பிஃஷ் சமோசா

தேதி: March 10, 2008

பரிமாறும் அளவு: 6 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா - 300 கிராம்
ஓமம் - 1/2 தேக்கரண்டி
மீன் - 300 கிராம் (முள் இல்லாததது அல்லது முள் நீக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து மசித்தது)
பெரிய வெங்காயம் - 1 (சிறியது, மிகப் பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க


 

முதலில் மைதா மாவை ஓமம், உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவைப் போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு முள் நீக்கிய மீனை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தவா அல்லது வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, நறுக்கிய மீன் போட்டு வதக்கி பின் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 8 - 10 நிமிடம் வேக விடவும்.
அதன் பிறகு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கி இறக்கி வைக்கவும்.
பிசைந்த மாவை சிறு எலுமிச்சைபழ அளவு உருண்டைகளாக உருட்டி அப்பளமாக இட்டு பாதியாக கத்தியால் வெட்டவும்.
பின் ஒரு பாதியை எடுத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டுத் தடவி கோன் போல செய்து பூரணத்தை உள்ளே வைத்து அழுத்தி மூடவும்.
இதே போல் எல்லாவற்றையும் செய்து பின் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான பிஷ் சமோசா ரெடி.


மேலும் சில குறிப்புகள்