அட்மினுக்கு !!!! கூட்டஞ்சோறு PDF!!

எனக்கு கூட்டஞ்சோறில் உள்ள குறிப்புகளை PDF ஆக செய்ய முடியுமா!!! முடியும் என்றால் எப்படி?இதன் மூலம் எனக்கு பிடித்த / நான் செய்து பரிசோதித்த உணவு குறிப்புகளை ==> என் பக்கதில் SAVE செய்து வைத்து கொள்ள முடியுமா?

இதனால் இன்டெக்ஸ் ப்ரச்சனை வருமா?

I really feel that if you do like this , Members can see what recipes they tried without having to look for the Recipes over and again.

நன்றி!!!

1. குறிப்புகளை PDF file ஆக நீங்கள்தான் மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்புகள் unicode தரத்தில் உள்ளன. அவற்றை காப்பி செய்து PDF file ஆக செய்து கொள்ளலாம். நான் இதுவரை முயன்றது இல்லை. இருப்பினும் அதற்கான வசதி உள்ளது என்பது தெரியும். Google ல் utf8 pdf creation என்று எதாவது டைப் செய்து தேடுதல் நடத்தினால் வழிமுறை கிட்டலாம்.

2. பார்வையிட்ட குறிப்புகள் என்பதை அடையாளம் இட்டுக்காட்டும் வசதி கொண்டு வருதல் சற்று கடினமான செயல். ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனியாக ஒரு index file or record maintain செய்யவேண்டும். பிரிவுகள் பக்கங்களை திறக்கும்போது குறிப்பிட்ட பயனீட்டாளரின் index file ஐ பரிசோதித்து அதன்பிறகு அவர் ஏற்கனவே பார்வையிட்ட குறிப்புகளை அடையாளம் இட்டுக் காட்ட வேண்டும்.

இது இயலாத காரியம் அல்ல. Database server load ஐ அதிகரிக்கும் காரியம். இந்த வசதி மிகவும் அத்தியாவசியமானதா என்பது சந்தேகமே. முயற்சி செய்த குறிப்புகளின் பெயர்களை பார்த்தாலே நமக்கு தெரிந்துவிடும்.

அதற்கு பதிலாக My favorites என்பது போன்ற ஒரு பக்கம் கொண்டு வரலாம். அதில் உங்களுக்கு பிடித்த, அல்லது நீங்கள் முயற்சி செய்த குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுமாறு செய்யலாம். இதன்மூலம் உங்களுக்கு தேவையான குறிப்புகளை மீண்டும் தேடும்போது அந்த பக்கத்திற்கு சென்று உடனடியாக கண்டுகொள்ளலாம். இதை கொண்டு வரும் திட்டம் இருக்கின்றது.

இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு அறுசுவையை முற்றிலும் மாற்றியமைக்க உள்ளோம். அப்போது புதிய பொலிவுடன் ஏராளமான புதுமைகளுடன் அறுசுவை உங்களுக்கு கிடைக்கும்.

Its very nice to hear this good idea.We r expecting this changes soon.And my one request pls dont miss even one recipe or any other things in the new server.Because each nd every receipe is a brick of arusuvai house built by arusuvai friends......

Thanks a lot.......
Srigeetha Mahendran

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

சகோதரி அவர்களுக்கு,

அறுசுவை முழுவதும் மாற்றியமைக்கபட உள்ளதால், சற்று கால அவகாசம் தேவை. அடுத்து குறிப்புகள் தவறாமல் இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள். சர்வர் மாற்றம் நடக்கும்போது குறிப்புகள் எதுவும் தவறாது. ஆனால், புதிய தளத்தில் நாங்கள் செய்ய உள்ள முக்கிய மாற்றமே, குறிப்புகளை வடிகட்டுதல்தான் :-)

தேவையற்ற குறிப்புகள், ஏமாற்று குறிப்புகள், மீண்டும் மீண்டும் வெளியான குறிப்புகள் என்று ஏராளமாக கலந்து விட்டன. அறுசுவை தளத்தின் தரம் உயர இவ்வகை குறிப்புகளை கண்டிப்பாக நீக்கியாக வேண்டும். குறிப்புகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யவேண்டும். குறிப்புகளுக்கு நியூட்ரீசியன் வேல்யூஸ் சேர்க்க வேண்டும். நிறைய படங்கள் சேர்க்க வேண்டும். அளவுகள் திருத்தம் செய்ய வேண்டும்.

