தால் வித் ஆப்பிள் சூப் (குழந்தைகளுக்கு)

தேதி: March 12, 2008

பரிமாறும் அளவு: நான்கு குழந்தைகளுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

துவரம் பருப்பு - ஐம்பது கிராம்
ஆப்பிள் - ஒன்று
வெங்காயம் - இரண்டு
முழு மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
பட்டர் - ஒரு தேக்கரண்டி


 

துவரம்பருப்பை களைந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஆப்பிள், வெங்காயத்தை பொடியாக கட் பண்ணவும்.
குக்கரில் பட்டரை உருக்கி அதில் வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கவும்.
பிறகு முழு மிளகு, பருப்பு, ஆப்பிள், உப்பு போட்டு நன்கு வதக்கி ஐந்து கப் தண்ணீர் ஊற்றி தீயை மிதமாக வைத்து மூன்று விசில் வந்ததும் தீயை சிம்மில் வைத்து பத்து நிமிடம் வைத்திருக்கவும்.
பிறகு நன்கு மசித்து வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.


ஆறு மாத குழந்தைகளில் இருந்து இந்த சூப்பை கொடுக்கலாம். தெம்பில்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு பருப்பும், ஆப்பிளும் நல்ல எனர்ஜியை தரும்.
இதில் பெரியவர்களுக்கு என்றால் கொஞ்சமாக இஞ்சி பூண்டு, வொயிட் சாஸ் சேர்த்து செய்யவும், முழு மிளகு போடாமல் தேவைக்கு பெப்பர் பொடி போட்டு கொள்ளவும்

மேலும் சில குறிப்புகள்