குழந்தைகளுக்கு வரும் அன்புத் தொல்லைகள்.

அன்பு நேயர்களுக்கு வணக்கம்,எல்லோரும் எப்படி இருக்கீங்க? குழந்தைகளின் நலன் கருதி நமது அன்புச் சகோதரி கதீஜா அவர்கள் என்னிடத்தில் கேட்டிருந்த ஆலோசனையில் குழந்தைகளுடன் நாம் அனைவருமே சம்பந்தப்பட்டிருப்பதால் அதைப் பற்றி தனியாக இந்த தலைப்பில் எனது கருத்துக்களைக் கூறியுள்ளேன்.பாருங்க.

உடல் நலமில்லாதவரிடம் குழந்தையை தரலாமா வேண்டாமா என்று ஒரு தாயிடம் கேட்டால் அது உறவினராயிருந்தாலும் சரி, கூடவே கூடாது என்று தான் குழந்தைகளின் நலன் கருதிய அங்கலாய்ப்பு வெளிப்படும் என்பது இயல்பு, இதில் தவறில்லை. சிறியக் குழந்தைகளுக்கு தன்னை தொற்று நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் திறன் மிக மிக குறைவு,இதை யாராலுமே மறுக்க முடியாது. அதே நேரத்தில் எல்லா நேரமும் எல்லாக் குழந்தைகளுக்கும் தொற்று நோய்களால் பிரச்சனை வரும் என்றும் கூற முடியாது ஆனால் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்று கூறலாம்.நம் குழந்தையை ஆசையுடன் தூக்கி முத்தமிடுபவர் நூற்றுக்கு நூறு சதவீதம் ஆரோக்கியமுள்ளவராக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்பதிலும் தவறில்லை ஆனால் அது நடைமுறையில் ஒத்துவராது நாமாகத்தான் அதை அந்த செயலை தடுக்க வேண்டும்.

அதற்க்கு சிறந்த வழி சுகமில்லாதவரிடம் குழந்தையை அணுகவிடாமல் இருப்பது தான். இதில் முகத்தில் அடிப்பது தலையில் அடிப்பதென்பதெல்லாம் நமது அர்த்தமற்ற கற்பனை.இந்த விசயம் படிப்பறிவில்லாத பெரும்பாலான பாமர மக்களுக்கும் தெரிந்த உண்மை என்பதை அனுபவத்தில் பார்த்திருக்கின்றேன். ஆனாலும் இது போன்று குழந்தைகளுக்கு இழைக்கும் அன்புத் தொல்லைகள் நடக்கத்தான் செய்கின்றது.ஆனால் அதை தடுக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கின்றது. இது முழுக்க முழுக்க ஒரு தாயின் பாதுகாப்புணர்வு என்பதால் அதை குறைச் சொல்ல யாரும் முன்வரமாட்டார்கள் என்பது தான் உண்மை.

ஆனால் அவ்வாறு தடுக்க எத்தனிக்கும் போது நல்ல நிதானத்தை கையாள வேண்டும், ஏன்னெனில் தான் சுகமில்லை என்றே உணர்வை மறந்து ஒரு குழந்தையை ஆசையுடன் தூக்கி முத்தமிட நினைக்கும் ஒருவர் அந்த குழந்தைகளுக்கு தீங்கிழைக்கும் நோக்கில் அவ்வாறு செய்வதில்லையே,குழந்தையின் மீதுள்ள அன்பின் வெளிப்பாடு தானே அது. ஆகவே நீங்க அவரிடம் அதே அன்பாகப் பேசி இப்போ குழந்தையை தூக்க வேண்டாம், உடம்பு சரியான பிறகு நாள்முழுக்க குழந்தையை தூக்கிவைத்துக் கொள்ளுங்களென்று அவர் மனம் நோகாதபடி தயவுடன் கேட்டுக் கொள்ளலாம் இதில் தவறொன்றுமில்லை. அதை ஏற்றுக் கொள்ள மறுப்பவரைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை.அவ்வாறு எதுவும் செய்யாமல் குழந்தைக்கு அசுகம் வர தாயே காரணமாக இருப்பது தான் தவறு.

ஆகவே நாமாக எதையாவது நினைத்து எதையும் செய்யாமல் இருந்துவிட்டு பிறகு, இவர்களால் தான் என் குழந்தைக்கு நோய் தொற்றிக் கொண்டது என்று ஏற்கனவே பாவம் சுகமில்லாமல் இருப்பவரைக் குற்றம் சொல்வதும், அதனால் அவர்களிடம் வெறுப்புக்குள்ளாவதும் தேவையற்றச் செயல் என்றே கூறுவேன்.

