பள்ளிக்கூட குழந்தைகளின் காலைஉணவு.

அன்பு நேயர்கள் எல்லோருக்கும் வணக்கம். இன்றைக்கு பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளைப் பற்றி மற்றொரு தலைப்பாக அவர்களின் காலை உணவைப்பற்றி அதைக் கொடுக்க எப்படியெல்லாம் அவர்களை சமாளிப்பதுப் பற்றியும் உரையாடலாம் வாங்க. குழந்தைகளுக்கு காலை உணவு மிகவும் முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால் அதைச் சரியாக செயல்படுத்த முடியாமல் தாய்மார்கள் தவிப்பதை காணமுடிகின்றது. அதற்கு நேரமும் பொருமையும் இருப்பதில்லை என்றாலும், குழந்தைகளின் ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை.அந்த காலத்தில் பள்ளிக்கூடங்கள் காலை ஒன்பதிலிருந்து பத்து மணிக்கு தான் திறக்கும் ஆகையால் பள்ளிமாணவ மாணவிகள் முதல் வேலைக்கு போகும் தாய்மார்கள் வரை நிதானமாக எழுந்து குளித்து காலையுணவை சாப்பிட்டுவிட்டு விவிதபாரதியில் நீங்கள்கேட்டவை எல்லாம் கேட்டு முடிந்த பிறகு நிதானமாகப் போனால் போதும்.

ஆனால் எனது குழந்தைகளின் காலத்திலிருந்தே அந்த நேரம் மாறிவிட்டிருந்ததென்னவோ உண்மை. என்னிலிருந்து இன்றைய இளந் தாய்மார்கள் வரையில் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்துவதும்,உணவை சாப்பிடவைப்பதும் போல கஷ்டமான வேலை வேறு எதுவும் இல்லை என்று தான் கூறூவேன். ஆனாலும் ஒவ்வொறு நாளும் அவ்வாறு குழந்தைகளுக்கு செய்யும் எந்த விசயத்திலும் அவர்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தான் கிடைக்கும் என்பது உண்மை என்றாலும் அதை சரிவர செய்யமுடியாமல் தான் போகின்றது. இதில் யார்மேலும் குற்றம் கூறமுடியாது இன்றைய அவசர வாழ்க்கையின் சூழல் அவ்வாறு அமைந்துவிட்டது தான் காரணம். ஆனாலும் குறைந்தப் பட்சம் நம்மால் முடிந்தவரை வாழ்க்கை முறையைத் திட்டமிட்டு செம்மைப்படுத்திக் கொள்வதின் மூலம், சூழ்நிலைக்கேற்ப்ப நம்மை மாற்றிக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு குறைந்தப் பட்சம் பத்துவயது வரையிலாவது தாய்மார்கள் காலையுணவை கூடயிருந்து கொடுக்கவேண்டும் அல்லது ஊட்டிவிட வேண்டும் மற்றநேர உணவுகளுக்கு அவ்வளவு கவனம் தேவையில்லை மேற்ப்பார்வை பார்த்தால் போதுமானது.காலையில் குழந்தை எழுந்தவுடன் முதலில் பல்தேய்க்க வைத்து விட்டு சாப்பிட பழக்கிவிடுவது நல்லது. முதலில் பால் பிறகு திட உணவு என்றெல்லாம் வேண்டாம்.அதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லையே.

