பப்ஸ் சீட்

ஹாய்
பப்ஸ் சீட் அமெரிக்காவில் எந்த கடைகளில் கிடைக்கிறது,எந்த செக்ஸனில் கிடைக்கும் என்பதயும் கூறவும், நன்றி.
அன்புடன்
சுதா

சுதா
எல்லா டெபாட்மெண்ட்டல் ஸ்டோர்ஸிலும் இருக்கும் பேஸ்ட்ரி அயிட்டங்களுடன் போய் பாருங்கள்.

அதை ஈசியான முறையில் எப்படி செய்வது என்று நான் சொல்லி கொடுக்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

பஃப்ஸ் ஷீட்டையும் செய்வீங்களா ஜலீலாக்கா...அம்மாடியோவ் என்ன கைய்யோ உங்க கை..அப்ப அதை விட உங்கம்மாவுக்கு என்ன சமையல் அனுபவம் இருக்கனும்..அப்பப்பா

ஜலீலா1....பப்ஸ் எப்படி செய்வது என்றே சொல்லிவிடுங்களேன். எப்படி இருக்கீங்க? காலை உணவுக்கும், லஞ்ச்பாக்ஸ்-க்கும் இன்னும் மெனு எழுதவில்லையா ஜலீலா.... நான்வெஜ்ராணியாச்சே வித்தியாசமாக ஏதாவது எழுதுவீர்களே.
தளிகா!...... குழந்தை எப்படி இருக்கிறாள்? உங்ககிட்டயும் பேசி ரொம்ப நாளாச்சி. நலமா? நீங்களும் எழுதுங்க தளிகா.

ஹாய் மாலதிக்கா..என்ன எழுத சொல்ரீங்க?மெனுவா..
இன்னைக்கி காலைல சாசேஜ் சேன்ட்விச்,மதியம் ப்ராகோலி சாலட்/மீதமான ஜலீலாக்கா'ஸ் ஃப்ரயிட் ரைஸ்...இரவு பழம்பொரி/டாபியோகா பாயில்D &மிளகாய் சட்னி/சாதம் .பின்ன சாதத்துக்கு என்ன செய்ரதுன்னு யோசிச்சு மண்டை காஞ்ச்சுட்டிருக்கேன்.
நீங்க எங்க போயிட்டீங்க..பேரனுடன் பொழுது போச்சா
இனி லன்ச் பாக்ஸில் பிறகு எழுதறேன்

இல்ல தளிகா... நான் எழுத சொன்னது மனோகரி ஆரம்பித்துவைத்தாங்களே குழந்தைகளின் காலை உணவு என்ற தலைப்பை....அதில் எழுத சொன்னேன். லஞ்ச்பாக்ஸ்-ம் எழுதுங்க. உங்களுடைய மெனுவை படித்து நாக்கு சுளுக்கி கொண்டது. ரொட்டீன் மெனுவே வித்தியாசமாக இருக்கே, அதனால்தான் உங்களை நான் சொன்ன தலைப்புகளிலும் எழுத சொன்னேன். குழந்தைக்கு லஞ்ச்பாக்ஸ் அனுப்பிய அனுபவம் இன்னும் வரவில்லை தளிகாவுக்கு அப்படித்தானே?... அதெல்லாம் அனுபவம் இல்லாவிட்டாலும் நீங்க அசத்திடுவீங்கன்னு எனக்கு தெரியும்.

சுதா அது Pastry Sheets என்ற பெயரில் எல்லா க்ரோஸரி ஸ்டோரிலும் இருக்கும். அது Frozen foods செக்க்ஷனில் இருக்கும், குறிப்பாக frozen cake,frozen pie crust இருக்கும் இடத்தில் இருக்கும் பாருங்கள்.

பெப்பரிட்ஜ் பார்ம் ( Pepperidge Farm) என்ற ப்ராண்ட் பிரபலம் ... நமது இந்தியன் கடைகளில் கூட கிடைக்கிறது.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஜலிலா அக்கா,
நல்லாயிருக்கீங்களா? உங்கள் பிள்ளைகள் நலமா? உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி. ஈசியான முறையில் எப்படி செய்வது என்று சொல்லி கொடுங்கள்.
அன்புடன்
சுதா

ஹாய் வின்னி அன்ட் இலவீரா மேடம்,
அடுத்தமுறை கடைக்குபோகும்போது பார்க்கிறேன்,பதிலளித்ததற்க்கு நன்றி.................
அன்புடன்
சுதா

அன்புள்ள சுதா

பப்ஸுகு விரிவான விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கு ஆகையால் தான் உடனே தர முடியல நேற்று வீட்டில் பதில் போட முயற்சித்தேன் எரர் தான் நெட்டு ஸ்லோ,
இப்பதான் வந்தேன் இன்னைகுள் பதில் அளித்து விட்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்