பள்ளிக்கூட குழந்தைகளின் காலைஉணவு.

அன்பு நேயர்கள் எல்லோருக்கும் வணக்கம். இன்றைக்கு பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளைப் பற்றி மற்றொரு தலைப்பாக அவர்களின் காலை உணவைப்பற்றி அதைக் கொடுக்க எப்படியெல்லாம் அவர்களை சமாளிப்பதுப் பற்றியும் உரையாடலாம் வாங்க. குழந்தைகளுக்கு காலை உணவு மிகவும் முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால் அதைச் சரியாக செயல்படுத்த முடியாமல் தாய்மார்கள் தவிப்பதை காணமுடிகின்றது. அதற்கு நேரமும் பொருமையும் இருப்பதில்லை என்றாலும், குழந்தைகளின் ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை.அந்த காலத்தில் பள்ளிக்கூடங்கள் காலை ஒன்பதிலிருந்து பத்து மணிக்கு தான் திறக்கும் ஆகையால் பள்ளிமாணவ மாணவிகள் முதல் வேலைக்கு போகும் தாய்மார்கள் வரை நிதானமாக எழுந்து குளித்து காலையுணவை சாப்பிட்டுவிட்டு விவிதபாரதியில் நீங்கள்கேட்டவை எல்லாம் கேட்டு முடிந்த பிறகு நிதானமாகப் போனால் போதும்.

ஆனால் எனது குழந்தைகளின் காலத்திலிருந்தே அந்த நேரம் மாறிவிட்டிருந்ததென்னவோ உண்மை. என்னிலிருந்து இன்றைய இளந் தாய்மார்கள் வரையில் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்துவதும்,உணவை சாப்பிடவைப்பதும் போல கஷ்டமான வேலை வேறு எதுவும் இல்லை என்று தான் கூறூவேன். ஆனாலும் ஒவ்வொறு நாளும் அவ்வாறு குழந்தைகளுக்கு செய்யும் எந்த விசயத்திலும் அவர்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தான் கிடைக்கும் என்பது உண்மை என்றாலும் அதை சரிவர செய்யமுடியாமல் தான் போகின்றது. இதில் யார்மேலும் குற்றம் கூறமுடியாது இன்றைய அவசர வாழ்க்கையின் சூழல் அவ்வாறு அமைந்துவிட்டது தான் காரணம். ஆனாலும் குறைந்தப் பட்சம் நம்மால் முடிந்தவரை வாழ்க்கை முறையைத் திட்டமிட்டு செம்மைப்படுத்திக் கொள்வதின் மூலம், சூழ்நிலைக்கேற்ப்ப நம்மை மாற்றிக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு குறைந்தப் பட்சம் பத்துவயது வரையிலாவது தாய்மார்கள் காலையுணவை கூடயிருந்து கொடுக்கவேண்டும் அல்லது ஊட்டிவிட வேண்டும் மற்றநேர உணவுகளுக்கு அவ்வளவு கவனம் தேவையில்லை மேற்ப்பார்வை பார்த்தால் போதுமானது.காலையில் குழந்தை எழுந்தவுடன் முதலில் பல்தேய்க்க வைத்து விட்டு சாப்பிட பழக்கிவிடுவது நல்லது. முதலில் பால் பிறகு திட உணவு என்றெல்லாம் வேண்டாம்.அதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லையே.

