குழந்தைக்கு டாயிலட் கஷ்டப்படாமல் போக என்ன சாப்பாடு கொடுக்க வேண்டும்?

ஹாய் தோழிகளெ எப்படி இருக்கிறீங்க? என் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது.ஆனால் அவனுக்கு டாயிலட் போவதுக்கு ரொம்பவும் கஷ்டப்படறான் .அதனால் ராத்திரி சரியாக தூங்க மாட்டேங்கிறான்.அழுது அழுது படுக்கிறான்.டாயிலட் கஷ்டப்படாமல் போக என்ன சாப்பாடு கொடுக்க வேண்டும்?plese help me.

soak the raisin in the hot water for 10 mins and filter it and give it to baby,and u can use prune fruit same way.
Every morning give 20z of warm water or u can add 2pinch of sugar in the water.
try it.

ஹலோ ரம்பா,

எப்படி இருக்கீங்க?. குழந்தைக்கு இங்குள்ள வாழைப்பழம் [even Garber banana] கொடுத்து இருந்தால் வயிறு கட்டிக் கொள்ளும். ஒவ்வொரு முறையும் திட உணவு கொடுத்தவுடன் இளம்சூட்டில் கொஞ்சம் தண்ணீர் கொடுங்க. Rasins+hotwater ஊறவைத்தும் கொடுக்கலாம். ஆனால் 1 டேபிள் ஸ்பூனுக்கு மேல் தரவேண்டாம். சில சமயம் Loose motion ஆகிவிடும். உங்க குட்டிக்கு சீக்கிரம் சரியாகி விடும். வருத்தப்படாதீங்க.
Rajini

டியர் ரம்பா

வயிற்றில் நல்ல தொப்புளிலும், பின்னாடியும் விளக்கெண்ணய் தேத்து விடுங்கள்.
சூடாக குடுக்கும் பக்குவத்தில் வெண்ணீர் பாலடையில் (அ) பால் பாட்டிலில் (அ) ஸ்பூனால் கொடுங்கள்.

சோம்பை லேசாக வருத்து அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் அளவு வற்ற விட்டு கொடுக்கவும்.
ஆப்பில் கேரட் போன்றவை கொடுக்க இப்போதைக்கு கொடுக்க வேண்டாம்.
ஜலீலா

Jaleelakamal

hai ramba
என் குழந்தைக்கு கூட அந்த problem இருந்தது
எங்க பாட்டி சொன்ன வைத்தியம்
தினமும் ஒரு சொட்டு விளக்கெண்ணெயில் ஒரு சொட்டு தாய் பால் அல்லது ordinary பாலில் கலந்து குழைத்து வாயில் தவி வந்தால் free motion இருக்கும்
tryபண்ணி பாருங்க

radika

மேலும் சில பதிவுகள்