தேதி: March 11, 2008
பழைய அட்டைகள்(கார்டன் பாக்ஸ்) - carton box
அக்ரிலிக் கலர்/வாட்டர் கலர் - 2 (விரும்பிய வண்ணங்கள்)
பெயிண்டிங் பிரஷ் - 2 (சைஸ் - 0,1)
க்ளு/கம்
வெள்ளை பேப்பர் - 1
பென்சில் - 1
சிறிய டால்ஸ் - 11 அல்லது 13
கத்திரி
முதலில் அட்டையின் ஓரங்கள் சரியாக இருக்கும் படி கட் செய்து கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.

பின் அட்டைகளை கீழ்கண்ட அளவுகளில் கட் செய்து கொள்ளவும்.
கிடைமட்ட வரிசைக்கு - 3.5 CM X 15 CM - 3 PC. இதில் இரண்டு அட்டைகளில் இருபுறமும் 5CM இடைவெளியில் பென்சிலால் கோடு போட்டுக் கொள்ளவும். மற்றொரு அட்டையின் இரு புறமும் 3.75CM என்ற இடைவெளியில் பென்சிலால் நான்கு கோடுகள் போட்டுக்கொள்ளவும். 3.5 CM X 23 CM - 1 PC. இதில் அட்டையின் இரு புறமும் 4 CM, 5CM, 5CM, 5CM, 4CM என்ற இடைவெளியில் பென்சிலால் கோடு போட்டுக் கொள்ளவும்.

இதில் இரண்டு பக்கங்களில் இருந்து 3.8 CM தள்ளி 2 MM X 1.5 CM அளவுள்ள பகுதியை வெட்டி எடுக்கவும். குறுக்கு வரிசைக்கு - 3.5 CM X 15.5 CM - 2 PC இதில் ஒரு பக்கத்தில் மட்டும் 5CM தள்ளி 2 MM X 2.8 CM அளவுள்ள பகுதியை வெட்டி எடுக்கவும். கூரைக்கு - 3.5 CM X 18.3 CM - 2 PC குறுக்கு வரிசைக்கு - 3.5 M X 5 CM - 7 PC

கிடைமட்ட வரிசைக்கு வெட்டிய துண்டுகளில் குறுக்கு வரிசைக்கு வெட்டிய துண்டுகளை படத்தில் காட்டியுள்ளவாறு ஒட்டவைக்கவும். பின் அதை நன்றாக காய விடவும்.

பிறகு ஒட்டிய அட்டைகளை படத்தில் கட்டியவாறு வரிசையாக ஒரு அடுக்கை போல் ஒட்டிக் காய வைக்கவும்.

நன்கு காய்ந்தவுடன் குறுக்கு வரிசைக்கு வெட்டிய அட்டையை ஒட்டி காயவைக்கவும்.

பின்னர் கூரைக்கு வெட்டிய அட்டையையும் ஒட்டி காய வைக்கவும். கூரையில் புகை போக்கியையும் ஒட்டவும். இதன் உள்ளும் புறமும் வண்ணம் தீட்டவும். (கூரையில் விரும்பிய டிசைன்களும் செய்து கொள்ளலாம்)

பின்பக்கம் மறைப்பதற்கு 27.5 CM X 17 CM அளவில் அட்டையை எடுத்து, அதன் மேல் வெள்ளை பேப்பரை ஒட்டவும். அதில் விரும்பிய வண்ணம் தீட்டி காய வைக்கவும்.

வீடு போன்ற பகுதியை வண்ணம் தீட்டிய அட்டையின் மேல் வைத்து வெளிப்புறத்தை பென்சிலால் வரைந்து கொள்ளவும். தேவையற்ற பகுதிகளை வெட்டி எடுத்து விடவும். பின் அப்படியே ஒட்டிவிடவும்.

இப்போது வீடு தயார். இதில் விரும்பிய பொம்மைகளை ஒட்டி அழகுபடுத்தலாம்.

பல விதமான விலங்குகளை ஒட்டி "அனிமல் ஹவுஸ்" என்று கூறி குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம். இதன் செய்முறையை படிக்கும் போது மிகவும் கடினமானதாக தெரியும். ஆனால் செய்தால் மிகவும் சுலபமானதே.

அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்களின் கைத்திறனில் உருவானது இந்த வால் ஹேங்கிங். அறுசுவை நேயர்கள் செய்து பார்த்திட தெளிவானப் படங்களுடன் செய்முறையை எளிதாக விவரித்துள்ளார்.

