேக்கிங் சோடா தான் வாங்கினேன். டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் விசாரித்துப் பார்த்தேன்.ஆனால் கிடைக்கவில்லை.அது எங்கு கிடைக்கும் அல்லது என்ன பெயரில் கிடைக்கும்? என்று சொல்லுங்களேன்.

நன்றி
கீதா

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

நான் நல்லா இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நான் மதியமே உங்களுக்கு பதில் டைப்பண்ணி வைத்தும் அனுப்ப இயலாமல் போய் விட்டது. ஜப்பானில் பேக்கிங் பவுடர் என்ன பெயரில் கிடைக்கும்னு தெரியவில்லை நான் இந்தியாவில் இருந்து தான் வாங்கி செல்வேன் நாங்கள் ஹலால் உணவுகள் தான் கண்டிப்பாக சாப்பிடனும் என்பதால் எதற்க்கு ரிஸ்க் எடுக்கனும்னு இந்தியாவில் இருந்தே வாங்கிச்செல்வது வழக்கம். நீங்கள் யொகோஹமாவில் இருப்பதாக சொன்னீர்கள் என்று நினைக்கிறேன் சூப்பர்மார்க்கெட்டில் பேக்கிங் செக்க்ஷனில் வைத்து இருப்பார்கள் விசாரித்து பாருங்கள்.

அன்புடன் கதீஜா.

மேலும் சில பதிவுகள்