என் சுட்டிக்கு HELP பண்ணுங்க........................

ஹாய், நான் ரஜினி. புதிதாக தளத்தில் இணைந்துள்ளேன். என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகிறது. 3 மாதத்திற்கு முன் கழுத்தில் சிகப்பாக RASH வந்தது. DOCTOR பார்த்துவிட்டு ECZEMA என்று சொன்னார். சில கிரீம்களும் போட சொன்னார். அது தன்னால் போய்விடும் என்றார். இப்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. சில சமயம் குறைவது போல் இருக்கும். பல சமயங்களில் பார்க்கவே முடியாது, ரொம்ப மோசமாக இருக்கும். இதற்கு ஏதாவது செய்ய முடியுமா?.

ஹாய் ஃப்ரென்ட்ஸ் பிறகு வருகிறேன்.

என்ன தளிகா அருசுவைக்கு ஒரு பெரிய லீவு போல இருக்கு.
ரிமா எப்படி இருக்கா.
நிறைய பேர் கேள்வி கேட்கிறார்கள் பதில் சொல்லவாவது வரலமே.
ஜலீலா

Jaleelakamal

ஹலோ ரஜினி
கழுத்தில் ரேஷ் என்றால் முதலில் இருக்கமானா ஆடைகளை தவிர்க்கவும்.
தேங்காய் எண்ணை தடவுங்கள்.
மெல்லிய காட்டன் ஆடை மட்டும் பயன் படுத்துங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஒரு குறிப்பிட்ட வகை உணவுக்கு தான் அதிகமாகிறதா என்று மிக உன்னிப்பாக கவனிக்கவும்..அதனை அறவே தவிர்த்து விடவும்

Rajini

ஹாய் ஜலீலா,

இருக்கமான உடைகள் போடும்போது RASH அதிகமாவதை நாங்க கூட பார்த்தோம். இப்போ, போடுவது இல்லை. தேங்காய் எண்ணெய் போட்டதில்லை. கண்டிப்பாக தடவி பார்கிறேன். நன்றி.

என் பெண் இன்னும் MOTHER FEEDING தான் இருக்கிறாள். இனிமேல் தான் திட உணவு ஆரம்பிக்கனும்

ஹலோ ரஜினி அறுசுவையில் புதியதாக இணைந்திருக்கும் உங்களை அனைவரின் சார்பாக வருக வருக என வரவேற்கின்றேன், உங்கள் வரவு நல்வரவாகுக.உங்கள் குழந்தையின் ஸ்கின் பிரச்சனையைப் பற்றி எழுதியிருந்தீர்கள், அவை மருத்துவர் கூறியதுப் போல் நாளடைவில் தன்னால் சரியாகி விடும் கவலை வேண்டாம். அவர் பரிந்துரைத்த கிரீமைத் தொடர்ந்து பூசுங்கள் சரியாக ஆறு மாசம்கூட ஆகும் ஆகவே தொடர்ந்து மருந்தை பூசுங்கள். மேலும் இந்த என்ஸிமா என்ற தோல் அசுகத்திற்க்கு Bee wax என்ற இயற்க்கை மருந்து நல்ல பயனைத் தரும் இதைத் தொடர்ந்து பூசி வந்தாலும் சரியாகிவிடும். இந்த http://www.rockymountainsoap.com என்ற லிங்கில் தொடர்புக் கொண்டு விசாரிக்கவும். அதில் Bee waxஸால் தயாரித்த Unscented Body Butter என்ற கிரீமை வரவழைத்து குழந்தைக்கு பயன்படுத்திபாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து விட்டு உபயோகிப்பது நல்லது.நன்றி.

ஹலோ மனோகரி மேடம்,

தங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி. அறுசுவையில் இணைந்ததில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே. நீங்கள் கூறிய வெப் சைட் சென்று பார்த்தேன். மிக உபயோகமான சைட். நான் கண்டிப்பாக டாக்டரிடம் கலந்தாலோசிக்கிறேன். என் குழந்தைக்கு இன்னும் 1 வாரத்தில் 6வது மாத டாக்டர் APPIONTMENT இருக்கிறது. அப்போது கண்டிப்பாக கேட்கிறேன். புதிதாக தமிழில் செய்வதால் பதில் அனுப்ப சிறிது நேரம் ஆகிறது. விரைவில் பழகிக்கொள்வேன்.

Rajini

நல்லது ரஜினி மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு முயற்ச்சி செய்து பாருங்கள். வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை யிருந்தாலும் அவர்களுக்கும் இதைப் பற்றி அறிமுகப்படுத்துங்கள் மற்றவர்களும் பயன்பெறட்டும்.பக்க விளைவுகள் எதுவும் இல்லாத நல்ல மருந்து இது.அதுசரி புதியதாக தமிழில் எழுதினாலும் ஒரு எழுத்துப் பிழைக் கூட இல்லையே!!!பாராட்டுக்கள்.நன்றி.

மன்னிக்கவும் மனோகரி மேடம். தமிழ் எனக்கு நன்றாக எழுத வரும். ஆனால், இப்படி தமிழில் டைப் செய்து பழக்கம் இல்லை

Rajini

மேலும் சில பதிவுகள்