தேதி: March 15, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மீன் - 400 கிராம்
முட்டை - 1
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
மீன் முள் இல்லாதது அல்லது முள் நீக்கி 1 அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்துள்ள மீன் துண்டங்களுடன் உப்பு, மஞ்சள்தூள், அடித்த முட்டை ஆகியவற்றை சேர்த்து கலக்கி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஊற வைத்த மீன் துண்டங்களைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.

பிறகு அதனுடன் மிளகாய்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

பாத்திரத்தை மூடி வைத்து சுமார் 5 நிமிடங்கள் வேக விடவும். சாதாரணமாக மீன் சீக்கிரமாக வெந்து விடும்.

இறுதியில் மிளகுத்தூள் தூவி ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.

இப்போது சுவையான ஆயில் பிஃரீ பிஃஷ் பிஃரை ரெடி. இதற்கு 1 தேக்கரண்டி எண்ணெயே போதுமானது.

அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்களின் தயாரிப்பு இந்த எண்ணெய் குறைவான மீன் வறுவல்.

Comments
ஹாய் மஹிஸ்ரீ,
உஙகள் விளக்கப்படங்கள் ஈசியா எல்லோருக்கும் புரிகிறது..
வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
hai asia.........
Thanks a lot.......
Srigeetha Mahendran
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
Hi Mahisri
உங்கள் மீன் ப்ரை மிக அருமை.மிக்க நன்றி.என் கணவருக்கு மிகவும் பிடித்தது.வாழ்த்துக்கள்
Hi Mahisri
உங்கள் மீன் ப்ரை மிக அருமை.மிக்க நன்றி.என் கணவருக்கு மிகவும் பிடித்தது.வாழ்த்துக்கள்
very nice and simple..tastes good. Thx.
Hello Geet,
I just did this today. Simple and easy. Dry and Tastes good. Thx a lot frnd.
But I didn't get the colour as in the pic.. :( May be cheff's secret.
Shri.
ஆயில் பிஃரீ பிஃஷ் பிஃரை
Assalamu alaikum varah.....
Masha allah... It looks nice n simple thing to do.. ( for bachelors like me)
In Shaa Allah plan to do for our dinner with rice...
Thank you Sister....