Comments
how to save -
இதை எப்படி நம் கம்பியூட்டரில் எப்படி save செய்வது. If i copy and paste, i see only boxes not letters.Help pls
ஆஹா
ஆஹா மஹிஸ்ரீ குழந்தைகள் வைத்து விளையாடும் டால் ஹவுஸ் போல இருக்கு. ரொம்ப அழகா செய்து இருக்கீங்க.குழந்தைங்களுக்கு செய்து குடுக்கலாம் போல இருக்கு. இதை செய்து காட்டியதற்கு நன்றி.
well done mahisree.
my daugter has so many small dolls got from egg shaped choclate,if we open the shell of the choclate,each one gives us nice doll.i use to think where to keep those dolls,now i will like this craft and hope my daugter will enjoy.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
hi sandya
உங்க computer-ல tamil font install பண்ணியிருந்தால் தான் tamil letters தெரியும். முதல்ல tamil software அல்லது tamil font install பண்ணுங்க. அப்றம் save பண்ணலாம்.
சூப்பர் ஐடியா
ஆஹா சூப்பர் ஐடியா..என்கிட்டையும் இன் குட்டி டாய்ஸ் இருக்குது..அதை எல்லாம் ஒட்டி விடலாம்
திருமதி மஹிஷ்ரீ?
ஆகா மஹிஸ்ரீ (என்ன உங்கள் கை திறன்)
ஆகா மஹிஸ்ரீ
என்ன உங்கள் கை திறன், கற்பனை சூப்பர்.வரைதலும் ,ஒட்டுதலும்.ஓரளவுக்கு தான் தெரியும்.
இதல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது.
ரொம்ப நல்ல இருக்கு.
super idea
ஜலீலா
Jaleelakamal
Hi Vinnie
Thanks for ur feedback.
Srigeetha Mahendran
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
Hi Asiya Omar and Thalika.....
thanks and all the best........
Srigeetha Mahendran
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
Hi jaleela madam
Thanks for ur valuable words.........Its very easy to do....... Try it and all the best.
Srigeetha Mahendran
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
மஹிஷ்ரீ
மஹிஷ்ரீ திருமதியா?இந்த ஃபோடோவில் ஸ்கூல் போர பொன்னு மாதிரி?
Hi Thalika
Yeah obviously I am married.This photo was taken 2 months back.
Srigeetha Mahendran
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
டியர்
டியர் ஜலீலா மேடம்,
நான் மாவடு ஊறுகாய் போடுவது எப்படி என்ட்ரு செய்முரை அனுப்பவேன்டும். எப்படி அனுப்புவடு என்று எல்லோரைய்ம் கேட்டுவிட்டேன்.பதில் இல்லை. நீங்களவது தெரிவிப்பீர்கள?
நன்றி
very superb
ரொம்ப நல்லா இருக்கு கீதா. செய்யவும் எளிதுன்னு நினைக்கிறேன். உடனே செய்யலாம் போல. தளிகாவின் சந்தேகம் எனக்கும் கீதா. இதுப் போல் நிறைய செய்து அறுசுவைக்கு அனுப்ப எனது வாழ்த்துக்கள்.
Hi Deepa
Thanks a lot.......Sure I will try to send more.If we cut all the sheets at correct dimention its very easy.Try it and give feedback.
Ya.....realy i am married.I dont know what to say....
Srigeetha Mahendran
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
hi vijaya
உங்களுக்கான பக்கத்தில் "குறிப்பு சேர்க்க" என்ற linkஐ click பண்ணி அனுப்பலாம்.
திருமதி. விஜயா அவர்களுக்கு
உங்களுக்கு நான் மின்னஞ்சலிலும் விளக்கம் கொடுத்திருந்தேன். மன்றத்திலும் குறிப்புகள் அனுப்புவது எப்படி என்று பலமுறை குறிப்பிட்டேன். முகப்பு பக்கத்தில் வெளியாகி உள்ள "குறிப்புகள் அனுப்புவது எப்படி?" என்ற பக்கத்தினை தயவுசெய்து பார்வையிடுங்கள் என்றும் பொதுவான வேண்டுகோள் விடுத்தேன். நீங்கள் எல்லா இடங்களிலும் மாவடு ஊறுகாய் செய்முறையை எப்படி அனுப்புவது என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றீர்கள்.
மீண்டும் உங்களுக்கு நேரடியாக இங்கே விளக்கம் கொடுக்கின்றேன்.
குறிப்புகளை வெளியிட கூட்டாஞ்சோறு உறுப்பினராக வேண்டும். கூட்டாஞ்சோறு உறுப்பினரானால் மட்டுமே உங்களுக்கு குறிப்பு சேர்க்க என்ற லிங்க் இடப்பக்கம் வரும். இல்லையென்றால் வராது.
