பள்ளிக்கூட குழந்தைகளின் காலைஉணவு.

அன்பு நேயர்கள் எல்லோருக்கும் வணக்கம். இன்றைக்கு பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளைப் பற்றி மற்றொரு தலைப்பாக அவர்களின் காலை உணவைப்பற்றி அதைக் கொடுக்க எப்படியெல்லாம் அவர்களை சமாளிப்பதுப் பற்றியும் உரையாடலாம் வாங்க. குழந்தைகளுக்கு காலை உணவு மிகவும் முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால் அதைச் சரியாக செயல்படுத்த முடியாமல் தாய்மார்கள் தவிப்பதை காணமுடிகின்றது. அதற்கு நேரமும் பொருமையும் இருப்பதில்லை என்றாலும், குழந்தைகளின் ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை.அந்த காலத்தில் பள்ளிக்கூடங்கள் காலை ஒன்பதிலிருந்து பத்து மணிக்கு தான் திறக்கும் ஆகையால் பள்ளிமாணவ மாணவிகள் முதல் வேலைக்கு போகும் தாய்மார்கள் வரை நிதானமாக எழுந்து குளித்து காலையுணவை சாப்பிட்டுவிட்டு விவிதபாரதியில் நீங்கள்கேட்டவை எல்லாம் கேட்டு முடிந்த பிறகு நிதானமாகப் போனால் போதும்.

ஆனால் எனது குழந்தைகளின் காலத்திலிருந்தே அந்த நேரம் மாறிவிட்டிருந்ததென்னவோ உண்மை. என்னிலிருந்து இன்றைய இளந் தாய்மார்கள் வரையில் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்துவதும்,உணவை சாப்பிடவைப்பதும் போல கஷ்டமான வேலை வேறு எதுவும் இல்லை என்று தான் கூறூவேன். ஆனாலும் ஒவ்வொறு நாளும் அவ்வாறு குழந்தைகளுக்கு செய்யும் எந்த விசயத்திலும் அவர்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தான் கிடைக்கும் என்பது உண்மை என்றாலும் அதை சரிவர செய்யமுடியாமல் தான் போகின்றது. இதில் யார்மேலும் குற்றம் கூறமுடியாது இன்றைய அவசர வாழ்க்கையின் சூழல் அவ்வாறு அமைந்துவிட்டது தான் காரணம். ஆனாலும் குறைந்தப் பட்சம் நம்மால் முடிந்தவரை வாழ்க்கை முறையைத் திட்டமிட்டு செம்மைப்படுத்திக் கொள்வதின் மூலம், சூழ்நிலைக்கேற்ப்ப நம்மை மாற்றிக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு குறைந்தப் பட்சம் பத்துவயது வரையிலாவது தாய்மார்கள் காலையுணவை கூடயிருந்து கொடுக்கவேண்டும் அல்லது ஊட்டிவிட வேண்டும் மற்றநேர உணவுகளுக்கு அவ்வளவு கவனம் தேவையில்லை மேற்ப்பார்வை பார்த்தால் போதுமானது.காலையில் குழந்தை எழுந்தவுடன் முதலில் பல்தேய்க்க வைத்து விட்டு சாப்பிட பழக்கிவிடுவது நல்லது. முதலில் பால் பிறகு திட உணவு என்றெல்லாம் வேண்டாம்.அதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லையே.

1.பாலுடன் சேர்ந்த திட உணவாக அவர்கள் விரும்பும் கார்ன்ஃபிளேக் கொடுத்துவிடுங்கள்.கூடவே ஒரு சிறிய பழத்துண்டு போதும்.
2.நமது பாரம்பரிய உணவான மோர் சாதம் மிகவும் நல்லது.இதனுடன்வேறு எதும் வேண்டாம்.
3.இட்லி தோசை போன்ற உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்திருந்து சூடு படுத்தி கொடுங்கள்.
4. ஒரு நாளைக்கு வேகவைத்த காய்கறிகளை கொண்டு ஸ்டஃப் செய்த்த பரோட்டாகளின் துண்டுகளை பழஜூசுடன் கொடுக்கலாம்.
5. பால் சேர்த்த ராகிகஞ்சி ஒரு கப் கொடுத்தால் போதுமானது.
6.சப்பாத்தியில் ஜாம் தடவி உருட்டி கொடுத்தால் கூட போதும்.
7.முட்டையை ஆம்லட்டாக ஊற்றி அதன் மீது குடமிளகாயை பொடியாக நறுக்கி தூவி சிறிது சீஸைப் போட்டு மடித்து கொடுக்கலாம்.
8.ஃபிரன்ச் டோஸ்ட்டின் மூலம் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமான காலையுணவைக் கொடுக்கலாம்.
9. வேகவைத்த முட்டையுடன் ஒரு கப் பால் அல்லது ஜூஸ் போதுமானது.
10. ஒரு நாளைக்கு பேன் கேக்ஸ்ஸை முன்கூட்டியே செய்து வைத்திருந்து காலையில் கொடுக்கலாம்.
11. இரண்டு துண்டு பெனானா பிரட்டுடன் ஒரு சிறிய கோப்பை ஃபுரூட் ஜெல்லி போதுமானதாக இருக்கும்.
12.ஒரு நாளைக்கு பீனட் பட்டர் சான்வீச் செய்து குழந்தைகளுக்கு பிடித்தமான வடிவில் வெட்டி கொடுக்கலாம்.
13. ஒரு நாளைக்கு சீஸ் சான்வீச் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
14.பழங்களுடன் கேரட் போன்ற காய்களில் செய்த ம்ஃப்பினும் பாலும் சேர்த்து தரலாம்.
15. இடியாப்பம்,வேகவைத்த நூடுல்ஸ் அல்லது பாஸ்தா கையிருப்பு இருந்தால் அதனுடன் சிறிது சர்க்கரை, வறுத்து பொடித்த வேர்கடலைத்தூள்,சிறிது உருக்கிய வெண்ணெய் ஒரு சிட்டிகை ஏலப்பொடி தூவி நன்கு கலக்கி கொடுத்தால் குழந்தைகள் அதை நொடியில் காலிசெய்து விடுவார்கள்.

இவ்வாறு தினமும் அவர்களுக்கு, உணவில் வெறுப்பு உண்டாகாத வகையில் உங்க கற்பனைக்கேற்றவாறு மாற்றி மாற்றி ஏதாவது ஒரு காலைஉணவை தினப்படிசாப்பிட வைப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்க்கும், மனவலிமைக்கும் மிகவும் நல்லது.இதனால் குழந்தை நாள்முழுக்க வகுப்பில் பாடங்களை கவனமுடன் பயிலயும், மற்றவர்களுடன் நிதானமாக பழகவும் வழிவகுக்கும்.

இதைச் செயல்படுத்த காலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டுமானால் தாய்மார்கள் குறைந்தது இரண்டு மணிநேரம் முன்னதாக எழுந்திரிக்க பழகிவிடுவது நல்லது. இதனால் முக்கால்வாசி பிரச்சனைகளை சமாளித்துவிடலாம், ஒரு மணி நேரம் உங்களுக்காகவும், மீதியிருக்கும் நேரத்தில் குழந்தையை நிதானமாக பள்ளிக்கூடத்திற்க்கோ அல்லது டேக்கேருக்கோ அவர்களை தயார் செய்ய முடியும்.முக்கியமாக தாய்மார்கள் காலையில் சமைப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் இதனால் நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம். காலையில் தேவையான உணவை இரவிலேயே தயார் செய்து வைத்துவிடுவது நல்லது.

தினமும் இரவில் சாப்பிடுவதற்க்கு முன்பு சுடுதண்ணீரில் குளிக்கவைத்த பிறகு சாப்பிடவைத்து, அதன் பிறகு உறங்க வைத்தால் காலையில் நல்ல பசிஎடுக்கும். குறைந்தது பத்துமணி நேரம் உறங்கும்படி பழக்கப்படுத்த வேண்டும், அப்போதே அடுத்த நாளைக்கான காலையுணவைப் பற்றி அவர்களிடம் கூறி சம்மதம் வாங்கிவிடால் பிறகு அதே நினைவில் காலையில் எழுந்தவுடன் அவர்களுக்கு பசியும் தானாக எடுக்கும், அதே நேரத்தில் நல்ல உறக்கம் இருந்ததால் அம்மாவிற்க்கு நல்ல ஒத்துழைப்பும் கொடுப்பார்கள்.