1.பாலுடன் சேர்ந்த திட உணவாக அவர்கள் விரும்பும் கார்ன்ஃபிளேக் கொடுத்துவிடுங்கள்.கூடவே ஒரு சிறிய பழத்துண்டு போதும்.
2.நமது பாரம்பரிய உணவான மோர் சாதம் மிகவும் நல்லது.இதனுடன்வேறு எதும் வேண்டாம்.
3.இட்லி தோசை போன்ற உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்திருந்து சூடு படுத்தி கொடுங்கள்.
4. ஒரு நாளைக்கு வேகவைத்த காய்கறிகளை கொண்டு ஸ்டஃப் செய்த்த பரோட்டாகளின் துண்டுகளை பழஜூசுடன் கொடுக்கலாம்.
5. பால் சேர்த்த ராகிகஞ்சி ஒரு கப் கொடுத்தால் போதுமானது.
6.சப்பாத்தியில் ஜாம் தடவி உருட்டி கொடுத்தால் கூட போதும்.
7.முட்டையை ஆம்லட்டாக ஊற்றி அதன் மீது குடமிளகாயை பொடியாக நறுக்கி தூவி சிறிது சீஸைப் போட்டு மடித்து கொடுக்கலாம்.
8.ஃபிரன்ச் டோஸ்ட்டின் மூலம் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமான காலையுணவைக் கொடுக்கலாம்.
9. வேகவைத்த முட்டையுடன் ஒரு கப் பால் அல்லது ஜூஸ் போதுமானது.
10. ஒரு நாளைக்கு பேன் கேக்ஸ்ஸை முன்கூட்டியே செய்து வைத்திருந்து காலையில் கொடுக்கலாம்.
11. இரண்டு துண்டு பெனானா பிரட்டுடன் ஒரு சிறிய கோப்பை ஃபுரூட் ஜெல்லி போதுமானதாக இருக்கும்.
12.ஒரு நாளைக்கு பீனட் பட்டர் சான்வீச் செய்து குழந்தைகளுக்கு பிடித்தமான வடிவில் வெட்டி கொடுக்கலாம்.
13. ஒரு நாளைக்கு சீஸ் சான்வீச் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
14.பழங்களுடன் கேரட் போன்ற காய்களில் செய்த ம்ஃப்பினும் பாலும் சேர்த்து தரலாம்.
15. இடியாப்பம்,வேகவைத்த நூடுல்ஸ் அல்லது பாஸ்தா கையிருப்பு இருந்தால் அதனுடன் சிறிது சர்க்கரை, வறுத்து பொடித்த வேர்கடலைத்தூள்,சிறிது உருக்கிய வெண்ணெய் ஒரு சிட்டிகை ஏலப்பொடி தூவி நன்கு கலக்கி கொடுத்தால் குழந்தைகள் அதை நொடியில் காலிசெய்து விடுவார்கள்.

இவ்வாறு தினமும் அவர்களுக்கு, உணவில் வெறுப்பு உண்டாகாத வகையில் உங்க கற்பனைக்கேற்றவாறு மாற்றி மாற்றி ஏதாவது ஒரு காலைஉணவை தினப்படிசாப்பிட வைப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்க்கும், மனவலிமைக்கும் மிகவும் நல்லது.இதனால் குழந்தை நாள்முழுக்க வகுப்பில் பாடங்களை கவனமுடன் பயிலயும், மற்றவர்களுடன் நிதானமாக பழகவும் வழிவகுக்கும்.

இதைச் செயல்படுத்த காலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டுமானால் தாய்மார்கள் குறைந்தது இரண்டு மணிநேரம் முன்னதாக எழுந்திரிக்க பழகிவிடுவது நல்லது. இதனால் முக்கால்வாசி பிரச்சனைகளை சமாளித்துவிடலாம், ஒரு மணி நேரம் உங்களுக்காகவும், மீதியிருக்கும் நேரத்தில் குழந்தையை நிதானமாக பள்ளிக்கூடத்திற்க்கோ அல்லது டேக்கேருக்கோ அவர்களை தயார் செய்ய முடியும்.முக்கியமாக தாய்மார்கள் காலையில் சமைப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் இதனால் நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம். காலையில் தேவையான உணவை இரவிலேயே தயார் செய்து வைத்துவிடுவது நல்லது.

தினமும் இரவில் சாப்பிடுவதற்க்கு முன்பு சுடுதண்ணீரில் குளிக்கவைத்த பிறகு சாப்பிடவைத்து, அதன் பிறகு உறங்க வைத்தால் காலையில் நல்ல பசிஎடுக்கும். குறைந்தது பத்துமணி நேரம் உறங்கும்படி பழக்கப்படுத்த வேண்டும், அப்போதே அடுத்த நாளைக்கான காலையுணவைப் பற்றி அவர்களிடம் கூறி சம்மதம் வாங்கிவிடால் பிறகு அதே நினைவில் காலையில் எழுந்தவுடன் அவர்களுக்கு பசியும் தானாக எடுக்கும், அதே நேரத்தில் நல்ல உறக்கம் இருந்ததால் அம்மாவிற்க்கு நல்ல ஒத்துழைப்பும் கொடுப்பார்கள்.

ஆகவே உங்க குழந்தைகள் பிள்ளிக்கூடம் செல்வதற்க்கு சிறிது கால இடைவெளியிலிருந்தே இந்த பழக்கத்தை சிறிது சிறிதாக பழக்கிவிடுவது நல்லது. பள்ளி விடுமுறை என்றால்கூட காலையில் சிறிது நேரம்கழித்து எழுந்திரிக்க விடலாமே ஒழிய அந்த காலைநேர ஒழுங்கு முறையை தவறாமல் கடைப்பிடிக்க வைப்பது நல்லது. குளித்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட பிறகு தான் டீவி, ஆட்டம் பாட்டம்மெல்லாம்.

