மஷ்ரூம்

ஹி மஷ்ரூம் என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் ஆகயால் வாங்கி வந்து விட்டேன்.
அது நடுவில் தண்டு போல் உள்ளது அதை எடுக்கனுமா இரண்டாக பிரித்தால் உள்ளே இரண்டு பக்கமும் வாழை பூவில் இருப்பது போல் பொடியாகா செதில் போல இருக்கு அதையும் எடுத்துவிட்டு சமைக்கனுமா.
மஷ்ரூம் அடிக்கடி சமைகும் புலிகள் இதற்கு விளக்கம் அளிக்கவும்.

ஜலீலா

அடிக்கடி மஷ்ரூம் சமைக்கும் புலிகள் இதற்கு விளக்கம் அளிக்கவும்.

மஷ்ரூம் இது வரை செய்ததில்லை நேற்று தான் முதல் முறையா செய்தேன் என் மெத்தேடில்

ஜலீலா

Jaleelakamal

சலாம் ஜலீலாக்கா என்னைப் பொறுத்தவரை மஷ்ரூமுக்கு அப்படியே கழுகி முழுவதுமாக நறுக்கி விடலாம்..எதையும் களைத் தேவையில்லை.
நான் பட்டானி மசாலா வுடன் மஷ்ரூம் சேர்த்து செய்வேன்...சிக்கன் போலவே தான் ஆனால் மசாலா கம்மியாக...நல்ல இருக்கும்.

வா அலைக்கும் அஸ்ஸலாம் தளிக்கா

நேற்று ஒரு நூரு கிராம் செய்தேன்.
முதலில் கட் பண்ணியதும் ஒன்றும் புரியவில்லை.
ஆகையால் எல்லா வற்றையும் களந்து விட்டு சமைத்தேன்.
மீதி வைத்துள்ளேன்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா

உங்களுக்கு சந்தேகமா என்னால் நம்ப முடியால்ல. எனக்கு தெரிந்த்தை சொல்றேன். பலவகை உண்டு.
மொட்டு காளான், பட்டை காளான், பெரிய குடை போல் உள்ள காளான். எதுவானாலும் நன்றாக அலம்பி எலுமிச்சை சாறில் 5 நிமிடம் வைத்து பிறகு சமைக்கத்தால் நிறமும் மாறாது சுவையும் நல்லா இருக்கும். தண்டு ரொம்பா தடிமானாக இருந்தால் அதை தனியாக கட் பன்னி சூப் பன்ணலாம். சபஜி பன்னுவதாக இருந்தால் நான் ரொம்ப சிம்பிள் ரெசிப்பி சொல்றேன்.

மஷ்ரூம் மசாலா

தக்காளி 1 பெரியது
வெங்காயம் 1 பெரிது
பூண்டு 2 சின்ன பல்
சோம்பு பொடி 1/2 ஸ்பூன்
காரப்பொடி 1 டீபூன்
தனியா பொடி 1/2 டீ ஸ்பூன்
கரம்மசாலா பொடி 1/2 டீ ஸ்பூன்
வேர்கடலை வறுத்து
பொடித்தது 1 டீ ஸ்பூன்
வெள்ளை எள்
வறுத்த பொடி 1/2 டீ ஸ்பூன்
உருளகிழங்கு 1 பெரியது
செய்முறை

முதலில் வானலியில் என்னைய் விட்டு சோம்பு பொரித்து பின் பூண்டு,வெங்காயம் போட்டு வதக்கி பின் தக்காளி போட்டு வதக்கி நல்லா வதங்கின பிறகு காளான் இரண்டாக கட் பண்ணி அதை போடவும். பிறகு கிழங்கை சின்னதாக கட் பண்ணி போடவும். ஒரு தட்டு வைத்து முடி 10 நிமிடம் வைக்கவும். வெந்தபின் வேர்கடலை பொடி,எள் பொடி. போட்டு கிளறவும். வெந்தபிறகு கொத்தமல்லி இலை போட்டு அலங்கரிக்கவும். இதை ரொட்டி,பரோட்டா,பராத்தா,பூரி,தோசை,சாதம் எல்லவற்றிற்கும் தொட்டு சாப்பிட நல்லா இருக்கும்.

விஜிTVM மஷ்ரூம்
ரொம்ப நன்றி நான் களான் சமைத்ததில்லை இது தான் முதல் முறை 250 கிராம் வாங்கி வந்து பாதி செய்தேன் பேபர் சிககன் முறையில் எனக்கு திருப்தி இல்லை.
நீங்க சொல்லியுள்ள முறையில் செய்து பார்க்கிறேன்.
பிரின்ட் எடுத்து வைத்துள்ளேன்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்