ஆகவே உங்க குழந்தைகள் பிள்ளிக்கூடம் செல்வதற்க்கு சிறிது கால இடைவெளியிலிருந்தே இந்த பழக்கத்தை சிறிது சிறிதாக பழக்கிவிடுவது நல்லது. பள்ளி விடுமுறை என்றால்கூட காலையில் சிறிது நேரம்கழித்து எழுந்திரிக்க விடலாமே ஒழிய அந்த காலைநேர ஒழுங்கு முறையை தவறாமல் கடைப்பிடிக்க வைப்பது நல்லது. குளித்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட பிறகு தான் டீவி, ஆட்டம் பாட்டம்மெல்லாம்.

என்னைக் கேட்டல் வேலைக்கு போகும் தாய்மார்களை விட வீட்டிலிருப்பவர்களுக்கு தான் இந்த நேரப்பிரச்சனை அதிகமாயிருக்கும் ஆனாலும் அவர்களும் அவர்களின் அலுவல்களுக்கு ஏற்றமாதிரி காலைநேரத்தில் கவனம் செலுத்தி குழந்தைகளை வளர்ப்பது தொட்டில் பழக்கம் கடைசீ மட்டும் என்பதைப் போல் ஒரு தாய் மனதுவைத்தால் அவள் தன் குழந்தைக்காக எந்த சூழ்நிலையையும் அவர்களுக்கேற்றவாறு எப்படிவேண்டுமானாலும் மாற்றிவிட முடியும் என்பதால் இந்த ஒரு சிறிய ஆலோசனையை கூறினேன், உங்க கருத்துக்களையும் கூறலாம். நன்றி.

ஹலோ மேடம், நல்லா இருக்கீங்களா? நான் இந்த அறுசுவைக்கு புதுசு மேடம். நான் இந்த தலைப்பை படிச்சதும் நமக்கு இது தேவையில்லை என்று நினைத்து படிக்க விட்டுவிட்டேன் மேடம். பிறகு பிற்காலத்தில் தேவைப்படுமே என்று படித்தேன். அய்யோ பிறகு தான் தெரிந்தது ரொம்ப ரொம்ப தேவை என்று. நாங்களும் இப்படி தான் மேடம் பண்ணுவோம் எங்க அம்மா தவிப்பாங்க காலேஜ் படிக்கும் வரை அப்படி தான் மேடம் ஆனால் இப்போ தான் உணவின் அவசியத்தையே புரிஞ்சுகிட்டேன். உண்மையிலேயே தாயானவர்களுக்கும் ஆக போகிறவர்களுக்கும் மிக மிக்கியமான ஒன்று. ரொம்ப நல்லா systematic கொடுத்து இருக்கீங்க மேடம். உணவின் அவசியத்தை அவர்களுக்கு நாம் சொல்லி புரிய வச்சிடாலே நமக்கு கொஞ்சம் பாரம் குறையும்ல மேடம். மேடம் நான் ஒன்னு சொல்லடா dont mistake me pls மேடம் நான் உங்க மற்ற விபரங்களையும் படித்திருக்கிறேன். நீங்க ஒரு ஆலோசனை மையம் தொடங்கலாம், நிறைய பேர் பயன் பெறுவார்கள்.