என்னைக் கேட்டல் வேலைக்கு போகும் தாய்மார்களை விட வீட்டிலிருப்பவர்களுக்கு தான் இந்த நேரப்பிரச்சனை அதிகமாயிருக்கும் ஆனாலும் அவர்களும் அவர்களின் அலுவல்களுக்கு ஏற்றமாதிரி காலைநேரத்தில் கவனம் செலுத்தி குழந்தைகளை வளர்ப்பது தொட்டில் பழக்கம் கடைசீ மட்டும் என்பதைப் போல் ஒரு தாய் மனதுவைத்தால் அவள் தன் குழந்தைக்காக எந்த சூழ்நிலையையும் அவர்களுக்கேற்றவாறு எப்படிவேண்டுமானாலும் மாற்றிவிட முடியும் என்பதால் இந்த ஒரு சிறிய ஆலோசனையை கூறினேன், உங்க கருத்துக்களையும் கூறலாம். நன்றி.

ஹலோ மாலதி நான் என்ன விறகுஅடுப்பிலா சமைக்கின்றேன்! பாத்திரங்களைப் போட்டு தேய்ப்பதற்க்கு.அப்படியெல்லாம் நான் பாத்திரங்களை இம்சிப்பதில்லை. உண்மையை கூற வேண்டுமானால் பாத்திரம் தேய்ப்பது ,கறிகாய் நறுக்குவது இரண்டும் எனக்கு பிடிக்காது. இங்கு வீட்டு வேலைக்கு ஆள் தானே...அதெல்லாம் கிடைப்பார்கள் ஆனால் சம்பளம் கொடுக்கத்தான் நமக்கு வசதியில்லை. எழுத்தாளர் சுஜாத்தாவின் மறைவு மனவருத்தத்தை தந்தது, அவருடைய எந்த படைப்பையும் நான் குறிப்பிட்டு படித்தது கிடையாது, வெறும் கதைகளின் தலைப்பை பார்த்து கதைபடித்த சாதாரணன வாசகி நான் ஆகவே தான் அந்த திரட்டில் உங்களுடன் பங்குக் கொள்ள முடியாமல் போய்விட்டது. உங்க எல்லோருடையா பதிவைப் பார்த்த பிறகு அவருடைய படைப்புகளை படிக்க ஆர்வமாயுள்ளேன், எழுத்தாளர்களுக்கு சாவே கிடையாது என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?

பேன்கேக் குறிப்பை உங்க பேரனுக்கு செய்து தரப்போவதாக சொன்னீங்க ரொம்ப சந்தோசமாக இருந்தது. எனக்கா மூன்று குழந்தைகள், ஒரு பெண், இரண்டு ஆண். மூத்தவர்கள் இரண்டு பேரும் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கின்றார்கள். மூத்தவர் பொறியாளர் பிரிவில் மூன்றாம் ஆண்டு, இரண்டு வருடம் பிரேக் எடுத்துவிட்டு படிக்கின்றார், அடுத்தது எங்க செல்லி, அப்பா செல்லம் பிஏ இறுதியாண்டு படிக்கிறாங்க அடுத்த வருடம் லா ஸ்கூல் போகப்போறாங்க, அதற்கான ஏற்பாடுகளில் பிஸியாக இருக்காங்க. இளையவர் பள்ளியிறுதி ஆண்டில் இருக்கின்றார், அவரும் கல்லூரியில் அட்மிஷன் வாங்கிவிட்டார். மருத்துவம் படிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம் பார்க்கலாம், மூன்று வருடம் கழித்து தான் தெரியும். இந்தியாவிற்கு எப்போ வருவேன் என்று இப்போதைக்கு கூறமுடியாது வர வேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவேன் டைலாக் நல்லாயிருக்கா. ஒகே டியர் பிறகு சந்திக்கலாம் நன்றி.