எதையுமே யாரிடத்திலும் நேருக்கு நேர் பேச பழக வேண்டும், ஆனால் அதில் யாரையும் காயப்படுத்தாமல் அமைதியாக பேச வேண்டும் என்பது தான் முக்கியம். எப்பேற்ப்பட்ட விசயமாக இருந்தாலும் பொறுமையுடன் அதை கையாண்டால் எந்தப் பிரச்சனையும் தோன்ற வாய்ப்பே இருக்காது. ஆகவே ஒவ்வொறு தாய்க்கும் தன் குழந்தைக்கு எந்த நோய்நொடியும் வரவிடாமல் காப்பாற்ற வேண்டிய கடைமையிருப்பதுப் போல்,இது போன்ற அன்புத் தொல்லைகளிடமிருந்துகூட தன் குழந்தையைக் காப்பதும் அவள் பொருப்பு தான் என்று கூறி முடிக்கின்றேன். இதற்கு வேறேதாவது மாற்று கருத்து இருந்தால் தாராளமாக கூறலாம். நன்றி.

அன்புள்ள மனோஹரி மேடம் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா. எனக்காக உங்க பொன்னான நேரத்தை ஒதுக்கி உடனே பதில் போட்டதுக்கு நன்றி மேடம்.
மேடம் நீங்க சொன்ன கருத்து அருமையாக இருக்கிறது. குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பு அந்த தாய்மார்களுக்கு இருக்கு அதே சமயம் அடுத்தவங்க மனசும் கஷ்டபடகூடாதுன்னு அருமையா சொல்லி இருக்கீங்க நானும் இனிமே உங்க சொல்படி ஃபாலோ பண்ணுகிறேன். மனோஹரி மேடம் கருத்துக்கு மாற்றுக்கருத்து ஏது. அனுபவம் பேசுகிறது உங்களை நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது . வாழ்க வளமுடன் வளர்க என்றும் உங்கள் பணி.தொடர்ந்து அறுசுவையில் நீங்க பங்கு பெறனும் மேடம் உங்களால் நாங்கள் அனைத்து சகோதரிகளும் பயனடையனும்னு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் கதீஜா.

மனோமேடம், வணக்கம்.

எனக்கு தெரிந்ததை சொல்ல விரும்புகிறேன். நாம் நம் குழந்தகளை கவணிக்க வேண்டியது. நாம் எங்கு போனாலும்,சரி,யார் வீட்டிற்க்கு போனாலும் சரி கவனிக்க வேண்டிய்யது ஒன்று. உணவு பொரூட்களை உண்ன கொடுக்கும்போது முடிந்தவரை நாம் முதலில் கொஞ்ஜம் சாப்பிட்டபிறகு குடுத்தால் நல்லது. எதற்க்கு சொல்கிரேன் என்றால் அந்த உணவு எப்பிடி இருக்கு காரமா,புளிப்பா,இணிப்பா,எந்த எண்னைய், இதில் எதாவது நம்ம குழந்தைகளுக்கும் ஒத்துகொள்ளவிள்ளை என்றால் அதணால் கூட நம் குழ்ந்ததைகளுக்கு கஷ்டம்,உபதைகள் வரலாம். அன்புதொல்ல்ல்யில் இதுவும் ஒன்று. உதரணத்துக்கு நம் அம்மவை எடுத்துகலாம் அம்மா சொல்ரங்க ஏம்மா இந்தா கேசரி நான் பண்னிது என் கைப்பட அப்பிடி சொல்வங்க தப்பில்லை நம்ம அம்மதான். ஆனால் நாம் உடனே முதலில் கொஞ்ஜம் எடுத்து சாப்பிட்டு பிறகு குடுத்தால் நமக்கும் தெரியும். சிலர் டால்டாவில் பான்னுவார்கள்,சிலர் சுத்தநெய்யில் பன்னுவார்கள்.நம்ம குழந்தைக்கு டால்டா ஒத்துகொள்ளது. இந்தமாதிரி.... நிறய்ய விஷயங்கள் இருக்கு. நன்பர்கள் வீட்டிலும் கவண்ம் தேவை. சிலர் வீட்டில் காரம் ஜாஸ்த்தியாக இருக்கும். இந்த மாதிரி சின்ன அன்புதொல்லகள் இருக்கும். நம்ம குழந்தைக்கு அது சாபிடணும் போல் இருக்கும்.முடிந்தவரை நாம்ம ஒரு கண் எப்போதும் வைத்து இருக்க வேண்டும். ஒரு சில புத்திசாலிகள் முதல்யே சொல்வார்கள். எங்க வீட்ல கொஞ்ஜம் காரம் ஜாஸ்த்தி பார்த்து குடுங்க குழந்தைக்கு.

