குழந்தைகளுக்கு சலி, காய்ச்சல் இரும்பல் போன்ற உபாதைகள் சாதாரணமான விசயமானாலும் அவர்கள் அந்த அசுகத்திலிருந்து விடுபடும் வரை குழந்தைகளைவிட பெற்றோருக்குத் தான் அதிக சிரமம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏனென்றால் அந்த நேரத்தில் சரியாக சாப்பிட மாட்டார்கள், சரியான தூக்கம் இருக்காது பலமிழந்து வாடிப் போய் அம்மாவின் மனதை சோகத்தில் பிழிந்துவிடுவார்கள். ஆனால் குழந்தை சுகமில்லாமல் இருக்கும் பொழுது தாய் சோகமாகிவிட்டால் பின்பு குழந்தைக்கு தெம்பு எப்படி வரும்?
ஆகவே தாய்மார்களே குழந்தைக்கு அசுகம் என்று எது வந்தாலும் முதலில் நீங்க பதட்டபடாமல் இருங்கள். இவைகள் யாவும் சாதாரணமாக குழந்தைகளின் வாழ்க்கையில் நடைப் பெறும் விசயம் தான் அதற்க்கு போதிய மருந்தும் ஆகாரமும் சரிவர கொடுத்தால் போதும் சரியாகிவிடும்.
பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த தொந்தரவு குறைவாகத் தான் இருக்கும், இருந்தாலும் பால் குடி நிறுத்தியவுடன் அவர்களுக்கும் இந்த உபாதைகள் வரத்தான் செய்யும். இன்னும் பள்ளிக்கூட சிறுவர் சிறுமிகளுக்கும் அடிக்கடி இந்த தொந்தரவு இருக்கும். கிட்டதட்ட ஐந்து அல்லது ஆறு வயது வரை மாதாமாதம் கூட சளி காய்ச்சலில் அவதிப் படுவார்கள்.
இருந்தாலும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் ஆகாரத்தின் மூலமாக ஓரளவிற்க்கு இந்த தொல்லையிலிருந்து காப்பாற்றலாம். நோய்தடுக்கும் உணவுகளை இந்த சிறிய வயதிலிருந்தே பழக்கப்படுத்திவிட்டால் பிறகு உணவே மருந்தாகி அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கும்.
குழந்தைகளுக்கு முக்கியமாக வைட்டமின் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்ப்பது அவசியம் அதனால் அவர்களுக்கு நோய்தடுப்பு சக்தி இயற்க்கையாக அமைந்துவிடும், அந்த சக்தியை அன்றாடம் பயன்படுத்தும், காய்கறி பழங்களிலிருந்து சுலபமாக குழந்தைக்கு கொடுக்கலாம்.
1.முக்கியமாக வேகவைத்த உருளக்கிழங்கு, கேரட், மற்றும் தக்காளி, ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி ,புலூபெர்ரி, பிலாக்பெர்ரி, போன்ற பழங்களின் ஜூஸ், இவைகளில் எது முடியுமா அதை அன்றாட பழக்கத்தில் உணவாக கொடுப்பது நல்லது.
2.மேலும் பால், தயிர், வேகவைத்த முட்டை, இறைச்சி வகைகள், மீன்,வாழைப்பழம்,வேர்கடலை, பாதாம் பருப்பு,போன்ற பருப்பு வகைகளுடன் மற்றும் விதைகள், மேலும் அவர்கள் விரும்பும் ஐஸ்க்கிரீம், சீஸ், பேன் கேக்ஸ்(நம்ம குறிப்பு) அரிசியில் செய்த உணவுகள், பருப்பு, கோதுமைப் பண்டங்கள் போன்று அன்றாட உணவில் இவைகளைச் சேர்ப்பதன் மூலமாக நல்ல உடல் உறுதியும் வலுவான எலும்பையும் பற்க்களையும் பெறுவார்கள்.
3.ஒரு வயதிற்க்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு பாலில் கலந்த தேன், மற்றும் பேரீச்சம் பழம் உலர்ந்த திராட்ச்சைப் போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் இவைகள் குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தி அதிகரிக்கவும் பொருமையுடன் இருக்கவும் உதவுகின்றது.
தினமும் அவர்களுக்கு பிடிக்கும் வகையில் உணவை சரிவிகித சமமான சத்துக்கள் கொடுப்பதை நாம் பழக்கப் படுத்திக் கொள்வது நல்லது. குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதற்க்காக நீங்களாக எதையும் நிறுத்த வேண்டாம் சளிபிடித்திருந்தால் கூட பரவாயில்லை அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைக் கொடுத்து வயிற்றை நிரப்பி விடுங்கள், குழந்தைகளுக்கு உணவால் எந்த பிரச்சனையும் அதிகரிக்காது குறைந்தால் தான் பிரச்சனை அதிகமாகும் இதனால் அசுகம் நீங்கவும் அதிக நேரமெடுக்கும்.நேரம் தவராமல் மருந்தை சாதாரண சளி மருந்தைக் கொடுத்தாலே போதும் சரியாகிவிடும்.
ஆனால் அதனுடன் வீஸிங் என்ற மூச்சு தினறுவது வாயால் சுவாசிப்பது போன்ற அசுகம் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை சந்திப்பது அவசியம் இல்லாவிடில் குழந்தைக்கு டிரிப்ஸ் ஏற்றி மருந்தையும் உணவையும் கொடுக்க வேண்டிய நிலை வந்து குழந்தை அவதிக்குள்ளாகும்.மற்றபடி சாதாரண சலித் தொல்லைக்கு பயப்படத் தேவையில்லை
எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைகளுக்கு சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் மிகவும் முக்கியம் என்பதால் எவ்வளவு சிறியக் குழந்தையாக இருந்தாலும் தினமும் வெளியில் முக்கியமாக காலை நேரத்தில் வெளியில் சிறிது நேரம் வைத்திருந்து அழைத்து வருவது குழந்தைப் பருவத்திலிருந்தே மனதுக்கும் உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.
மேற்க்கூறிய அனைத்தையும் விட விலைமதிக்க முடியாத அவர்களின் தாயின் அரவணைப்பு மட்டும் குறைந்த பட்சம் குழந்தைகள் சுகமில்லாமல் இருக்கும்போதாவது தங்கு தடையில்லாமல் கிடைத்துவிட்டால் போதுமே, பிறகென்ன அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான குழந்தைகள் தானே. நன்றி.
ஹலோ மனோகரி மேடம்
ஹலோ மனோகரி மேடம்,
எப்படி இருக்கீங்க?. உங்களோட எழுத்துக்கள் எல்லாம் சூப்பர். குழந்தைகளுக்கு சளி தொல்லை பெரும் தொல்லை. சும்மவா சொன்னாங்க, சளி பிடிச்சா சனி பிடிச்ச மாதிரின்னு. அதுவும் குழந்தைகளுக்கு என்றால் கேட்கவே வேண்டாம். நீங்கள் குறிப்பிட்ட முறைகள் அம்மாகளுக்கு ரொம்ப உதவியா இருக்கும். என் மகனுக்கு ஸ்கூல் போவதால் அடிக்கடி சளி தொல்லை இருந்துகிட்டே இருக்கு. அதுனால கண்டிப்பா நான் இதுபோல செஞ்சு பார்க்கிறேன்.
Rajini
குழந்தைகள் சலி பற்றிய கட்டுரைதம்மைக்கு
குழந்தைகள் சலித் தொல்லை பற்றியும்.குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவை பற்றியும் .குழந்தைகளுக்கு வலுவான உடல், நல்ல உடல் உறுதியும் , நல்ல ஞாபக சக்தி அதிகரிகும் உணவு பற்றியும்.குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் உணவை கொடுக்கும் முறையை பற்றி கட்டுரைதம்மைக்கு நன்றி. நான் கேட்ட கேள்விக்கு விரிவாக விடை அளித்தமைக்கு நன்றிmadam
naturebeuaty
ஹலோ Rajini
ஹாய் நான் புதுசு. நான் anjali. உங்கிட்டே பேசினதில்ல. இது தான் முதல் தடவை.சளி பிடிச்சா சனி பிடிச்ச மாதிரின்னு சளி பற்றிcommentக்கும்,என்னை அம்மாகளு என்று comment தந்ததிற்கு நன்றி
naturebeuaty
hai anjali
hai anjali
epdi irukeenga?en per ammu.nanum US la than iruken.enaku kalyanam agi 1 year aguthu.enakum arusuvai romba pudikum.en relations thirunelveli la than irukanga.
love
ammu
மனோஹரி
மனோஹரி மேடம் ..
நானும் இந்த காய்ந்த திராட்சை என் மகனுக்கு கொடுத்தேன் ..
அவன் அதை விரும்பி சாபிடுவது ஒரு பக்கம் இருந்தாலும் அவனக்கு அது ஜீரண ஆகாமல் அப்படியே வெளி வருகிறது .. என்ன செய்ய ?? தொடர்ந்து கொடுகவா??
இந்த blackberry,blue berry,straw berry எல்லாம் நம் நாடுகளில் அதிகம் நான் கேள்விப்பட்ட தில்ல.. அதனால கொடுகாம இருந்தேன் .. இனி முயற்சி செய்கிறேன் ..
சிலர் தேன் கொடுக்க வேண்டாம் என கூறவது எதனால்.. கேட்டால் தெரிய வில்லை என் அம்மா சொல்வார் ..பாட்டி சொல்வார் என்பது தான் பதில் ..
நீங்கள் கூறுவது போல் தினமும் ஒரு ஸ்பூன் தேன் பாலில் கலந்து தரவா ??
அதன் பயன் சொல்லுங்களேன் /////////
ஹலோ அஞ்சலி
ஹலோ அஞ்சலி,
எப்படி இருக்கீங்க?. உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி. நானும் இப்போ கொஞ்ச நாள் முன்னால தான் அறுசுவையில் சேர்ந்தேன். இதில் இருக்கிற கலகலப்பை பார்த்ததும் தான் இவ்வளவு நாளா அறுசுவை பக்கம் பத்தி தெரியாம போயிடுச்சேன்னு வருத்தமா இருக்கு. எப்படியோ உங்களை போல ப்ரன்ட்ஸ் கிட்ட பேசறது ரொம்ப சந்தோசமா இருக்கு. தொடர்ந்து பேசுவோம் :)
Rajini
hai ammu epdi irukeenga? US
hai ammu epdi irukeenga? US la enga?enakum romba pudikum arusuvai frienship.kalyanam agi 1 year agutha enjoy your life.life is beautifull.so tell me something
naturebeuaty
உங்ககிட்ட
உங்ககிட்ட பேசறது ரொம்பசந்தோசமாஇருக்கு.ரொம்ப நன்றி. உங்களை பற்றிய தவல்?
naturebeuaty
en per ammu.enaku kalyanam
en per ammu.enaku kalyanam agi 1 year aguthu.enaku padipu mudichu udanae kalyanamairuchu.DCE mudichurukenn.nan vegeterian.newyoek la iruken.
hai anjali
ungalai nan epdi koopda?