திருக்குறள் ஓரு புதிய கண்ணோட்டம்!! குறள் அமுதம்...

திருகுறள்.. அனைவருக்கும் தெரியும். ஆனால் ... இந்த கால நடைமுறைக்கு ஏற்றவாறு எப்படி செயல் படுத்துவது.
உ.தா.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.

நடைமுறை: காலையில் எழுந்து பாடங்கள் படித்தல்.

உஙகளுடைய எண்ணம் என்ன? இந்த நாகரிக உலகில் எப்படி நடைமுறையில் கொண்டு வருவது?
<!--break-->

எனக்கு இது சரியாக புரியவில்லை..ஆனால் புரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

தளிகா.. எல்லோரும் திருக்குறளை பாராட்டுகிறார்கள். Not many really know the practical application. I am wondering if anyoen in the forum will give a new insight in to this age old blessing

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா,
உங்கள் திருக்குறள் ஆர்வம் கண்டு மிக்க மகிழ்ச்சி.அனைத்து குறள்களுமே நடைமுறைக்கு சாத்தியமானதுதான்.நீங்கள் குறிப்பிட்டுள்ள குறள்"செவிக்குணவில்லாதபோது" "கேள்வி" என்ற அதிகாரத்தில் வருகிறது.
இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் யாவுமே செவிச்செல்வம் பற்றியது.நாம் பிறரிடம் கேட்டறிந்து கொள்வது.நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் நம் நாட்டு தேசிய தலைவர்கள் பற்றி கதை போல் சொல்லிப் பாருங்கள்,அவர்கள் உணவை மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.செவிக்குணவில்லாத போது உண்ணலாம் என்று,"செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்"

என்று செவிச்செல்வத்தை சிறப்பித்துக் கூறுகிறார்.
ஏதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.நான் உங்களுடைய புதிய தோழி.

அன்புடன்
நித்திலா

அன்புடன்
நித்திலா

”நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம்” என்று நம்மில் பலரும் கூறியிருப்போம்.. அப்படி ஸ்வாரஸ்யமான ஒருவருக்குத் தெரியாத விஷயத்தைத் பற்றி மற்றவர் கூறி பேசிக் கொண்டு இருந்தால் பசி கூட தெரியாது இல்லையா அதனால் தான் வள்ளுவர் வயிறுப் பசியை விட கேட்கும் பசி அதிகம் என்று கூறினாறோ என்னவோ..

உங்கள் விளக்கம் அருமை.

Don't Worry Be Happy.

இலா அவர் கூறிய குறளுக்கு விளக்கம் கேட்கவில்லை, அதே மாதிரி பல குறள்கள் மூலம் திருவள்ளுவர் சொன்ன கருத்துக்களை எப்படி நடைமுறை படுத்துவது என்று கேட்கிறார் என நினைக்கிறேன்.

அன்புடன்
பவித்ரா

ஆமாம் இருவருமே நடைமுறைக்கு ஒத்துவரும் என்பது மாதிரிதான் கருத்து சொல்லியிருக்காங்க. அவங்க சொன்ன விளக்கமும் ரொம்ப நல்லாயிருக்கு;)

Don't Worry Be Happy.

நானே நாளை முதல் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன்..... ஆனா திருக்குறள் மட்டும் இல்ல.... நன்றினை, ஆத்திச்சூடி, இன்னா, இனியவை நாற்பது போன்ற நல்ல நூலகளை வைத்து ஆரம்பிக்கலாம்னு இருந்தேன்... ஆனா அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டீங்களா? ஹாட்ஸ் ஆப் டு யு... ரொம்ப நல்ல விஷ்யம்பா..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

பவித்ரா,
திருக்குறளில் எந்த அதிகாரம்,அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் என தொகுத்து பார்த்து பொருள் கொள்ளலாம் என்றுதான் அவர் உதாரணமாக சொன்ன குறளுக்கு விளக்கம் சொன்னேன்.தவறு என்றால் மன்னிக்கவும்.

அன்புடன்
நித்திலா

காலைல வணக்கங்க. என்னைக்காச்சும் நேரம் போகலன்னா, புத்தகம் படிக்கிறது வழக்கம். படிச்ச புத்தகத்தைதான். சும்மா நினைவுபடுத்துற மாதிரி.

அதனால மறுபடியும் நம்ம முப்பாட்டன் எழுதின திருக்குறள் தான். அறத்துப்பால், பொருட்பால் எல்லாம் பள்ளி பருவத்தில் சொல்லி கொடுத்ததுனால, இன்பத்துப் பால் பக்கம் போனேன்.

படிக்க ஆரம்பிச்ச பின்புதான் ஏன் இதெல்லாம் பள்ளி பருவத்தில் படிக்க வைக்கலன்னு தெரிஞ்சது. நம்ம தாத்தா பயங்கர லவ்ஸ் பார்ட்டி போல. ஒரே லவ் கவிதையாய் கொட்டி இருக்கிறார். அவரோட கவித்திறனுக்கு சான்றே இந்த இன்பம் பற்றிய கவிதைகள் தான். ஆனால் கொஞ்சம் நெடுரலும் கூட (பெண்களுக்கு, ஏன்னா அந்த காலத்தில பெண்கள எப்படி பாத்திருக்காங்கன்னும் கவிதைல தெரிது).

போகட்டும், நான் சொல்ல வந்தது, குறள்: 1312 பத்தி

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

விளக்கம் என்னன்னா, தலைவன், தலைவி இரண்டு பேரும் சண்ட போட்டு இருக்காங்க, பேசிக்கல, அவ்வளவு பெரிய சண்டை. ஆனா நம்ம வழக்கம் (2000 வருஷம் முன்னாடி) என்னன்னா யாராவது தும்பினால், நீ நல்லா இருக்கணும்னு (நீடுழி வாழ்) சொல்லணும். அதனால சண்டை போட்டாலும் தலைவி ' நல்லா இருன்னு' சொல்லுவான்னு தலைவன் அறிந்து, தும்முராராம்.

பாருங்களேன், சமாதானம் ஆறதுக்கு ஒரு தும்மல் போதுமாமே. இப்ப இதே வழக்கம் நம்மகிட்ட இருக்கா. (தும்மல்ல சமாதானம் ஆறது இல்ல, தும்மினா 'நல்லா இரு'ன்னு சொல்லுறது)

இந்த தும்மல் பத்தி வேற எங்கயாவது எழுதி இருக்காரான்னு பாத்தா 1203 வது குறள்ல எழுதி இருக்கார். என்னன்னா,

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

விளக்கம்: தலைவி நினைக்கிறார், எனக்கு தும்மல் வர்ற மாதிரி வந்து, வராம போய்டுது அப்படின்னா, அவர் என்ன நினைக்கிற மாதிரி இருந்து, நினைக்காம இருக்கிறார்.

அட, தும்மல் வந்தா 'யாரோ உன்ன நினைக்கிறாங்க' அப்படின்னு இப்ப சொல்லலைங்க, 2000 வருசத்துக்கும் மேல சொல்லிகிட்டே இருக்கோம். யாருக்காச்சும் ஏன்னு? தெரிஞ்சா சொல்லுங்களேன். ப்ளீஸ். ப்ளீஸ். ப்ளீஸ்.

உன்னை போல் பிறரை நேசி.

மேலும் சில பதிவுகள்