சில குறிப்புகளில் இஷ்டத்திற்கு அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் உண்மையில் செய்து பார்த்து கொடுக்கப்பட்ட குறிப்புகள்தானா என்பது சந்தேகம். எண்ணிக்கைக்காக காய்களை மட்டும் மாற்றி, ஒரே செய்முறையை பல குறிப்புகளில் கொடுக்கப்பட்டவையும் நீக்கப்படும். இதன்மூலம் அறுசுவையில் உள்ள மொத்த குறிப்புகளின் எண்ணிக்கை குறையலாம். ஆனால், இருக்கும் குறிப்புகள் அனைத்தும் தரமான குறிப்புகள் என்ற நற்பெயர் கிட்டும். இதுதான் முக்கியம்.

படங்களுடன் கூடிய குறிப்புகள் அதிகம் இடம்பெறும். ஒரு கட்டத்திற்கு பிறகு சாதாரண குறிப்புகள் சேர்க்கை குறைக்கப்படும். செய்முறையின் வீடியோ படங்கள் வெளியிடுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். முழுநீள படமாக இல்லாவிடினும், சிறிய அளவிலான flash presentation ஆக கொடுக்கவுள்ளோம்.

அறுசுவை மற்ற மொழிகளிலும் வர இருப்பதால், பிறமாநிலத்து குறிப்புகள் நிறைய தமிழில் மொழி பெயர்க்கப்படும். அதுபோல் தமிழ் குறிப்புகளும் பிற மொழியில் வெளியிடப்படும்.

இப்போதே நிறைய வாக்குறுதிகள் கொடுக்க விருப்பம் இல்லை. ஒவ்வொன்றாக செய்து முடித்து தெரிவிக்கின்றேன். திட்டமிட்டுள்ள எல்லாவற்றையும் செய்து முடிக்க சில மாதங்கள் ஆகும். பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.

அதைவிடுங்கள், தமிழில் மிக அழகாக குறிப்புகள் கொடுக்கின்றீர்கள். ஆனால் மன்றத்தில் மட்டும் ஆங்கிலத்தில் பதிவுகள் கொடுக்கின்றீர்களே?! என்ன காரணம்? அறுசுவையில் ஏற்றுக் கொள்ள முடியாத மற்றொரு விசயம், தமிழில் நன்கு டைப் செய்ய தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் பதிவுகள் கொடுப்பது. தயவுசெய்து தமிழில் டைப் செய்யவும். உங்களிடம் ஆங்கிலத்தில் யாரேனும் கேள்விகள் எழுப்பினால்கூட நீங்கள் தமிழிலேயே பதில் கொடுக்கவும். இங்கு எல்லோருக்கும் தமிழ் தெரியும்.

உங்கள் பதிலுக்கு நன்றி.தேவையற்ற மற்றும் மீண்டும் மீண்டும் வரும் குறிப்புகளை நீக்குவது நல்ல விஷயம் தான்.இதனால் சர்வரின் வேகம் கூட அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

அடுத்து படங்களுடன் அல்லது வீடியோ படங்களுடன் குறிப்பு வெளியிடுவது மிகவும் நல்லது.இதனால் பர்வையாளர்களுக்கும் அதை பார்க்கும் போது செய்து பார்க்க வெண்டும் என்று தோன்றும்.மேலும் குறிப்புகளுடன் நியூட்ரீஷியன் வேல்யூஸ் கொடுப்பதால் டயட்டில் உள்ளவர்களுக்குக் கூட உதவியாக இருக்கும்.

நீங்கள் அறுசுவையில் செய்யவிருக்கும் மாற்றங்கள் எல்லாம் மிகவும் நன்று.இது அறுசுவை உறுப்பினர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று நினைக்கிறேன்.உங்களது அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற அருசுவை தோழிகளின் சார்பில் எனது வாழ்த்துக்கள்.

உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.இனி வரும் காலங்களில் நிச்சயமாக மன்றத்திலும் முழுவதும் தமிழில் டைப் செய்ய முயற்சிக்கிறேன்.அதன் முதற்கட்டம்தான் இந்த பதிவு.

ஸ்ரீகீதா மகேந்திரன்

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

அறுசுவை கோப்புகளை Printscreen command மூலமாக கம்புயுடரில் (as Paint file) Save செய்திடலாம்.கொஞ்சம் Editing செய்ய வேன்டியிருக்கும்.இது சுலபமான வழியாய் இருக்குமென நினைக்கிரேன்.

குலசை சுல்தான் அவர்களே!!!! இந்த விஷ்யத்தில் நீஙகள் கேட்க வேண்டியது.. அட்மின் அவர்களிடம். அருசுவைகாக நீங்கள் ஒரு சமுதாய பணி போல செய்ய அட்மினிடம் கேளுங்கள். உஙகள் ஆர்வத்திற்கு தலை வணங்குகிறேன்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஐயா,

இது குறித்து தங்களுக்கு நான் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பார்வையிடவும்.

மேலும் சில பதிவுகள்