பிரட்டிலும் ரஸ்க்/வர்க்கி பிஸ்கோத்து செய்யலாம்

டீ ரஸ்க்கை பிரட்டிலும் செய்யலாம், தனியாக மாவைக் குழைத்தும் செய்யலாம். சுலபமாகச் செய்யவேண்டுமென்றால் ஏற்க்கெனவே தயாரித்த ரொட்டித்தூண்டுகள் தான் பெஸ்ட். இதைத்தான் குரூட்டான்ஸ் என்று சிறிய சிறியத் துண்டுகளாகச் செய்து சாலட்டுகளில் சேர்த்தும் உண்ணலாம்.என்னத்தான் இருந்தாலும் நம்மூர் பேக்கரியில் கிடைக்கும் ரஸ்க்கின் சுவையே தனிதான். சரி விடுங்க அதற்க்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி?வீட்டில் இருக்கும் பிரட்டைக் கொண்டு நாமே அதைச் செய்துப் பார்க்கலாம் வாங்க பாலம்மு நீங்களும் தான்.

பிடித்தமான எல்லா வகை பிரட்டிலும் இந்த ரஸ்க்கை செய்யலாம்,மேலும் பிரன்சு ரோல் அல்லது இத்தாலியன் பிரட் ரோல்ஸிலும் செய்யலாம் நல்ல சுவையாக இருக்கும்.

இதற்க்கு பிரட் துண்டுகள் மிகவும் மெல்லியதாக இருக்க வேண்டும்.ஒவ்வொறு துண்டையும் மூன்று அல்லது நான்கு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கவும்.

பின்பு உப்புச் சேர்க்காத வெண்ணெயுடன், தேவையான சர்க்கரையை பொடித்து நன்கு கலக்கி துண்டுகளின் மீது இரண்டு புறமும் தடவவும். இனிப்பு வேண்டாம் என்றால் உப்புச் சேர்த்த வெண்ணெயை மட்டும் பயன்படுத்தலாம்.

பின்பு அவைகளை பேக்கின் ஷீட்டில் பரவலாக வைத்து அவனில் அல்லது டோஸ்ட்டர் கிரில்லில் வைத்து மிகவும் குறைந்த சூட்டில் வைத்து பேக் செய்யவும்.திருப்பி விட தேவையில்லை.

பிரட் துண்டுகள் இளஞ்சிவப்பாக ஆகும் வரை வைத்திருக்கவும். குறைந்தது இரண்டு மணி நேரம் கூட ஆகலாம்.பின்பு வெளியில் எடுத்து நன்கு ஆறியவுடன் காற்று புகா டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.நீண்ட நாட்களுக்கு கெடாது.

கவனிக்க வேண்டியவைகள்: அவெனின் சூடு மிகவும் குறைந்த வெப்ப நிலையில் வைக்கவும். பிரட் துண்டுகள் மிகவும் மெல்லியதாக இருக்க வேண்டும்.

மனோஹரி madam என்னுடைய கேள்விக்கு நீங்க ஒரு த்ரெட் போடிற்குறது பழச நினைக்க செய்கிறது. .. முன்பும் எனக்கு பதில் நீங்க புதுசா ஒரு த்ரெட் தான் சொன்னிக ..

ரொம்ப நன்றி..
பிரெட் நான் நீங்க சொன்ன மாதிரி செய்து சேமிக்கலாம் னு நினைத்தேன் ..எங்க என் கணவர் நல்ல சாபிட்டங்க .. எனக்கு ரொம்ப சந்தோஷமே என் மகன் அதை சாப்பிட்டது தான் ..

உங்களுக்கு நன்றி என்பதை விட வேற என்ன சொல்றது னு பார்த்த ... பலர்
வீடுகள் உங்க ஐடியா வால் நீங்க விருந்து வைகிரிங்க னு சொல்ல தோனுது ..

என் மகன் 15 மாதம் ஆகிறது .. கொஞ்ச நாள் potty ல உட்கார்ந்து மலம் கழித்தான் ..
இப்ப ரொம்ப அடம் பிடிக்கிறான்..

கஷ்டமா இருக்கு .. diaper தொல்லையில் இருந்து அவன் விடிவிக்க தான் இதை மிகவும் நம்பினேன் .. அவனை என்ன செய்ய....
ரொம்ப போராடி உட்கார வைத்தா .. அங்க தான் நிறைய கதை பேசி ..அவன் என்ன செய்யணுமோ அதை மறந்து விடுகிறான் ..
30 mins போரடினா கூட .. போரதில்லா .. diaper போட்டு ஒரு ஐந்து நிமிஷத்துல போறான் .. என்ன செய்ய சொல்லுங்களேன்

மேலும் சில பதிவுகள்