த்ரெட் புதுசு [ அஞ்சலி ]

த்ரெட் புதுசு

நான் அஞ்சலி உங்கள் தோழி [காலை வணக்கம்.]

தோழிகளே நலமா? வாங்க பேசலாம்.

அட வாங்க பா சிரிக்கலாம்

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
ஹா ஹா ஹா ஹா ஹூ
ஹூஹூ ஹூ ஹே ஹே ஹே கெ
மனசுக்கு ரொம்ப ஜாலியா சந்தோசமா பேச ஒரு வழி பண்ணனுன அறுசுவைக்கு ஒரு பெரிய "ஓ"போடு.அறுசுவை நீங்க எங்கயோ போய்டீங்க. அறுசுவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா ? எல்லாரும் பிஸியா ?கொஞ்சம் ஃப்ரீ ஆன பின்னாடி வாங்க பேசலாம். எல்லாரும் வரும் வரைக்கு நாம பேசலாம்.என்ன யாரையுமே காணோ? எல்லாரும் என்ன மறந்துட்டாங்கலா?என் குருப்பில் நியூஜெர்சிanu, டாலஸ்ல Rajini,thalika, நந்தினி,spriya,viji

ஜெயஸ்ரீ,நியூயார்க்ammu இருக்காங்க, நீங்களும் சேர்ந்துக்கோங்க குருப்பில்.ஒரே ஆட்டம்,பாட்டாம் சந்தோஷம் தான் ஒகே. ஆன்லைனில் வந்தால் சந்தோஷம்.

ஜலீலா
மறுபடியும் ஒரு பதிவு போட்டுவிட்டதான்
எல்லோரும் தொடர்வார்கள் என்று ஆலோசனை சொன்னதற்க்கு நன்றி![சும்மா சொன்னேங்களா?நக்கலுக்கு சொன்னேங்களா? தெரியாது!] எதுவானாலும் நன்மைக்கே!என்றுநினைக்கிறேன். அதிரா என்னைய் ரொம்ப comment அடிக்கிறேங்க!நல்லாவே இல்ல ஆமா.சொல்லிட்டேன் கஸ்சுக்கு மீற்றி போயிருக்கிறீங்க. நான் பார்க்கமாட்டேன் என்ற தைரியம்தான.[உங்கள கிண்டல் பண்ணுனேன்,உங்கள உண்மையாக கஷ்டபடுத்தி இருந்தா மன்னிக்கவும்] அனுமார் வால் போல இந்த த்ரெட் ரொம்ப பெருசா போய்கிட்டே இருக்குமென்னு நினைகிறேன்! [சரிதானே Nandhini.] மகனுடைய பிறந்தாள் [16தேதி]முன்னிட்டு டூர் போய்ட்டு வந்து பேசலாம் நினைகிறேன்!நாளை டூர்க்கு போகிறேன். நான் வரும் வரைக்கும் நீங்க பேசுங்க சரிதானே!bye bye மீண்டும் சந்திக்கலாம் நன்றி.

,

அதிரா அந்த த்ரெட்டிலிருந்து இங்கு வந்துட்டேன். ஏன் உங்களுக்கும் தூக்கம் வரவில்லையா:-) (உங்களுக்கு இப்ப இரவுதானே)

வினி, இப்ப எங்களுக்கு இரவு 7.30 தானே . இன்று வெள்ளிக்கிழமை எப்படியும் 11 மணிக்கு மேல்தான் படுப்போம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஓ அப்படியா அதிரா. உங்களுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு. அப்ப உங்களுக்கு இரவு சாப்பாட்டு வேலையெல்லாம் இருக்கும். போய் பாருங்க.

இல்ல வினி, வளமையாகவே 7 மணிக்குள் எல்லாம் முடிந்துவிடும். அதன்பின் ரீ மட்டும் குடிப்பது வழக்கம். அதுவும் என் ஹஸ்தான் நைற் ரீ ஊத்துவது. அப்படி ஒரு ஒப்பந்தம். அதுமட்டும்தான் அவருக்கு தெரியும். இன்று அவருக்கு மீற்றிங் 9 மணிக்குத்தான் வருவார். அதனால்தான் இந்த அரட்டை. அங்கு மதிய உணவெல்லாம் முடிந்ததா? இந்த தளிகாவை பாருங்கள்... நித்திரையே போச்சாம்... என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நீங்க தூங்கப் போயிருப்பிங்கன்னு நினைக்கிறேன். பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்ததால் பாதியிலேயே போய் விட்டேன். அந்த த்ரெட்டில் உங்களுக்கும் தளிகாவிற்கும் நடந்த உரையாடல்களை படித்து விட்டு சிரித்துக் கொண்டு இருக்கிறேன். மற்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம்.

எங்க போய்ட்டீங்க? என்ன சொல்லிக்காம போய்ட்டீங்க.இருங்க வாட்ச் உமந்த்ட சொல்லி பனிஷ்மென்ட் வாங்கி தர்றேன். டூர் போறிங்களா ஒ.கே போய்ட்டு வாங்க enjoy and take care.

ஹாய் ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க 3 நாள் அறுசுவைக்கு நான் லீவு. திரும்ப வந்துட்டேன் continue பண்ணலாமா?
felcia madam உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.(18.3.2008) எப்படி போச்சு பிறந்த நாள் என்ன ஸ்பெஷல் சொல்லுங்க சொல்லுங்க

நந்தினி எப்படி இருக்கீங்க. உங்க வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க. என்னுடைய பிறந்த நாளை கவனித்து வாழ்த்தியதற்கு மிக நன்றி. உங்கள் favorite பால் பாயசம் செய்து கொண்டாடினேன். மூன்று நாள் என்ன ஆச்சு?

god is my sheperd

நான் நல்லா இருக்கேன். வீட்டில் எல்லாரும் நலம். உங்களுக்கு பசங்க இருக்காங்களா? மூன்று நாள் ஊருக்கு போய்ட்டேன் அறுசுவையில் இடம் பெறல அப்பறம் வந்து பார்த்த உங்க பிறந்த நாள் நேற்று. அதான் லேட்டாவது வாழ்த்தலாம்னு வாழ்த்துனேன். ஔஐய் எப்படி உங்களுக்கு தெரியும் எனக்கு பால் பாயாசம் பிடிக்கனும்னு. என்ன கிப்ட் பெல்ஸியா.(பெயர் சொல்லி கூப்பிடலாம்ல)

அஞ்சலி,வினி,அதிரா,பெல்ஜியா,நந்தினி எல்லோருக்கும் ஒரு ஒ ஒ

பெல்ஜியாவிற்கு என் மணமார்ர்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், லேட்டா வாழ்த்தினேனோ, ஒகே வாழ்த்து எப்ப வாழ்த்தினாலும் வாழ்த்து தான்
இல்லையா//
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்