வானதி டியர் உங்க செல்லத்தை இவ்வளவு சுலபத்தில் ஜெயித்து விட்டீர்களே!!! இல்லை...அத்தை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று எனது மருமகளை பயமுருத்தினீங்களா? எதுவானாலும் உங்க முயற்ச்சிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.இதுப் போலவே குழந்தைக்கு நிறைய உற்சாகம் கொடுத்து காலையில் சாப்பிட வையுங்கள். ஆமாம் நீங்க சொல்வதுப் போல் காலையுணவை சாப்பிடாமல் இருக்கும் குழந்தைகளுக்கு தான் உடல் உபாதைகள் வர வாய்ப்புகள் அதிகமாகின்றது என்பது நிருபிக்கப்பட்டு வருகின்றது. ஆக தங்களின் கருத்தால் நிச்சயம் இந்தப் பதிவு பயனுள்ளதாகவே உணர்கின்றேன். நன்றி மீண்டும் சந்திப்போம்

உங்க பதில் பார்த்து ரொம்ப சந்தோஷம்.ஆரம்ப காலத்தில் உங்களிடம் நிறைய்ய சந்தேகம் கேட்டு இருக்கேன்.உங்களிடம் இருந்து உடனே பதில் வரும்.அது எனக்கு மிகவும் பிடித்த விசயம்.சின்ன வயசிலேயே கல்யாணம் ஆனதால இங்கு நேரில் சந்திப்பவர்களும் உங்கல போலதான் கேப்பாங்க. நான் நீண்ட நாள் மெம்பரா இருந்தாலும் அதிகமா பேசியிருக்கமாட்டேன்.இங்கு நான்கு நாட்களா காலை உணவு பேன் கேக் தான் ஓடிகிட்டு இருக்கு.ரொம்ப சந்தோஷம் மேடம் நன்றி.

அன்புடன் பர்வீன்.

ஹாய் மனோகிரி மேடம் ,எப்படி இருக்கிறீங்க?இப்போது தான் உங்க பதிவை பாத்தேன் .மிகவும் லேட்டா பதில் அனுப்பியதற்கு ஸாரிங்க.2 நாளாக அருசுவைக்கு வர முடியவில்லை.என் பையனின் பெயர் கோமேஷ்.நன்றி.மீண்டும் சந்திப்போம்.பையன் அழ ஆரம்பித்து விட்டான்.

ramba

i read all ur suggestion abt babies. i have one problem. my son is almost 3.

He is not share his toys and he behave very rude with other kids.and in front of our guest he behaves very strange,that time he's not obey our words. Im totally upset. plez give me some tips to change my son's bad habbits.

hi jayanthi
there r a lot of playschools in norwood.
1. norwood christian preschool
2. living waters church preschool
3. willett early childhood education
4. kinderbook preschool(inside windsor gardens)

the session starts in september in all the schools. I think you can start in the session that starts in september. you can google for their contacts and collect info on the registrations as they do it in advance.

And also the rent for a 2 bhk will be around 1500-1700$

bye hope this helps

renuka

nationality

hello madam
என் மகனுக்கு 3 வயது ஆகபோகிறது.
அவனுக்கு சாப்பிட பிடிக்காது, தூங்க பிடிக்காது. நான் சமையலில் expertnnu solla mudiyaadu, but goodnu rate pannallaam. mood irundaa saapiduvan.
paadi dosai, boiled eggla only white. 2sip of juice. rombo choosy.
everytime i hv to give him inspirational talks to eat once. or poochandi varum, car pogudu, squirrel, crow kamichu illai bayamuruthi sappida vaikkanum.

sleep is something which he does without knowing. whenever we put him off to sleep he sees to that we all sleep and then he sleeps. so playful with 2 or 3 color of cars, 1 thomas, ...parallely stories and books. attimes he wants one particular color of car..searching the toy is very difficult.

i need your tips to improvise his eating and sleeping habits.

how many hrs. shd a 3 year old sleep?

my elder son has a routine, he sleeps by 9:30 and wakes up at 7. but trying to put my younger one to routine, but still not succeeded.

renuka

nationality

ஹலோ மனோஹரி மேடம், எப்படி இருக்கீங்க? உங்களோட பதிவு என்னை மாதிரி இளம் தாய்மார்மார்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும். முக்கியமாக நேரம் ஒதுக்குவது பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தது மிகவும் சரி. நான் எப்போதும் காலையில் நிறைய சமைக்கும் வேலைகளை வைத்துக் கொள்வது கிடையாது. ஆனாலும் 2 மணி நேரம் ஒதுக்காமல் அவசர அவசரமாக எல்லா வேலையும் செய்வேன். இனி ஒழுங்காக நேரம் ஒதுக்கி நிதானமாக என் பையனை சாப்பிட வைக்க வேண்டும். தங்களது இந்த ஆலோசனைக்கு நன்றி. தங்களது பதிவை படித்துக் கொண்டே வரும்போது யாரது, பிழையில்லாமல் தமிழ் டைப் செய்திருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டே படித்தேன். பிறகுதான் தங்களது பெயரையே பார்த்தேன். இத்தனை அழகாக அனைவருக்கும் பயன்படும் விஷயங்களை எழுதும் தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