ஹலோ நந்தினி எப்படி இருக்கீங்க? இந்த தலைப்பு உங்களை கவர்ந்ததில் மகிழ்ச்சியே. நானும் அப்படித்தான் பிரேக்ஃபாஸ்ட்டே சாப்பிடமாட்டேன், அம்மா ஊட்ட வில்லையென்றால் அன்றைக்கு ஜாலி தான்.என்னுடைய்ய பதிவுகள் அனைத்திலும் எனது சொந்த அனுபவங்கள் ஒரு இழையாவது ஓடியிருக்கும் அதன் பிரதிபலிப்புகள் தான் இங்கு பதிவுகளாகின்றது. ஏதோ நமது நேயர்கள் அவைகளை போனா போவட்டும் என்று என்னை விட்டுவைத்திருக்கின்றார்கள், அதற்காக ஆலோசனை மைய்யம் எல்லாம் அமைத்து அவர்களிடம் அடி வாங்க மன்னிக்கவும் நான் தயாராக இல்லை,இந்த மாதிரி குறிப்புகளோடு நிறுத்திக் கொள்வது தான் எனக்கு நல்லது. உங்க ஆலோசனைக்கு சிரம் தாழ்த்தி எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.நன்றி அடிக்கடி சந்திப்போம்.

மனோகரி அக்கா எப்படி இருக்கீங்க. என் பெண்ண முதல் வேலையா உங்க வீட்டுக்கு ஃபிளைட் ஏத்தி அனுப்பி வைக்கப்போறேன் பாருங்க. அவ ஸ்கூலுக்கு போகும்போது காலை சாப்பாட்டை அவாய்ட் பண்ணுவதற்கு என்னவெல்லாம் ஆக்ட் குடுக்க முடியுமோ எல்லா ஆக்டும் குடுப்பா. ஆனா லீவு நாளில் ஒழுங்கா சாப்பிடுவா. அது ஏன்னுதான் தெரியல. நானும் என்னென்னவோ ட்ரை பண்ணி பார்த்துட்டேன். ஆனா நான் ட்ரை பண்ணாத சில மெனுவையும், சில ஐடியாவையும் குடுத்து இருக்கீங்க. உங்களுக்கு மிக்க நன்றி. இது என்னைப்போல பலருக்கும் பயன்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனாலும் அந்த விவித பாரதிய சொல்லி மலரும் நினைவுகளுக்கு போக வெச்சுட்டீங்க. நீங்கள் கேட்டவை கேட்டுக் கொண்டே பள்ளிக்கு கிளம்பியது...ம்ம்... அது அந்த காலம்.
நீங்க ஆலோசனை மையம் தொடங்குங்க சே!சே!நாங்கல்லாம் சும்மா அடிக்க மாட்டோம், தர்ம அடிதான் குடுப்போம்:-) சும்மா விளையாட்டுக்கு சொன்னேன், பயந்துட்டீங்களா. வேண்டும்!வேண்டும் உங்கள் ஆலோசனைகள் அறுசுவையில் தொடர வேண்டும் என்று கூறி விடை பெறுகிறேன், நன்றி!(ஏ!! உங்க ஸ்டைலில் நானும் எழுதிட்டேனே:-) )

ஹலோ மனோகரி மேடம்,

மகளிர் தினத்தை ஒட்டி எல்லாருக்கும் பெரிய பரிசா இந்த பதிவை கொடுத்து இருக்கீங்க. அதுக்காகவே உங்களுக்கு ஒரு பெரிய பூங்கொத்து, பிடியுங்க முதல்ல. காலையில எழுந்திருக்கறப்பவே குழந்தைகளுக்கு பிடிச்சதாவும் கொடுக்கணும், அதே சமயம் அவங்க ஒழுங்காவும் சாப்பிடணும்ன்னு அம்மாக்கள் படற டென்ஷன் இருக்கே. அப்பப்பா. நானும் எங்கம்மாவை இப்பிடித்தான் டென்ஷன் பட வைச்சேன்கறது வேற விஷயம். ஆனா தலை வலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தானே புரியுது. "ஆனாலும் ஒவ்வொறு நாளும் குழந்தைகளுக்கு செய்யும் எந்த விசயத்திலும் அவர்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தான் கிடைக்கும் என்பது உண்மை " அப்பிடின்னு நீங்க சொன்னது 100% உண்மை. நீங்க கொடுத்து இருக்கிற 15 BREAKFAST IDEA வும் சூப்பர். எனக்கு ஒரு சின்ன சந்தேகம் என்னவிதமான பழங்களை காலையில கொடுக்கலாம். என் பையனுக்கு க்ரேப்ஸ் ரொம்ப பிடிக்கும். ஆனா என் FRIEND காலையில க்ரேப்ஸ் கொடுக்க கூடாதுன்னு சொல்றா. அப்பிடின்னா, வேற என்ன கொடுக்கலாம்?. இதுபோலவே அருமையான ஆலோசனைகள் நிறைய சொல்லுங்க. அதுக்காகவே அடிக்கடி நீங்க எங்களை சந்திக்கணும். இல்லைன்னாதான் அடிப்பாங்க. :) [ நானும் சும்மா சும்மா சொன்னேன்]