1.பாலுடன் சேர்ந்த திட உணவாக அவர்கள் விரும்பும் கார்ன்ஃபிளேக் கொடுத்துவிடுங்கள்.கூடவே ஒரு சிறிய பழத்துண்டு போதும்.
2.நமது பாரம்பரிய உணவான மோர் சாதம் மிகவும் நல்லது.இதனுடன்வேறு எதும் வேண்டாம்.
3.இட்லி தோசை போன்ற உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்திருந்து சூடு படுத்தி கொடுங்கள்.
4. ஒரு நாளைக்கு வேகவைத்த காய்கறிகளை கொண்டு ஸ்டஃப் செய்த்த பரோட்டாகளின் துண்டுகளை பழஜூசுடன் கொடுக்கலாம்.
5. பால் சேர்த்த ராகிகஞ்சி ஒரு கப் கொடுத்தால் போதுமானது.
6.சப்பாத்தியில் ஜாம் தடவி உருட்டி கொடுத்தால் கூட போதும்.
7.முட்டையை ஆம்லட்டாக ஊற்றி அதன் மீது குடமிளகாயை பொடியாக நறுக்கி தூவி சிறிது சீஸைப் போட்டு மடித்து கொடுக்கலாம்.
8.ஃபிரன்ச் டோஸ்ட்டின் மூலம் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமான காலையுணவைக் கொடுக்கலாம்.
9. வேகவைத்த முட்டையுடன் ஒரு கப் பால் அல்லது ஜூஸ் போதுமானது.
10. ஒரு நாளைக்கு பேன் கேக்ஸ்ஸை முன்கூட்டியே செய்து வைத்திருந்து காலையில் கொடுக்கலாம்.
11. இரண்டு துண்டு பெனானா பிரட்டுடன் ஒரு சிறிய கோப்பை ஃபுரூட் ஜெல்லி போதுமானதாக இருக்கும்.
12.ஒரு நாளைக்கு பீனட் பட்டர் சான்வீச் செய்து குழந்தைகளுக்கு பிடித்தமான வடிவில் வெட்டி கொடுக்கலாம்.
13. ஒரு நாளைக்கு சீஸ் சான்வீச் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
14.பழங்களுடன் கேரட் போன்ற காய்களில் செய்த ம்ஃப்பினும் பாலும் சேர்த்து தரலாம்.
15. இடியாப்பம்,வேகவைத்த நூடுல்ஸ் அல்லது பாஸ்தா கையிருப்பு இருந்தால் அதனுடன் சிறிது சர்க்கரை, வறுத்து பொடித்த வேர்கடலைத்தூள்,சிறிது உருக்கிய வெண்ணெய் ஒரு சிட்டிகை ஏலப்பொடி தூவி நன்கு கலக்கி கொடுத்தால் குழந்தைகள் அதை நொடியில் காலிசெய்து விடுவார்கள்.

இவ்வாறு தினமும் அவர்களுக்கு, உணவில் வெறுப்பு உண்டாகாத வகையில் உங்க கற்பனைக்கேற்றவாறு மாற்றி மாற்றி ஏதாவது ஒரு காலைஉணவை தினப்படிசாப்பிட வைப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்க்கும், மனவலிமைக்கும் மிகவும் நல்லது.இதனால் குழந்தை நாள்முழுக்க வகுப்பில் பாடங்களை கவனமுடன் பயிலயும், மற்றவர்களுடன் நிதானமாக பழகவும் வழிவகுக்கும்.

இதைச் செயல்படுத்த காலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டுமானால் தாய்மார்கள் குறைந்தது இரண்டு மணிநேரம் முன்னதாக எழுந்திரிக்க பழகிவிடுவது நல்லது. இதனால் முக்கால்வாசி பிரச்சனைகளை சமாளித்துவிடலாம், ஒரு மணி நேரம் உங்களுக்காகவும், மீதியிருக்கும் நேரத்தில் குழந்தையை நிதானமாக பள்ளிக்கூடத்திற்க்கோ அல்லது டேக்கேருக்கோ அவர்களை தயார் செய்ய முடியும்.முக்கியமாக தாய்மார்கள் காலையில் சமைப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் இதனால் நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம். காலையில் தேவையான உணவை இரவிலேயே தயார் செய்து வைத்துவிடுவது நல்லது.