ஊருக்கு சென்று விட்டு வந்ததிலிருந்து சரி வேலை. அலுவலகத்திலும் வீட்டிலும் நிலுவையில் இருந்த விஷயங்களை ஒருவாறாக முடித்து விட்டேன். இதோ நீங்கள் என்னிடம் கேட்ட விஷயங்கள். விருந்தோம்பலில் நம்ம அட்மினை மிஞ்ச யாரும் இல்லை. பிரியாணி, சிக்கன்65, பட்டர் சிக்கன், மீன் வறுவல், சாம்பார், ரசம் மற்றும் இன்னும் பல அயிட்டம்ஸ். சாப்பிடத்தான் முடியல. பாப்பி சமையலும் நல்லா இருந்தது. நம்ம அட்மின் நல்லா பாடறார். செல்வி மேடம், அவங்க கணவர், மனோ மேடம் எல்லோரையும் சந்தித்தேன். மனோ மேடம் என் அம்மாவின் ஸ்கூல் சீனியர். அவரின் தங்கையும் என் அம்மாவும் கிளாஸ்மேட். மிகவும் ஆச்சரியமான, அதே சமயம் சந்தோஷமான செய்தி இது. அம்மாவும் , மனோ மேடமும் தங்களது சிறு வயது பள்ளிக்கூட நினைவுகள், பாட்டு என்று பேசிக் கொண்டே இருந்தார்கள்.

அப்புறம் நானும், என் கணவரும் எப்படியோ என் பையனுக்கு கல்தா கொடுத்துட்டு ஊட்டி போயிட்டு வந்துட்டோம். நான் சென்ற போது ஊரில் சரி மழை. அதனால் மற்ற ஊர்களுக்கு போறதா போட்ட பிளானை மாத்த வேண்டியதா போயிடுச்சு. இந்தியா போகும் வழியில் சிங்கப்பூரில் அக்கா வீட்டில் 5 நாள் ஸ்டே. அங்கே லிஸ்ட் போட்டு வெச்சுட்டு எல்லா நாட்டு உணவுகளையும் சாப்பிட்டேன். அந்த உணவுகளின் செய்முறை குறிப்புகளை விரைவில் எழுதணும். மீண்டும் பேசுவோம்.

டியர் தேவசேனா நீங்க எப்படி இருக்கீங்க நான் நல்ல சுகம் நன்றி. நீங்க வந்தவுடன் போட்ட பதிவை பார்த்தேன் தினமும் பதில் எழுத வேண்டும் என்று நினைப்பேன் அதற்கு இன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லா விசயங்களையும் மறக்காமல் பதிலளித்திருந்தீர்கள். உங்க வெக்கேஷன் நல்ல முறையில் இருந்ததைக் கேட்க மனதுக்கு நிறைவாக இருந்தது.அட்மினின் விருந்தோம்பலை அனுபவிக்க உங்களைப் போன்ற அதிர்ஷ்ட்டசாலிகளால் மட்டும் தான் முடியும்.குழந்தைகளின் காலையுணவைக் குறித்த ஆலோசனை உங்களுக்கும் உதவுவதில் மகிழ்ச்சியே.பாராட்டியமைக்கு நன்றி.புதிய ரெஸிப்பிக்களை கொடுக்கப்போவதாக உழுதியுள்ளீர்கள், அவைகளை செய்து சுவைக்க நானும் ஆவலாய் உள்ளேன் நன்றி.

வணக்கம் மேடம் ,
என் பெயர் சுகுணா . நான் நியூ ஜெர்சியில் வசிகிரன் .இபோதான் உங்கள் பதிவுகளை எல்லாம் படித்தேன் . எப்படி மேடம் இவ்வளவு அழகா எழுத்தூறீங்க. எல்லாமே ரொம்ப உபயோகமா இருக்கு மேடம். அதற்கு ரொம்ப நன்றி மேடம். நிங்கள் கணவன் - மனைவி உறவை பத்தி எழுதி இருக்கீகளா? எனக்கு அந்த லிங்க்க அனுப்புக மேடம். உங்கள் தமிழ்க்கு கம்பர் பனுபோது என் தமிழ் ரொம்ப மோசமா இருக்கு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கக . அடுத்த தடவ பிழை இலாம எழுத ட்ரை பண்ணுறன் மேடம்.

be healthy

be healthy

மேலும் சில பதிவுகள்