Rajini

குழந்தைகளுக்கான காலைஉணவு!... தாய்மார்களுக்கு ஏற்ற அருமையான தலைப்பு. இதோ எனக்குத்தெரிந்த குறிப்புகள்:
முதல் நாள் இரவே மைதா, வெண்ணெய் ( அல்லது எண்ணெய்), உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து பிசைந்து ஃரிட்ஜில் வைத்துவிடவேண்டும். காலையில் இஞ்சி,பூண்டு, வெங்காயம் அரைத்து வதக்கி, கரம் மசாலா, மிளகாய்தூள், வேக வைத்து மசித்த உருளைகிழங்கு சேர்த்து பிரட்டி எடுத்து ஸ்டஃபிங் ரெடி பண்ணி, முதல்நாள் இரவு ஃரிட்ஜில் வைத்த மைதா மாவை எடுத்து உருட்டி தேய்த்து ஸ்டஃபிங்கை நடுவில் வைத்து மூடி மீண்டும் தேய்த்து தோசை கல்லில் நெய் ஊற்றி சுட்டு கொடுத்தால் நிச்சயமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை மதிய லஞ்ச்- ஆகவும் கொடுக்கலாம். இரவே மாவை பிசைந்து வைத்து விடுவதால், காலையில் வெகு சீக்கிரம் செய்துவிடலாம்.

சப்பாத்தி செய்து இரு பக்கமும் வெந்ததும் திருப்பி போட்டு சப்பாத்தியின் ஒரு பக்கத்தில் நறுக்கிய வெங்காயம், கேரட், மல்லி, சேர்த்து கலக்கிய முட்டையை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு கொடுக்கலாம்.

ரவாஇட்லி மிக்ஸ் வாங்கி வைத்துக்கொண்டு தயிர் மிக்ஸ் பண்ணி செய்து கொடுக்கலாம். தயிர் சேர்ப்பதால் வயிற்றுக்கு இதமாக இருக்கும். தொட்டுக்கொள்ள வடக சட்னி சூப்பராக இருக்கும்.

வெஜிடபிள் மசாலா கலவை நடுவில் வைத்த தோசை.
சீஸ் தோசை, பனீர் தோசை, எல்லாமே ஈஸியான ப்ரிப்பரேஷன் தானே

சர்க்கரை சேர்த்த பாலில் பூரியை போட்டு கொடுக்கலாம்.

இதெல்லாம் என் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது நான் செய்து கொடுத்தவை. இருபதுவருடம் பின்னோக்கி அழைத்து சென்று நினைவுகளை மலரச் செய்த மனோகரிக்கு நன்றிகள். இன்னும் நிறைய ஞாபகம் வரும்போது எழுதுகிறேன்.

asiya omar
manohari madam,
superb,i am new,i have two children,i show ur menu ,mostly they liked very much.
thanks a lot for all ur tips given before,you have such a writing talent.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் மானோகிரி மேடம் ,எப்படி இருக்கிறீங்க? நான் ரம்பா,ரொம்ப ராளாகிவிட்டது உங்களிடம் பேசி.மீண்டும் நீங்க அருசுவைக்கு வந்து பயனுள்ள குறிப்பு கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள்.ரொம்ப சந்தோசமாக இருக்கு.இன்னும் நிறைய குறிப்பு கொடுக்கனும்னுஆசைப்படறேன்.மீண்டும் சந்திப்போம்.

ramba

மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி மனோகரி!

எனது மகன் இப்ப கிண்டர் கார்டன் போய்ற்றுருக்கான் .கார்ன்ஃபிளேக்ஸ்னா விரும்பி சாப்பிடுவான்.வேற சாப்பாடுகள் காலையில சாப்படுவதே கிடையாது. நீங்க சொன்னது போல சாப்பாடுகளை செய்து கொடுக்க முயற்சிசெய்கிறேன். :-)

ஹலோ வின்னி நீங்க எப்படி இருக்கீங்க நான் நல்ல சுகம் நன்றி.அந்த பதிவைப் போடும் போதே நினைத்தேன் இந்த மாதிரி ஏதாவதொரு வாலுவிடம் மாட்டிக் கொண்டு அடிவாங்கினாலும் வாங்குவேன் என்று நினைத்தேன் அனால் இப்படி தர்ம அடி கிடைக்கும் என்று நினைக்கவில்லை, என்னச் செய்வது என்கிரகம் அப்படியுள்ளது அடிவாங்கிக் கொண்டு ஆலோசனைக் கூறும் ஒரே ஆலோசகர் நானாகத்தானிருப்பேன் (இதுவும் சும்மா விளையாட்டுக்கு). ஓ தாராளமாக உங்க பொண்ணை அவங்க அப்பா சம்மதித்தால் எங்க வீட்டுக்கு அனுப்புங்க, நானே வந்து அழைத்துவருகின்றேன் சரியா, கவலையை விடுங்க இந்த அத்தை அவங்களை பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட வைப்பதோடு அவைகளைச் செய்யவும் டிரெயினிங்கும் கொடுத்து அனுப்புகின்றேன்.

இந்த திரட் உங்களுக்கும் உதவுவதில் மகிழ்ச்சி, நிச்சயமாக நீங்க கூறியபடியே மெனுக்களை டிரை செய்து பாருங்கள், குழந்தைகளுக்கு நாம் அக்கரையுடன் உணவை செய்து கொடுப்பதைப் போலவே, அதைப் பற்றி அவர்களிடம் நிறைய்ய பேசி பேசியே அவர்களின் ஆர்வத்தையும்,ஒவ்வொறு நாளும் தான் என்ன மாதிரியான உணவை உட்கொள்கின்றோம், என்ற அறிவையும் சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு ஊட்டிவிடுவது நல்லது.இதனால் இருபாலருமே உணவைப் பற்றிய விழிப்புணர்வோடு ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது நிச்சயம். நன்றி மீண்டும் சந்திபோம்.

டியர் ரஜினி தங்களின் மகளிர் தினத்தன்று கொடுத்த பூங்கொத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன், தங்கள் அன்பிற்க்கு நன்றி.உங்க செல்ல மகனுக்கு கிரேப்ஸ் பிடிக்கும் என்றால் அதை தினமும் சாப்பிடுவதால் உடம்புக்கு நல்லது தானே. எனக்கு ஏன் அதை எடுக்கக் கூடாது என்று தெரியவில்லை. ஊரில் நினைவுத் தெரிந்த நாளிலிருந்தே இந்த பல ரகங்களில் கிடைக்கும் கிரேப்ப்ஸையெல்லம் சாப்பிடுவோமே அதில் பன்னீர் திராட்ச்சையின் சுவையே தனி தான், எனக்கு தெரிந்த வரையில் அதில் கெடுதல் என்று எதுவுமில்லை. காலையில் வைட்டமின் சீ அதிகமுள்ள பழங்கள் கொடுப்பது நல்லது. ஆரங்சு, கமலா, கீவீ, தர்பூசணி, கிரேப் ஃபுரூட், ஸ்ராபெர்ரி, புலூபெர்ரி போன்ற பழங்களின் ஜூஸ் அல்லது பழத்துண்டுகள் என்று தரலாம் ஒகேவா. நிச்சயமாக நீங்க கூறியபடியே புள்ளீங்ககிட்டயிருந்து தப்பிக்க முயற்ச்சி செய்கின்றேன் ஆக இப்போதைக்கு ஜூட்.

மேலும் சில பதிவுகள்