மீன் பொரியல்

மீன் பொரியல்
-------------

தேவையான பொருற்கள்
--------------

முழு மீன் 6
வெங்காயம் 4
பச்சமிளகாய் 5
பூண்டு 3 பல்
இஞ்சி சிறியதுண்டு
உப்பு தேவையான அளவு
மைதாமா தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள்
தேசிக்காய் பாதி

செய்முறை
----------

மீனை தலையைமட்டும் வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும்
பின்பு அதன் வயிற்றுப்பாகத்தில் நீளமாக வெட்டவும்
மீன் இரண்டாக வெட்டுப்படக் கூடாது.
வெட்டிய மீனை உப்பு புளி சிறிதளவு தூள் போட்டு கலக்கவும் பின்பு
இஞ்சி பூண்டை அரைத்து வெங்காயம் மிளகாயை சிறிதாக வெட்டி உப்பு சேர்த்து அதனுடன் தூள்கலந்து வெட்டிய மீனுக்குள்போட்டு மூடவும் அதை 3 மணி நேரம் ஊற வைத்து பின்
மைதாமாவில் பிரட்டி பொரித்து எடுக்கவும்

மேலும் சில பதிவுகள்