தினமும் இரவில் சாப்பிடுவதற்க்கு முன்பு சுடுதண்ணீரில் குளிக்கவைத்த பிறகு சாப்பிடவைத்து, அதன் பிறகு உறங்க வைத்தால் காலையில் நல்ல பசிஎடுக்கும். குறைந்தது பத்துமணி நேரம் உறங்கும்படி பழக்கப்படுத்த வேண்டும், அப்போதே அடுத்த நாளைக்கான காலையுணவைப் பற்றி அவர்களிடம் கூறி சம்மதம் வாங்கிவிடால் பிறகு அதே நினைவில் காலையில் எழுந்தவுடன் அவர்களுக்கு பசியும் தானாக எடுக்கும், அதே நேரத்தில் நல்ல உறக்கம் இருந்ததால் அம்மாவிற்க்கு நல்ல ஒத்துழைப்பும் கொடுப்பார்கள்.

ஆகவே உங்க குழந்தைகள் பிள்ளிக்கூடம் செல்வதற்க்கு சிறிது கால இடைவெளியிலிருந்தே இந்த பழக்கத்தை சிறிது சிறிதாக பழக்கிவிடுவது நல்லது. பள்ளி விடுமுறை என்றால்கூட காலையில் சிறிது நேரம்கழித்து எழுந்திரிக்க விடலாமே ஒழிய அந்த காலைநேர ஒழுங்கு முறையை தவறாமல் கடைப்பிடிக்க வைப்பது நல்லது. குளித்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட பிறகு தான் டீவி, ஆட்டம் பாட்டம்மெல்லாம்.

என்னைக் கேட்டல் வேலைக்கு போகும் தாய்மார்களை விட வீட்டிலிருப்பவர்களுக்கு தான் இந்த நேரப்பிரச்சனை அதிகமாயிருக்கும் ஆனாலும் அவர்களும் அவர்களின் அலுவல்களுக்கு ஏற்றமாதிரி காலைநேரத்தில் கவனம் செலுத்தி குழந்தைகளை வளர்ப்பது தொட்டில் பழக்கம் கடைசீ மட்டும் என்பதைப் போல் ஒரு தாய் மனதுவைத்தால் அவள் தன் குழந்தைக்காக எந்த சூழ்நிலையையும் அவர்களுக்கேற்றவாறு எப்படிவேண்டுமானாலும் மாற்றிவிட முடியும் என்பதால் இந்த ஒரு சிறிய ஆலோசனையை கூறினேன், உங்க கருத்துக்களையும் கூறலாம். நன்றி.

:)

திரும்பவும் இந்த லின்க்கை பார்ப்பதில் மகிழ்ச்சி.நான் வந்த புதிது.தமிழ் டைப்பிங் பழகலை,ஆனாலும் அப்பவே என் குழந்தைகளை பற்றி எல்லாம் விசாரித்து இருக்கீங்க.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அக்கா இப்ப தான் உங்க த்ரெடை பார்த்தேன். பார்த்ததும் என்க்கு ரொம்ப மகிழ்ச்சி. ஏனென்றால் இதுக்கு முன்னாலேயே பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு எளிதில் செய்து அனுப்பும்படியான மெனு கேட்டிருந்தேன்.(உங்க கிட்ட இல்ல) அக்கா என் பையனுக்கு பிரேக் பாஸ்ட் ஆக முஸ்லி + பால், ஆம்லெட் தான் டெய்லி கொடுத்து அனுப்புகிறேன். லன்ச் குறிப்புகளும் கொடுங்க பிளீஸ். ( என் பசங்களுக்கு வயது ஏழு, ஐந்து, மூன்று). நன்றி அக்கா.

மனோகரி மேடம்,
எப்படி இருக்கீங்க?
என் பதிவுக்கு பதிலே இல்ல மேடம்.
நீங்க ரொம்ப பிஸியா? இல்ல நான் ஏதாது தப்பா கேட்டேனா. தப்பா இருந்தால் மன்னிக்கவும்.
be healthy

be healthy

மேலும் சில பதிவுகள்