கூட்டாஞ்சோறு உறுப்பினராக நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, உங்களுக்கு தமிழில் பிழையின்றி குறிப்புகளை டைப் செய்ய தெரிந்திருத்தல் வேண்டும். பிழையாக டைப் செய்பவர்களை இனி உறுப்பினராக்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
அடுத்து தொடர்ந்து குறிப்புகள் கொடுக்கவேண்டும். குறிப்புகள் சொந்த குறிப்புகளாக இருக்கவேண்டும். தரமான குறிப்புகளாகவும் இருக்கவேண்டும்.
தமிழில் டைப் செய்வதில் தற்போது தங்களுக்கு சிரமம் இருப்பது தெரிகின்றது. நிறைய எழுத்துப் பிழைகள் வருகின்றன. அவற்றை சரி செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் பெயரை கூட்டாஞ்சோறு பகுதியில் இணைக்கின்றேன். எழுத்துப்பிழைகளை சரி செய்ய முதலில் மன்றத்தில் நிறைய பதிவுகள் போட்டு பழகிக் கொள்ளுங்கள். உங்களின் தவறுகள் உங்களுக்கே தெரியவரும். அவற்றை சரி செய்துகொள்ளுதலும் எளிது.
இப்போது என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். நீங்கள் மாவடு ஊறுகாய் குறிப்பு ஒன்று மட்டும்தான் அனுப்ப விரும்புகின்றீரா? அப்படியெனில் அந்த குறிப்பினை கீழே தொடர்புக்கு என்று உள்ள பக்கத்தின் வாயிலாக அனுப்பி வைக்கவும். அதை நான் உங்கள் பெயரிட்டு வெளியிட்டு விடுகின்றேன்.
ஆனால், தொடர்ந்து நீங்கள் குறிப்புகள் கொடுக்க விரும்பினால், கூட்டாஞ்சோறு உறுப்பினராகி குறிப்புகளை நீங்களே நேரடியாக கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு முதலில் நீங்கள் தமிழில் பிழையின்றி டைப் செய்ய வேண்டும். பிறகு மாதிரி குறிப்பு ஒன்றினை தொடர்புக்கு பக்கம் வாயிலாக எங்களுக்கு அனுப்ப வேண்டும். அதை பரிசோதித்த பின்னர் உங்கள் பெயர் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைக்கப்படும்.
இந்த விளக்கம் போதுமானது என்று நம்புகின்றேன். மேலும் சந்தேகம் என்றால் இங்கே கேள்வி எழுப்ப வேண்டாம். <a href="forum/no/3285" >குறிப்புகள் அனுப்புவது எப்படி </a> என்ற இந்த மன்ற இழையில் எழுப்பவும்.
ஹாய் mahisri
இந்த showcase செய்து பார்த்துட்டேன். சூப்பரா வந்துருக்கு output நானும் என்னோட ஐடியா சில use பண்ணிகிட்டேன். இப்போ எங்க வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கு. பார்க்கிறவங்க எல்லாம் நல்ல ஐடியான்னு சொல்றாங்க. எல்லார்கிட்டயும் என்னோட ஐடியா இல்ல என் ப்ரண்ட் கீதா ஐடியான்னு சொல்லிகிட்டு இருக்கேன். நன்றி கீதா.
அன்புள்ள நந்தினி
இந்த டால்ஸ் ஹவுஸ்-ஐ செய்து பார்த்து சொன்னதற்கு மிக்க நன்றி. நீங்கள் செய்த ஷோ கேஸில் உங்களுடைய ஐடியாவும் சேர்ந்துள்ளதால்,அதில் உங்களுடைய பங்களிப்பும் உள்ளது.
நன்றி,கீதா
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
ஹாய் மஹிஸ்ரீ.......
நலமா?
உங்களுடைய வால்ஹேங்கிங் செய்முறை சூப்பர். நீங்கள் yokohama வில் இருப்பதை தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில் நான் japan ல் chiba ல் இருக்கிறேன்.
ஹாய் Rikha..........
நன்றி........
நான் நன்றாக இருக்கிறேன்.நீங்க எப்படி இருக்கீங்க? நீங்கள் ஜப்பானில் இருப்பது தெரிந்ததும் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் எவ்வளவு நாட்களாக ஜப்பனில் இருக்கிறீர்கள்?
கீதா
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
Hi Geetha
நான் நலம். இரண்டு வருடமாக இங்கே இருக்கிறேன். சொந்த ஊர் இலங்கை. நீங்க எவ்வளவு காலமாக இருக்கிறீங்க? உங்களது சொந்த ஊர் எது?
ஹாய் Rikha..........
நான் இங்கு ஒன்றரை வருடமாக இருக்கிறேன். எனது தாய் நாடு இந்தியா. சொந்த ஊர் சேலம்,தமிழ்நாடு.
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
ஹாய் GEETHA
எப்படி இருக்கிறீங்க? நான் உங்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாமா? உங்களுக்கு திருமணமாகி எத்தனை வருடங்கள்? குழந்தை இருக்கிறதா? விரும்பினால் பதில் தரலாம்.
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta