பாகற்காய் கிச்சடி

தேவையானப் பொருட்கள்

பாகற்காய் - ஒன்று
தயிர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
எண்ணை - இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டீ ஸ்பூன்
சீரகம் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உளுந்து - 1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-

பாகற்காய்பொடியாக,மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.வாணலியை வைத்து எண்ணை ஊற்றி பாற்காய்முறுகலாகும் வரை வறுக்கவும்.கையால் பொடித்து கொள்ளவும் தேங்காய்துருவல், பச்சைமிளகாய், உப்பு, கடுகு,2சீரகம் சேர்த்து அரைக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுந்து, வெங்காயம், கையால் பொடித்த பாகற்காய் போட்டு வதக்கவும்.அரைத்த கலவையை சேர்க்கவும்.பசை நீங்கும் வரை நன்கு கிளறவும்
பிறகு இறக்கி ஆறிய பின் தயிரோடு சேர்த்து கிளறவும். சுவையான பாகற்காய் கிச்சடிரெடி செஞ்சுப்பாருங்க ஒகே.

மேலும் சில பதிவுகள்