என்னைப்பொறுத்து, குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்புத்தான். அதற்காக கடுமையாக பொத்தி வளர்க்கக்கூடாது. கடுமையான தொற்று நோய்கள், வியாதிகள் என்றால் தடுக்கத்தான் வேண்டும். ஆனால் அப்படி இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதைத்தான் தவிர்க்க வேண்டும். கூட்டிப் போய்விட்டு தொடவேண்டாம் என்பது அழகல்ல. இதனால் குழந்தைக்கும் கஸ்டம். தாமாக உணர்ந்து தொடாமல் இருந்தால் சரி. மற்றபடி குழந்தை என்றால் யாருக்கும் ஆசை தான், சிலர் நோயையும் மறந்து தூக்குவார்கள். நாம் எப்படி தடுப்பது. எனது கணவர் சொல்வார், அடிக்கடி பிள்ளைகளைக் கழுவி உடைமாற்றி விடுங்கள் மற்றபடி எதற்கும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று. என் கணவரின் நண்பர்கள் சிலர் நேரே hospital ல் வருவார்கள் எங்கள் சின்னவர் தூக்க சொல்லி ஓடுவார், ஒரு நண்பர் சொல்வார் நான் இன்னமும் உடை மாற்றவில்லை, பின்னர் தூக்குகிறேன் என்று. இன்னுமொருவர் வருவார் அவருக்கு பிள்ளைகளில் அதிக ஆசை, அவர் உடனேயே தூக்கி மடியில் வைப்பார். நாங்கள் யாரைத் தடுப்பது?
மற்றவர் மனம் நோகாதபடிதான் நடக்கவேண்டும். நாளை எமக்கும் அப்படி ஒரு நிலை வரலாம் என எண்ணவேண்டும். பொத்தி பொத்தி வளர்க்கப்படும் குழந்தைகள்தான் அதிகம் நோய் வாய்ப்படுகிறார்கள். வீதியோரங்களில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளருகிறார்கள்.
அதனால் என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளை free ஆக வளர விடுவதுதான் நல்லது. அவர்கள் உடலிலும் நோய் எதிப்புசக்தி சீக்கிரம் வந்துவிடும். கஸ்டப் பட்ட பிள்ளைகளுக்கு மூக்கால் சளி வடிகிறபோது அதை துடைக்ககூட முடியாமல் அப்படியே வாயில் வடிந்து போகும். ஆனால் நாம் எந் நேரமும் கையில் ரிசுவுடன் துடைத்து துப்புரவாக வைப்போம். ஆனால் உண்மையில் மூக்கால் வடியும் அந்த சளி வாய்க்குள் போவதால் அந்தப் பிள்ளைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறதாம். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

நான் பெரிய அனுபவசாலி இல்லை, ஏதோ என் மனதில் எழுந்ததை சொல்லியுள்ளேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உடனடியாக உதவுங்கள் ..

எனக்கு மாதவிடாய் ஆரம்பித்து இரண்டு நாள் ஆகிறது.
ஒரு நாளைக்கு ஐந்து முறை யாவது கட்டியாக போகிறது ..
இது எதனால் ..
டெலிவரி முடிந்து பதினால் மாதம் ஆகிறது ..
எனக்கு எந்த வலி உம் இல்லை ..
எப்பவும் போல் தான் இருக்கிறேன் .. ஏன் இந்த கட்டி வருகிறது ??
தயவு செய்து பதில் போடுங்களேன் .
என் அம்மா சொல்கிறார் டெலிவரி முடிந்து சில மாதம் கழித்து குட இப்படி போகும் என்றும் ..
உங்கள் அனைவரின் பதில் தேவை ..
கட்டியாக வருவதை என்னால் உணர முடிகிறது .. மற்ற படி வலி இல்லை..
மேலும் எப்பவும் போல் தான் பிலோ உள்ளது

இந்த நேரத்தில் பேரிச்சம் சாபிடேன். அது தவற ??

பாலம்மு பயப்பட வேண்டாம். சிலருக்கு இது போல இருக்கும். நீங்கள் அடுத்தமுறை உங்கள் டாக்டரிடம் செல்லும்போது இதைப்பற்றி கேட்கவும். டாக்டர் எதுவும் ப்ரச்சனையில்லை என்று சொல்லிவிட்டால் நமக்கு நிம்மதியாக இருக்குமே அதற்குத்தான். மற்றபடி பேரீச்சைக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்காது என்றே எண்ணுகிறேன். பேரீச்சை இரும்பு சத்து அதிகம் உள்ளதால் அதை சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதானே.

பாலம்மு, பயப்படத் தேவையில்லை, ஆனால் நோமலாக வந்து இப்போ கட்டியாக போகிறபடியால் நீங்கள் எதற்கும் ஒரு டாக்டரை சந்திப்பது நல்லது. குழந்தை பிறந்து போவது வழமை ஆனால் இது 14 மாதங்கள் ஆகிவிட்டபடியால் அதனால் இருக்காது. பேரீச்சம் பழத்தில் இப்படியாகவில்லை. எதற்கும், தொடர்ந்திருந்தால் டாக்டரிடம் காட்டுங்கள்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

thank u athira and vanathi(vinnie)..
sorry pa i m very tired.. so i m to sleep now.thatsy typing in english..
i came to thank u both.. once again thanks a lot

மேலும் சில பதிவுகள்